»   »  கொலை கொலையாய் நடக்கும் குல தெய்வம்... அலமு கல்யாணம் என்னவாகும்?

கொலை கொலையாய் நடக்கும் குல தெய்வம்... அலமு கல்யாணம் என்னவாகும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குடும்ப சீரியலை எடுத்து வந்த இயக்குநர் திருமுருகன், கொலைகள், திகில் மர்மம் நிறைந்த சீரியலை இயக்கும் இயக்குநராக மாறி விட்டாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சன்டிவியில் குல தெய்வம் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. சொந்த மருமகளையே கூலிப்படை வைத்து கொல்லும் மாமனார், சொத்துக்காக அப்பாவை கடத்தி கொல்ல நினைக்கும் மகன் என கொலைகளும்,கடத்தலும் அரங்கேறி வருகிறது. மனைவியை கொன்ற அப்பாவை கொல்லத்துடிக்கிறான் மகன்.

மெட்டி ஒலி, நாதஸ்வரம் சீரியலை இயக்கிய இயக்குநர் திருமுருகன்தான் இந்த சீரியலின் இயக்குநர். ஒரு சில நடிகர்கள் தவிர புதுமுகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

அலமுவின் கதை

அலமுவின் கதை

கூட்டு குடும்ப கதை, அண்ணன் தங்கை பாசம் என்று போகும் இந்த கதையின் நாயகி அலமுவின் திருமணத்தை வைத்தே உள்ளது. காதலனே கடத்திப் போய் மனநலம் பாதித்த தனது நண்பருக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்.

தப்பிய அலமு

தப்பிய அலமு

தனது உயிரை பணயம் வைத்து பூபாலன், ஆகாஷ் ஆகியோரிடம் இருந்து காப்பாற்றுகிறான் நாதன். இதனால் அலமுவை நாதனுக்கு திருமணம் செய்ய பேசுகின்றனர். திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பின்னர் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் மூலமாக திருமணம் தடைபடுகிறது.

ரஞ்சித் வில்லத்தனம்

ரஞ்சித் வில்லத்தனம்

அலமுவை திருமணம் செய்ய ரஞ்சித் போட்ட திட்டம் சரியாக வேலை செய்ய, நாதனை அலமு வெறுக்கிறாள். இதில் அலமு வீட்டினர், ரஞ்சித்திற்கு திருமணம் செய்த முடிவு செய்கின்றனர். இதற்கு இடைஞ்சலாக இருக்கும் சுதாவை யாரோ செய்ய கதை பரபரப்படைகிறது.

போலீசும் கொலை

போலீசும் கொலை

சுதா கொலை வழக்கை விசாரித்த பெண் போலீசும் சென்னையில் கொலை செய்யப்படவே, விசாரணைக்கு இன்ஸ்பெக்டர் ரஞ்சித்தை பெங்களூருக்கு அழைக்கின்றனர். இதனால் டென்சனான ரஞ்சித்தின் செயல்பாடுகள் அலமுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அலமு திருமணம்

அலமு திருமணம்

5 நாட்களுக்குள் அலமு, ரஞ்சித் திருமணம் நடக்காவிட்டால் ரஞ்சித்திற்கு எப்போதுமே திருமணம் நடக்காது என்று ஜோசியர் எச்சரித்திருக்கிறார். இதை பார்த்து உடனே திருமணம் நடத்த திட்டமிடுகின்றனர்.

நடக்குமா திருமணம்

நடக்குமா திருமணம்

அலமு திருமணம் நிச்சயம் வரை சென்று பலமுறை நின்று விட்டது. ரஞ்சித் விசாரணைக்காக பெங்களூரு சென்றால் கொலைப்பழியில் சிக்கும் பட்சத்தில் திருமணம் நின்று விட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே நாதன், பூபாலன், ஆகாஷ் ஆகிய 3 பேருமே கொலை வழக்கு விசாரணைக்காக பெங்களூருவில் தங்கியுள்ளனர். அலமுவின் நிலை என்னவாகும் என்பது அடுத்த எபிசோடுகளில் தெரியவரும்.

English summary
Sun TV Kuladeivam serial new twits for Alamu's Marriage. Arunachalam family story for Kuladeivam serial on SunTV weekday at 7.30 PM.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil