»   »  சன் டிவியில் ஞாயிறு மதியம் குட்டிப்புலி... சாயந்தரம் சிங்கம்

சன் டிவியில் ஞாயிறு மதியம் குட்டிப்புலி... சாயந்தரம் சிங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சன்டிவியில் இந்த வாரம் ஞாயிறு குட்டிப்புலி, சிங்கம் ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. வார விடுமுறை தினங்களில் எந்த டிவி சேனலில் என்ன திரைப்படம் ஒளிபரப்பாகும் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர் திரைப்பட ரசிகர்கள். கடந்த இரண்டு வாரங்களாக கில்லி, திருப்பாச்சி என விஜய் நடித்த படங்களை ஒளிபரப்பியதில் சன்டிவியின் டிஆர்பி எகிறிக்கிடக்கிறது. கூடவே இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக உதயநிதி நடித்த கெத்து திரைப்படமும் சன்டிவியில் ஒளிபரப்பானது.

Sun TV telecast Kutti Puli and Singam Sunday Movie

சன்டிவியின் டிஆர்பி ரேட்டிங் ஒவ்வொரு வாரமும் நம்பர் 1 ஆகவே உள்ளது. காரணம் ரசிகர்களுக்கு பிடித்தமான படங்களை ஒளிபரப்புவதே. இந்த வாரமும் ஞாயிறு மாட்னி ஷோ சசிகுமார் லட்சுமி மேனன் நடித்த குட்டிப்புலி திரைப்படம் ஒளிபரப்பாகிறது. ஞாயிறு மாலை சூர்யா அனுஷ்கா நடித்த சிங்கம் ஒளிபரப்பாக உள்ளது.

ஒருவேளை விஜய் டிவியில் சிறுத்தை போடுவார்களோ என்ற சந்தேகத்தில் தேடினால் சிறுத்தை கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை காலை 10 மணிக்கு ஒளிபரப்புகிறது விஜய் டிவி. பிற்பகல் 2 மணிக்கு சிவகார்த்திக்கேயன் நடுவராக பங்கேற்ற கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சியினை விஜய் டிவியில் ஒளிபரப்புகின்றனர். இந்த வாரம் ரசிகர்களின் ரசனை எந்தப்பக்கம் திரும்புதோ?

English summary
Sunday special movie SunTV Kutti Puli and Singam. Vijay TV telecast Sunday movie Karthi's Madras.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil