»   »  கீர்த்தி, கயல்விழியுடன் 'லைவ்'வாக ரோஹித் எடுத்த செல்ஃபி.. குலதெய்வம் ஸ்பெஷல்

கீர்த்தி, கயல்விழியுடன் 'லைவ்'வாக ரோஹித் எடுத்த செல்ஃபி.. குலதெய்வம் ஸ்பெஷல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் சேலஞ்ச் நிகழ்ச்சியில் பங்கேற்ற குலதெய்வம் குடும்பத்தினர் ஒரே குடும்பமாக பங்கேற்று ஆள் ஆளுக்கு செல்ஃபி எடுத்து அசத்தினர். சீரியரில் எலியும் பூனையுமாக இருக்கும் கயல்விழி, ரோஹித் ஜோடி சூப்பர் சேலஞ்ச் நிகழ்ச்சியில் ஜோடியாக செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அப்போது கூடவே கீர்த்தியும் இணைய செல்ஃபி ஸ்பெஷல் செல்ஃபியானது.

சன் டிவியில் ஞாயிறுதோறும் சூப்பர் சேலஞ்ச் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஆதவன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இன்று நடைபெற்றது. சன்டிவியின் ஃபேஸ்புக் நேயர்களுக்காக இதனை நேரடி ஒளிபரப்பு செய்தனர். அப்போது குடும்பத்தினர் தங்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டனர்.

குலதெய்வம் குடும்பத்தில் நவகிரகங்கள்தான் உள்ளனர். ரோஹித் பற்றிதான் அதிகம் பேசினார் ஆதவன். அதுவும் ரோஹித்தால் ஏமாற்றப்பட்ட கீர்த்தியை பற்றியும், கயல்விழியைப் பற்றியும் கூறினார்.

சன்டிவியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் குலதெய்வம் தொடரில் ரோஹித்தை திட்டாத இல்லத்தரசிகள் இருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு வில்லத்தனம் காட்டுகிறான். பயபுள்ள இப்பவே கயல்விழி, கீர்த்தி என்று சுற்றுகிறானே என்று இதுக்கு அப்பா சப்போர்ட் வேற இது எல்லாம் எங்க உருப்பட போகுது என்றுதான் பேசி வந்தனர்.

சன்டிவியின் ஃபேஸ்புக் வியூவர்ஸ்காக ஆள் ஆளுக்கு தங்களின் குடும்பத்தைப் பற்றி பேசினர். குலதெய்வம் இயக்குநர் திருமுருகனுக்கு நன்றி சொல்லி ஒரு ஓ போட்டனர்.

செல்ஃபி எடுப்பது எப்படி என்று தங்கள் ஸ்டைலில் செல்ஃபி எடுத்தனர் குலதெய்வம் குடும்பத்தினர். இதில் ஜோடியாக எடுத்த செல்ஃபியில்தான் கயல்விழியுடன் ரோஹித் ஜோடி சேர கூடவே கீர்த்தியும் இணைந்து கொண்டார். அப்போது ஆதவன் அடித்த கமெண்ட்தான்... நீங்களே வீடியோவை பாருங்க.

English summary
Kuladeivam Family participate Sun TV Super Challange programme, take a selfie for Facebook viewers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil