விரைவில் முடிவிற்கு வரும் சன் டிவியின் மிக நீண்ட சீரியல்...எந்த சீரியல் தெரியுமா?
சென்னை : ரசிகர்களை கவர்வதற்காக அதிலும், இல்லத்தரசிகளை கவர்வதற்காக அனைத்து சேனல்களும் போட்டி போட்டுக் கொண்டு நான் ஸ்டாப்பாக சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. அனைத்து சேனல்களிலும் மெகா சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
அப்படி சன் டிவியில் ஒரு சீரியல் கடந்த 7 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? தமிழ் டிவி வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது 2200 எபிசோட்களை கடந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
அது வேறு எந்த சீரிலும் இல்லை. சன் டிவி-யில் கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் மெகா சீரியல் "சந்திரலேகா" தான். இந்த சீரியல் கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ம் தனது முதல் ஒளிபரப்பை தொடங்கியது.

சரிகம நிறுவனம் தயாரிப்பில், டைரக்டர் ஏ.பி.ராஜேந்திரன் இயக்கி வரும் இந்த சீரியலில் ஸ்வேதா பந்தேகர், நாகஸ்ரீ ஜி.எஸ், சந்தியா ஜகர்லமுடி, ஜெய் தனுஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.தற்போது வரை 2250-க்கும் அதிகமான எபிசோட்களை கடந்திருக்கும் சந்திரலேகா சீரியல் விரைவில் முடிவடையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சீரியலை இதுவரை 10 டைரக்டர்கள் இயக்கி விட்டனர். தற்போது 11வது ஆளாக ஏ.பி.ராஜேந்திரன் இயக்கி வருகிறார். ஏராளமான கேரக்டர்கள் நடித்து வரும் இந்த சீரியலில், ரோஜா சீரியலில் லீட் ரோலில் நடிக்கும் சிபு சூரியன், பிரியங்கா நல்காரி ஆகியோருடன் வனிதா விஜயக்குமாரும் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்துள்ளனர்.
சந்திரா மற்றும் லேகா இருவரும் ஆரம்பத்தில் எதிரிகளாக இருந்தாலும் பின் தன் குடும்பத்திற்காக மாறிவிட்டார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து வரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். இதற்கு இருவரின் கணவர்களும் துணையாக இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியல் விறுவிறுப்பான பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது.
இருந்தாலும், இடையில் சீரியல் கொஞ்சம் டல்லாக சென்றதால் பலரும் சீரியல் எப்போதும் முடியப்போகிறது என்றெல்லாம் கேட்டு இருந்தார்கள். அதோடு சீரியலில் பல பிரபலங்கள் மாறி இருந்தாலும் கதை நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. அதுட்டுமில்லாமல் சந்திரலேகா சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியலில் நடித்த நடிகர்களும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார்கள்.
தற்போது சீரியல் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சந்திரலேகா சீரியல் முடிவுக்கு வர இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. இதனால் சந்திரலேகா சீரியல் ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











