Don't Miss!
- Finance
ரெசிஷன் நினைக்கும் அளவுக்கு மோசமா இருக்காது.. ஐஎம்எப் கொடுத்த குட் நியூஸ்..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- News
கொடுங்கோல்.. தலித் கோயிலுக்கு சென்றது தவறா? ஜாதி தீண்டாமை தொடருதே - கொந்தளித்த பா.ரஞ்சித்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
மீண்டும் சீரியல் இயக்கத் தயாரான மெட்டி ஒலி டைரக்டர்.. ஆனா எந்த சேனலுக்கு?
சென்னை : சன் டிவியின் தொடர்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருபவை.அந்த வரிசையில் முக்கியமான தொடராக அமைந்தது மெட்டி ஒலி.
இந்தத் தொடரை இயக்கி நடித்த திருமுருகன், அந்த தொடரின் கேரக்டர் கோபியாகவே ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறார்.
இவர் தற்போது மீண்டும் சீரியல் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..ஜெயிலர் படத்தில் இணைந்த பிரபலம்!

சன் டிவி சீரியல்கள்
சன் டிவி, விஜய் டிவி என முன்னணி சேனல்கள் அனைத்தும் தங்களது நிகழ்ச்சிகளுக்கு கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை தொடர்களுக்கும் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் அனைத்தும் ரசிகர்களின் விருப்பத்திற்குரியவைகளாக தொடர்ந்து இருக்கின்றன. தற்போது சன்டிவியில் ஒளிபரப்பாகிவரும் கயல் தொடர் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகின்றன.

ரசிகர்களை கவர்ந்த மெட்டி ஒலி
அந்த வகையில் பல வருடங்களுக்கு முன்பு சன்டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடர் ஏராளமான எபிசோட்களுடன் ரசிகர்களை கவர்ந்து முன்னணி தொடராக அமைந்தது. இந்தத் தொடரில் இடம்பெற்ற கேரக்டர்களின் பெயர்களை தற்போதும் ரசிகர்கள் நியாபகம் வைத்துக் கொண்டுள்ளனர். லாக்டவுன் சமயத்தில் இந்தத் தொடர் மீண்டும் ஒளிபரப்பான நிலையில், அப்போதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இயக்குநர் திருமுருகன்
இந்தத் தொடரை இயக்கி கோபி என்ற கேரக்டரில் நடிக்கவும் செய்தார் இயக்குநர் திருமுருகன். இந்த அளவிற்கு ரசிகர்களை ஈர்க்க முடியுமா என்பதற்கு சிறந்த உதாரணமான இந்தத் தொடரில் இவர் ஏற்று நடித்திருந்த கோபி என்ற கேரக்டராலேயே இவர் தற்போது அறியப்படுகிறார். தொடர்ந்து நாதஸ்வரம், தேன் நிலவு, குல தெய்வம், கல்யாண வீடு என தொடர்ந்து சீரியல்களை இயக்கியும் நடித்தும் வந்தார்.

படங்களை இயக்கிய திருமுருகன்
என்ற போதிலும் மெட்டி ஒலி, நாதஸ்வரம் சீரியல்கள் இவருக்கு சிறப்பான பெயரையும் ஏராளமான ரசிகர்களையும் பெற்றுத் தந்தன. இந்தத் தொடர்கள் இவருக்கு சினிமாவில் படம் இயக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தன. எம் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு ஆகிய படங்களை இயக்கினார் திருமுருகன். இதில் எம் மகன் வடிவேலு காமெடிக்காகவே சிறப்பாக பார்க்கப்பட்டது.

மீண்டும் சீரியல் இயக்கும் திருமுருகன்
இதனிடையே தற்போது இவர் மீண்டும் சீரியல் இயக்கத் தயாராகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முறை இவர் கலைஞர் டிவிக்காக சீரியல் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு சமயத்தில் தனக்கு ஏற்றத்தை தந்த சன் டிவிக்காகவே இவர் தொடர் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும்.