»   »  சன் டிவியில் நாகினி பாம்பு அவுட்... நந்தினி பாம்பு இன்

சன் டிவியில் நாகினி பாம்பு அவுட்... நந்தினி பாம்பு இன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பாம்பும், பேயும் இருக்கிறவரைக்கும் தொலைக்காட்சிகளில் டிஆர்பி ரேட்டிங் எகிறிக்கொண்டுதான் இருக்கும். ஹிந்தி டப்பிங் சீரியலாக இருந்தாலும் நாகினி மவுனிராய்க்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

கடந்த சில மாதங்களாகவே இரவு பத்து மணிக்கு மேல் மகுடி சத்தமும், பாம்புகளில் புஸ் புஸ் சத்தம்தான் கேட்கும். கார்த்திக், ஷிவன்யா இப்போது ஒன்று சேர்ந்து விட்டார்கள்.

நாகினி ஷிவன்யாவின் வயிற்றில் இப்போது இருப்பது குட்டி நாகினியா, அல்லது மானிட பிறவியான கார்த்திக்கா என்ற சஸ்பென்ஸ் உடன் முடிந்து விட்டது. நாகினி முடிநது விட்டதே என்று ரசிகர்களே வருத்தப்படாதீர்கள் நந்தினியாக நான் வருகிறேன் என்று அட்டென்டன்ஸ் போட்டுள்ளது ஒரு பாம்பு.

நந்தினி

நந்தினி

நாகினி முடிந்தால் என்ன நந்தினியாக உங்கள் வீட்டுக்குள் வருகிறேன் என்று புதிதாக ஒரு சீரியல் வந்துள்ளது. இதில் வரும் பாம்பு பிரம்மாண்டம்தான். இரண்டு அழகான இளம் நாயகிகள் அறிமுகமாகியுள்ளனர்.

திரை நட்சத்திரங்கள்

திரை நட்சத்திரங்கள்

குஷ்புவின் ஆத்துக்காரர் சுந்தர்.சி தயாரிப்பு என்பதால் சினிமா திரை நட்சத்திரங்கள் விஜயகுமார், சிங்கம்புலி என அறிமுகமானவர்களும் சீரியலில் நடித்துள்ளனர். ஆரம்பமே அமர்களமாக இருக்கிறது.

பாம்பு புற்று

பாம்பு புற்று

மிக பிரம்மாண்டமான வீடு, வீட்டிற்கு முன்பு பெரிய பாம்பு புற்று. புற்றுக்குள் கட்டுப்பட்ட பாம்பு என சீரியல் நகர்கிறது. நாயகன், நாயகி சின்னத்திரை உலகத்திற்கு அறிமுகம் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். கனவில் பயமுறுத்தும் பாம்பு, பழிவாங்கும் பேய் என போகிறது

மனதில் இடம் பெறுவாளா?

நாகினி மவுனி ராய் ரசிகர்கள் மனதில் நங்கூரம் போட்டு அமர்ந்திருக்கிறார். இப்போது வந்துள்ள நந்தினி, நாகினியை விரட்டிவிட்டு ரசிகர்கள் மனதில் இடம் பெறுவாளா பார்க்கலாம்.

பிரியமானவள் போச்சேப்பா?

பிரியமானவள் போச்சேப்பா?

நாகினி நந்தினி கலவரத்தில் பிரியமானவள் நேரம் மாறிவிட்டது. அழகான மாமியார் உமா, அவந்திகா, பூமிகா, கவிதாவை எல்லாம் இனி ஒரு மணிநேரம் கழித்துதான் பார்க்க முடியுமா? அதை கொஞ்சம் எல்லாரும் பார்க்கும் நேரத்திற்கு மாற்றலாமே என்பதே ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது.

English summary
Sun TV telecast new Serial Nandhini in the serial produced by Kushboo husband Sundhar.C
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos