»   »  நம்பி கொலை... சத்யாவுக்கு சிறை.... தவிக்கும் பிரகாஷ்- தெய்வமகள் நம்.1

நம்பி கொலை... சத்யாவுக்கு சிறை.... தவிக்கும் பிரகாஷ்- தெய்வமகள் நம்.1

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெய்வமகள் சீரியல் ஒருவழியாக டிஆர்பியில் நம்பர் 1 இடத்திற்கு வந்து விட்டது. காரணம் இல்லாமல் இல்லை. டார்லிங்... டார்லிங் என்று காயத்திரியை சுற்றி வந்த நம்பியை கொன்று புதைத்து விட்டாள் காயத்ரி. அந்த கொலை பழியை சத்யா மீது போட்டு விட்டு ஜாலியாக பிரகாசிடம் சவால் விட்டு பேசி வருகிறாள் காயத்ரி. என்ன இந்த காயத்ரி இப்படி பண்ணிட்டாலே என்று உச்சுக்கொட்டி பார்ப்பதால் சீரியல் டிஆர்பி எகிறிவிட்டது.

கர்ப்பிணி மனைவி சத்யா இப்படி சிறையில் இருக்கிறாளே என்று தவிக்கிறான் பிரகாஷ். நம்பி எங்கே என்று யோசிக்க, நம்பியைப் போலவே உள்ள சடலத்தை அடையாளம் காட்டுகிறாள் காயத்ரி. இது சத்யாவிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நகரும் தெய்வமகள் கதை, ஜெய்ஹிந்த் விலாஸ் வீட்டை சுற்றியே நகருகிறது. காயத்ரி என்ற வில்லிக்கும், பிரகாஷ் என்ற நாயகனுக்கும் இடையேயான சண்டைகள், சவால்கள் இப்போது கொலையில் போய் முடிந்திருக்கிறது.

தட்டிறலாம் டார்லிங்

தட்டிறலாம் டார்லிங்

குமாரை விட்டு காயத்ரிக்கு அடைக்கலம் கொடுத்த நம்பி, அவளை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட, அதற்கு பலவித முட்டுக்கட்டை போடுகிறாள் காயத்ரி. இந்த விசயம் வேலைக்காரன் மூலம் பிரகாஷ் தெரியப்படுத்த, அவளை கொல்ல போகிறான் நம்பி.

அடித்துக் கொன்ற காயத்ரி

அடித்துக் கொன்ற காயத்ரி

மயக்கமான காயத்ரியை புதைக்க நம்பி குழி தோண்ட, அதற்குள் விழித்த காயத்ரி, நம்பியை கொன்று தங்கையின் உதவியுடன் புதைக்கிறாள். அந்த கொலை பழியை தாசில்தார் சத்யா மீது போடுகிறாள். போலீஸ் சத்யாவை சிறைக்கு அனுப்புகிறது.

தவிக்கும் பிரகாஷ்

தவிக்கும் பிரகாஷ்

கர்ப்பிணி மனைவியான சத்யா, சிறையில் வாடுவதை நினைத்து தவிக்கிறான் பிரகாஷ். இதற்கு காரணம் காயத்ரிதான் என்று தெரிந்தும் உண்மையை கண்டு பிடிக்க வழியில்லாமல் இருக்கிறான் பிரகாஷ்.

சவால் விடும் காயத்ரி

சவால் விடும் காயத்ரி

ஜெய்ஹிந்த் விலாஸ் விட்டு அனைவரையும் துரத்தி விட்டு மீண்டும் கணவன் குமாருடன் அங்கு வருவேன் என்று பிரகாஷிடம் சவால் விடுகிறாள் காயத்ரி. இதற்காகவே இருவரையும் பிரித்தாக கூறுகிறாள். சிறைக்குள் ஆள் வைத்து சத்யாவை கவனிக்க சொல்லியிருப்பதாக கூறுகிறாள்.

உடல் அடையாளம்

உடல் அடையாளம்

நம்பியை கொன்று வீட்டிற்குள் புதைத்தாலும் அவனைப் போலவே ஒரு உடலை செட்அப் செய்து போலீஸ் கைக்கு கிடைக்கும் வகையில் செய்து அதை அடையாளம் காட்டுகிறாள் காயத்ரி. இதனால் சத்யாவிற்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று வக்கீல் கூற, செய்வதறியாது தவிக்கிறான் பிரகாஷ்.

பரபரப்பான திருப்பங்கள்

பரபரப்பான திருப்பங்கள்

தெய்வமகள் தொடரில் இப்போதுதான் கதை பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. சத்யாவை கொலை பழியில் இருந்து பிரகாஷ் எப்படி மீட்பான்? காயத்ரி தன் சபதத்தை நிறைவேற்றினாளா போன்ற திருப்பங்களை இனி வரும் எபிசோடில் காணலாம் என்கிறார் இயக்குநர் குமரன். நம்பி கொலை, சத்யா சிறை போன்ற போன்ற காட்சிகளால் தெய்வமகள் டிஆர்பியில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

English summary
BARC helps to analyze TRP of TV Serials, shows and movies.Top program ranking is based on average Rating across all airings (Original and Repeat) in the week.8th October 2016 to Friday, 14th October 2016 41th Week TV Sun TV serial Deivamagal TRP No 1.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil