»   »  சன் டிவியில் முதல் முறையாக டப்பிங் சீரியல்.. தமிழ் நாடக கலைஞர்கள் நிலை என்னவாகும்?

சன் டிவியில் முதல் முறையாக டப்பிங் சீரியல்.. தமிழ் நாடக கலைஞர்கள் நிலை என்னவாகும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இதுவரை தமிழில் சீரியர்களை தயாரித்து, பிற சேனல்களுக்கு டப் ஃபைட் கொடுத்து வந்த சன் டிவியும், இப்போது டப்பிங் சீரியல்களை நம்ப தொடங்கியுள்ளது. அதன் ஆரம்ப புள்ளிதான் நாகினி தொடர் என்கிறார்கள் சின்னத்திரை புள்ளிகள்.

இந்த வாரம் திங்கள்கிழமை முதல், தினமும் இரவு 10 மணி முதல் 10.30 மணிவரை நாகினி என்ற புதிய நெடுந்தொடரை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளது சன் டிவி.

ஹிந்தி மொழியில் உருவான இந்த சீரியலை சன் டிவி டப் செய்து ஒளிபரப்புகிறது. இதிகாச தொடர்களான மகாபாரதம், ராமாயணம் போன்றவற்றைதான் இதுவரை சன் டிவி ஹிந்தியில் இருந்து டப் செய்திருந்தது. தற்போது ஒளிபரப்பாகிவரும், ஜெய் ஹனுமான் தொடரும் அவ்வாரே.

முதல் முறை

முதல் முறை

ஆனால், முதல்முறையாக, நாகினி என்ற தினமும் ஒளிபரப்பாகும் நெடுந் தொடரை ஹிந்தியில் இருந்து டப் செய்துள்ளது சன் டிவி.

வரவேற்க காரணம்

வரவேற்க காரணம்

பழகாத முகங்கள், இடங்கள் போன்றவை ஹிந்தி டப்பிங் சீரியல்களை நோக்கி ரசிகர்களை இழுப்பதுதான், டப்பிங் நாடகங்கள் மீதான ரசிகர்களின் மோகத்திற்கு காரணம். விஜய் டிவி, ஜி டிவி போன்றவை இதுபோன்ற சீரியல்களில் கொடி கட்டி பறப்பவை.

விஜய் டிவி டெக்னிக்

விஜய் டிவி டெக்னிக்

விஜய் டிவி முன்பு அதிகம் டப்பிங் சீரியலை ஒளிபரப்பிய நிலையில், இப்போது சொந்த சரக்குகளை கையாளுகிறது. இருப்பினும், சற்று மாறுபட்ட கதாப்பாத்திரங்களோடு களமிறங்குகிறது அந்த சேனல்.

ஜி டிவி, ராஜ் டிவி

ஜி டிவி, ராஜ் டிவி

ஜி டிவியில் சொந்த சரக்கும், டப்பிங்கும் கலத்து அடிக்கப்படுகிறது. ராஜ் டிவி அநியாயத்திற்கு டப்பிங்கை நம்பி ஓடிக்கொண்டுள்ளது. டப்பிங் உரிமைக்கான செலவை கொடுத்துவிட்டால் போதும் என்பதால் டிவி நிர்வாகங்களுக்கு இது வர பிரசாதமாக அமைகிறது.

போட்டி சமாளிப்பு

போட்டி சமாளிப்பு

எனவே, போட்டியாளர்களை சமாளிக்க சன் டிவி, டப்பிங் சீரியல் கோதாவில் குதித்துள்ளது என்கிறார்கள் சின்னத்திரை கவனிப்பாளர்கள்.

கன்னடம் கறார்

கன்னடம் கறார்

கன்னட திரையுலகில் எப்படி டப்பிங்கை அனுமதிப்பதில்லையோ, அதேபோலத்தான் சின்னத்திரையிலும் டப்பிங்கை அனுமதிப்பதில்லை. எனவே கன்னட சேனல்களில் சொந்த தயாரிப்புதான் ஒளிபரப்பாகிறது. தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பது, சொந்த கலாசாரத்தோடு ஒட்டுதல் போன்றவற்றை டப்பிங் எதிர்ப்பாளர்கள் முன்வைத்து முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.

நளினி போராட்டம்

நளினி போராட்டம்

தமிழக சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக நளினி தேர்ந்தெடுக்கப்பட்டபோது, டப்பிங் சீரியலை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். ஆனால் தற்போது, சிவன் சீனிவாசன் தலைவராக உள்ள நிலையில், சன்டிவி எதிர்ப்பின்றி டப்பிங்கை களமிறங்கியுள்ளது.

தமிழ் நிறுவனங்கள்

தமிழ் நிறுவனங்கள்

ராதிகாவின் ராடன் உள்ளிட்ட தமிழ் டிவி சீரியல் தயாரிப்பு நிறுவனங்கள்தான் இதனால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. நாகினிக்கு கிடைக்கும் டி.ஆர்.பியை பொறுத்து சன் டிவி படிப்படியாக டப்பிங் சீரியல்களை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்த டிவி சேனல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த டிரெண்ட் நீடித்தால் தமிழ் நாடக கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

English summary
Sun tv come up with first ever dubbing serial as their competitors getting huge support for the dubbing serials.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil