»   »  சுதந்திரதின ஸ்பெஷல்: லிங்கா, காக்கிச்சட்டை, சிங்கம் 2

சுதந்திரதின ஸ்பெஷல்: லிங்கா, காக்கிச்சட்டை, சிங்கம் 2

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. ஜெயாடிவியில் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படமும், சன்டிவியில் சிவகார்த்திக்கேயன் நடித்த காக்கிக்சட்டை திரைப்படமும் ஒளிபரப்பாகும் என ஒருவாரமாகவே முன்னோட்டங்கள் போட ஆரம்பித்து விட்டனர்.

சுதந்திரதினம் என்றாலே கொண்டாட்டத்திற்கு பஞ்சமிருக்காது. பள்ளிகளில் கொடியேற்றிவிட்டு வாங்கிய மிட்டாயை சுவைத்துக்கொண்டே ஊர்வலம் போனது அனைவரின் நினைவில் இருக்கும். இன்றைக்கு ஊர்வலம் போகிறார்களோ இல்லையோ காலையில் சீக்கிரமே கொடியேற்றி கொண்டாடிவிட்டு தொலைக்காட்சி முன்பு அமர்ந்து விடுகின்றனர். சேட்டிலைட் சேனல்களின் வருகைக்குப் பின்னர் சுதந்திர தினத்தன்று சிறப்பு நிகழ்ச்சிகளை பார்ப்பதே பெரும்பாலோனோருக்கு முக்கிய வேலையாகி விட்டது.

ஜெயாடிவியில் லிங்கா

ஜெயாடிவியில் லிங்கா

ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடித்த லிங்கா திரைப்படம் சுதந்திர தின சிறப்புத் திரைப்படமாக ஜெயாடிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த ஆண்டு ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகமான சுதந்திர தினமாக அமைந்துள்ளது.

வாலு சிறப்பு நிகழ்ச்சி

வாலு சிறப்பு நிகழ்ச்சி

நடிகர்களின் பேட்டி இல்லாத சுதந்திர தினமா? இதே இருக்கே சன் டிவியில் வாலு படத்தின் நட்சத்திரங்கள் தங்களின் நீண்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

காக்கிச்சட்டை

காக்கிச்சட்டை

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக சிவகார்த்திக்கேயன், ஸ்ரீதிவ்யா நடித்த காக்கிச் சட்டை திரைப்படம் சன்டிவியில் ஆகஸ்ட் 15ம்தேதி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

சிங்கம் 2

சிங்கம் 2

சூர்யா-அனுஷ்கா நடித்த சிங்கம் 2 திரைப்படம் காலை 11 மணிக்கு சன்டிவியில் ஒளிபரப்பாகிறது. இதுவும் போலீஸ் கதைதான். ஆனால் கொஞ்சம் ஓவர் டோஸ்.

நாய்கள் ஜாக்கிரதை

நாய்கள் ஜாக்கிரதை

சிபிராஜ் நடித்த நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம் பிற்பகல் 2 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. திரில்லான கதை. ஆக இந்த ஆண்டு சுதந்திர தினத்தை காக்கிகளுடன் கொண்டாடுகிறது சன் டிவி.

காக்கா முட்டை

காக்கா முட்டை

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் திரைப்படம் காக்கா முட்டை ஒளிபரப்பாக உள்ளது இதை வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர் வலைஞர்கள். காக்கா முட்டை காக்கிச்சட்டை என்னா ஒரு ரைமிங். ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

English summary
Sun TV Independence Day 2015 Special Movie Kaaki Sattai on August-15.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil