»   »  உமா தப்பிச்சிட்டாங்க.. "டிசி" கிரி மாட்டிக்கிட்டாரே... பயங்கர திருப்பத்தில் பிரியமானவள்!

உமா தப்பிச்சிட்டாங்க.. "டிசி" கிரி மாட்டிக்கிட்டாரே... பயங்கர திருப்பத்தில் பிரியமானவள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சதீஸ் கொலை வழக்கில் போலீஸ் அதிகாரி கிரி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி கிருஷ்ணன் குடும்பத்தை சிக்கவைக்க செய்த முயற்சிகளுக்கு பலனில்லாமல் போய்விட்டது. சாட்சிகளுடனும், ஆதரங்களுடனும் ரத்தினம் கோர்ட்டில் ஆஜர்படுத்தியதால் மிரண்டு போய் உள்ளார் போலீஸ் டிசி கிரி.

அன்பான அம்மா... பிரியமான மாமியார் என பார்ப்பவர்களின் மனதை கொள்ளை கொள்ளும் உமா திடமான மன உறுதி, கண்ணில் மின்னும் ஒளி என்று நடிப்பில் எபிசோடுக்கு எபிசோடு மெருகு ஏற்றுகிறார்.

மருமகள்களை காப்பாற்ற, கிரியின் மிரட்டலுக்கு பயந்து சதீஷை கொன்றது தான்தான் என்று ஒத்துக்கொள்வதும், பின்னர் மருமகள்களை பார்த்த மகிழ்ச்சியில் கிரிதான் தங்களை குற்றவாளி கூண்டில் ஏற்றினார் என்று சொல்வதாகட்டும் விசிலடிக்க வைக்கிறார் உமா.

பெண்களின் மனம் கவர்ந்த உமா

பெண்களின் மனம் கவர்ந்த உமா

பிரியமானவள் சீரியலில் வரும் உமா, இப்படி ஒரு அம்மா தனக்கு கிடைக்க மாட்டார்களா? தனக்கு ஒரு மாமியார் கிடைக்க மாட்டார்களா என்று ஏங்க வைக்கிறார். அன்பும், பாசத்துடனும் பழகுவதாகட்டும், ஈஸ்வரிதான் வில்லி என்று தெரிந்த பின்னர் ஒதுங்குவதாகட்டும் வெளுத்து கட்டுகிறார்.

பூமிகாவின் நடுக்கம்

பூமிகாவின் நடுக்கம்

சதீஷ் கொலையை ஒத்துக்கொண்டு ஜெயிலுக்கு போவதை தவிர வேறு வழியில்லையா என்று கேட்டு நடுங்குவதுடன் பூமிகாவின் நடிப்பு முடிந்து விடுகிறது. அவ்வப்போது சரவணனுடன் ரொமான்ஸ் செய்கிறார்.

மிரட்டல் அவந்திகா

மிரட்டல் அவந்திகா

கழுத்தில் கத்தி வைத்து மிரட்டும் வில்லன்களிடம் இருந்து தப்பிக்க அவந்திகா செய்யும் பிளான். கவிதாவின் ஒத்துழைப்புடன் வில்லன்களை வீழ்த்திவிட்டு கோர்ட்டுக்கு வந்து நிற்பது உமாவின் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

ஆவேச உமா

ஆவேச உமா

மருமகள்களை காப்பாற்ற கொலையை ஒத்துக்கொள்ளும் உமா, மருமகள்கள் கவிதா, அவந்திகாவை பார்த்த உடன், கிரிதான் கொலையாளி என்று கையை நீட்டி ஆவேசமாக பொங்குகிறார்.

விழிக்கும் கிரி

விழிக்கும் கிரி

கோர்ட்டில் கண்களை உருட்டி உருட்டி விழிக்கும் கிரி கொஞ்சம் ஓவர் ஆக்டிங்தான். ஆனாலும் கொலைக்கு என்ன ஆதாரம் என்று கேட்டு மீண்டும் மிரட்டுகிறார். ரத்தினம், கமிஷனர் என அடுத்தடுத்து கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்கின்றனர்.

ரத்தினம் அதிரடி

ரத்தினம் அதிரடி

போலீஸ் அதிகாரி ரத்தினம் கோர்டுக்கு வந்து கொலையாளி கிரிதான் என்று கூறுவது திடீர் திருப்பம். அதற்கு காரணம், கிரியின் மகளை சதீஷ் ஏமாற்றியதுதான் என்று கூறுகிறார். சதீஷின் அப்பாவும் இதற்கு சாட்சி சொல்கிறார்.

பாபு சிக்கிட்டானே

பாபு சிக்கிட்டானே

கொலையை நேரில் பார்த்த, கிரி செய்த கொலைகளுக்கு உடந்தையாக இருந்த பாபுவை கோர்ட்டில் ஆஜர் படுத்த அழைத்து வருகிறார் கிரி. அதைப் பார்த்து கிரிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி வருகிறது.

ஓவர் பில்டப்

ஓவர் பில்டப்

போலீஸ் அதிகாரி, வில்லி ஈஸ்வரி உதவியுடன் கிருஷ்ணன் குடும்பத்தை படாதபாடு படுத்தி நல்லாவே நடிக்கிறார். உருட்டும் கண்கள் அவரின் பிளஸ். ஆனால் அதற்காக ஓவராக பில்டப் கொடுப்பது ஏன் என்று விமர்சனம் எழுகிறது. ஒரு மாத காலமாக இழுத்த ஜவ்விழுப்பு நேற்றுதான் முடிவுக்கு வந்துள்ளது.

உமா பூமிகா தப்பிட்டாங்களே

உமா பூமிகா தப்பிட்டாங்களே

நடராஜ், அவந்திகா ஜோடி நடிப்பு கதைக்கு கூடுதல் பிளஸ். திலீபன், கவிதா ஜோடியும், சரவணன், பூமிகா ஜோடியும் நல்ல நடிப்பு, இளய மகன் பிரபா அம்மாவுக்கு நல்ல பிள்ளை நடிப்பிலும் தான். கடைசியில் உமாவும், பூமிகாவும் தப்பிட்டாங்களே என்று பேசிக்கொண்டனர் சீரியல் பார்த்த இல்லத்தரசிகள்.

நல்லா இருக்கே

பிரியமானவள் முடிகிற வரைக்கும் வீட்டில் யாருக்கும் சோறு தண்ணி கிடையாது ... நேற்று முக்கியமான எபிசோடு வேறா... அதே பேச்சுதான் அதற்குத்தான் இந்த மீம்ஸ். அதெல்லாம் சரிதான். கடைசியில் எல்லாம் கனவு என்று கொண்டு போய் மீண்டும் உமாவை ஜெயிலுக்கு அனுப்பாமல் இருந்தால் சரிதான்.

English summary
Sun TV Priyamanaval Serial new turning point to AC Rathinam to DC Giri

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil