»   »  தட்டிறலாம் டார்லிங்... அசால்ட் டயலாக்கில் அப்ளாஸ் அள்ளும் தெய்வமகள் வில்லன் அறிவுடைநம்பி!

தட்டிறலாம் டார்லிங்... அசால்ட் டயலாக்கில் அப்ளாஸ் அள்ளும் தெய்வமகள் வில்லன் அறிவுடைநம்பி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சீரியல்களில் வில்லிகளைப் பார்த்து பழகியவர்களுக்கு தெய்வமகள் சீரியலில் அறிவுடை நம்பியாக வரும் வில்லன் கொஞ்சம் வித்தியாசமானர்தான். காயு டார்லிங் என்று கொஞ்சும் போதும் சரி.... நீ சொல்லு தட்டிறலாம்... என்று வன்மம் காட்டும் போதும் சரி சும்மா அள்ளுகிறார் மனுசன்.

சன்டிவியில் இரவு எட்டுமணிக்கு ஒளிபரப்பாகி வரும் தெய்வமகள் தொடர்தான் இப்போது டிஆர்பியில் முதலிடத்திற்கான போட்டியில் இருக்கிறது. அண்ணி, கொழுந்தன் போட்டி கதைதான் என்றாலும் சொத்துக்காக புகுந்த வீட்டினரை பாயிண்ட் பண்ணி அடிக்கும் வில்லியாக காயத்ரி கலக்கியிருப்பார்.

வெளியேற்றப்பட்ட காயத்ரி

வெளியேற்றப்பட்ட காயத்ரி

சொத்துக்களை அடைவதற்காக காயத்ரி செய்த வில்லத்தனங்களை கொழுந்தன் பிரகாஷ் நிரூபிக்க கணவன் குமார் பெல்ட்டால் அடித்து வீட்டை விட்டு விரட்டுகிறான். கூடவே கூட்டுச்சதி செய்த தங்கை வினோதினியும் வெளியேறுகிறாள்.

அறிவுடைநம்பியிடம் தஞ்சம்

அறிவுடைநம்பியிடம் தஞ்சம்

வீட்டை விட்டு வெளியேறிய காயத்ரியும், வினோதினியும் அறிவுடை நம்பி என்ற தொழிலதிபரிடம் தஞ்சம் அடைய அவனோ காயத்ரி மீதான மோகத்தில் தனது வீட்டிற்குள் அனுமதிக்கிறான்.

காயு டார்லிங் தட்டிறலாம்

காயு டார்லிங் தட்டிறலாம்

வார்த்தைக்கு வார்த்தை காயு டார்லிங் என்று கொஞ்சி கொஞ்சி பேசி.... சொல்லு டார்லிங் நமக்கு ஒத்து வராதவங்களை தட்டிறலாமா? என்று கேட்டு அசால்டாக டெரர் காட்டுகிறார் அறிவுடை நம்பி.

டைவர்ஸ் கேட்ட குமார்

டைவர்ஸ் கேட்ட குமார்

மனைவி காயத்ரியின் செயல்பாடு பிடிக்காத குமாரோ விவாகரத்து கேட்க... அதற்கு சம்மதிக்காக காயத்ரி அதை கிழித்துப்போடுகிறாள். ஆனால் அறிவுடைநம்பியோ விவாகரத்து கொடுத்திருக்கிலாமே என்று சொல்கிறான்.

பழிவாங்கணும்

பழிவாங்கணும்

நான் என் கணவரை பழிவாங்க வேண்டும் அதற்காகத்தான் விவாகரத்து கொடுக்க மறுத்தேன் என்று அறிவுடை நம்பியிடம் கூறி தப்பித்துக்கொள்கிறாள் காயத்ரி.

தட்டிடு நம்பி தட்டிடு

தட்டிடு நம்பி தட்டிடு

என் தங்கையின் கணவனால்தான் எனக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டது. அவனை கொலை செய்துவிடு என்று அறிவுடை நம்பியிடம் கூற அவனை விடு டார்லிங் தட்டிறலாம் என்கிறான்.

நல்லாத்தானே போச்சு

நல்லாத்தானே போச்சு

தெய்வமகள் தொடர் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்த தொடரை குழந்தைகள் கூட பார்க்கின்றனர். அண்ணி கொழுந்தனுக்கு இடையேயான போட்டி வில்லத்தனம் என்று போய் கொண்டிருந்த சீரியலில் இப்போது காயத்ரியின் கன்னத்தை கிள்ளும் அறிவுடை நம்பியின் வில்லத்தனம் கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கிறது.

தப்பிப்பாளா காயத்ரி

தப்பிப்பாளா காயத்ரி

பிரகாஷை பழிவாங்க நினைத்து அறிவுடை நம்பியின் வீட்டிற்குப் போன காயத்ரி, அவனது காமப்பார்வையில் இருந்து தப்பிப்பாளா? அல்லது வில்லனுடன் சேர்ந்து வில்லத்தனம் செய்வாளா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
Deivamagal serial stylish villain Arivudai Nambi joins hand Gayathri.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil