»   »  சன் டிவி ஞாயிறு படம் மாறிப்போச்சே... காஞ்சனா, இனிமே இப்படித்தான்

சன் டிவி ஞாயிறு படம் மாறிப்போச்சே... காஞ்சனா, இனிமே இப்படித்தான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஞாயிறு மதியம் குட்டிப்புலி, மாலையில் சிங்கம் என்று முன்னோட்டம் போட்ட நிலையில் திடீரென படத்தினை மாற்றி விட்டனர். மேட்னி ஷோ திரைப்படம் காஞ்சனாவும், மாலையில் சந்தானம் நடித்த இனிமே இப்படித்தான் திரைப்படமும் ஒளிபரப்பாகும் என்று தற்போது முன்னோட்டம் ஒளிபரப்புகின்றனர்.

ஞாயிறு ஒளிபரப்பாகும் திரைப்படங்கள், அந்த வாரம் ஓளிபரப்பாகும் டிவி சீரியல்களின் எபிசோடுகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்தே டிஆர்பி கிடைக்கிறது.


Sun TV Sunday movie Schedule changed Kanchana

சன்டிவியில் தொடர்ந்து புது படங்கள் மாலை நேரங்களில் ஒளிபரப்பியதால் டிஆர்பியில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் சன்டிவியில் ஞாயிறன்று குட்டிப்புலியும், சிங்கம் திரைப்படமும் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டது.


விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு 5 நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று போட்டிகள் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென சன் டிவியில் மதியம் ஒளிபரப்பாகும் திரைப்படமும், மாலையில் ஒளிபரப்பாகும் திரைப்படங்களும் மாற்றப்பட்டுள்ளது.


Sun TV Sunday movie Schedule changed Kanchana

குழந்தைகளை கவர்ந்த காஞ்சனா திரைப்படமும், மாலையில் சந்தானம் நடித்த இனிமே இப்படித்தான் திரைப்படமும் ஒளிபரப்பாகும் என்று சன் டிவியில் முன்னோட்டம் போடுகின்றனர். இந்த படமாவது ஒளிபரப்பாகுமா? அல்லது கடைசி நேரத்தில் மாறுதலுக்கு உட்பட்டதா என்பது சன்டிவிக்கே வெளிச்சம்.

English summary
Sun TV Sunday movie Schedule changed Kanchana‎ and Inimey Ippadithan‬ will telecast on Sunday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil