»   »  சன்டிவி டிஆர்பியில் டாப் 1 ஆன வம்சம்: எங்கே செல்லும் இந்த பாதை?

சன்டிவி டிஆர்பியில் டாப் 1 ஆன வம்சம்: எங்கே செல்லும் இந்த பாதை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சன்டிவியில் ஒளிபரப்பாகும் டிவி சீரியல்களில் டாப் 5 சீரியல்களில் முதலிடத்தை பிடித்துள்ளது ரம்யாகிருஷ்ணனின் வம்சம் சீரியல். எப்படி எப்படி சாத்தியம் என்பதுதான் பலரது ஆச்சரியமாக உள்ளது.

குல தெய்வம் , தெய்வமகள், பிரியமானவள் ஆகிய சீரியல்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு வம்சம் எப்படி முதலிடம் பிடித்தது என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது.

ரம்யாகிருஷ்ணன் நடித்து ஒளிபரப்பாகும் வம்சம் தொடர் ஆரம்பத்தில் இருந்தே விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது. வம்சத்தை நிப்பாட்டுங்க என்றுதான் பலரும் புகார் எழுதினார்கள். இப்போது எப்படி டிஆர்பியில் சீரியல் எகிறியது என்று ஆள் ஆளுக்கு விசாரித்து வருகின்றனர். டல்லடித்த சீரியலை விறுவிறுப்பாக்கிவிட்டாராம் புது இயக்குநர்.

டாக்டர் மதனின் காதல், கள்ளக்காதல் திருமணங்கள், போய் இப்போது அவனை விட வில்லத்தனம் செய்யும் நந்தக்குமார் அறிமுகமாகியிருக்கிறான். சீரியலுக்கு ஒரு வில்லன் போதும் என்று நினைத்தார்களோ என்னவோ மதன் திருந்திவிட்டான்.

வில்லியாக இருந்த ரோஜாவும் திருந்திவிட்டாள். மதனின் அம்மா, அப்பாவை ஆளையே காணோம். வம்சத்தில் ஆரம்பத்தில் இருந்து நடித்த பலரும் காணாமல் போக இப்போது பூமிகா குடும்பத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

ராதா நந்தகுமார்

ராதா நந்தகுமார்

அமெரிக்காவில் படிக்கும் போது ராதாவுடன் லிவ் வாழ்க்கை வாழ்ந்த நந்த குமார் அவளை ஏமாற்றிவிட்டு தமிழ்நாட்டிற்கு வந்து சொத்துக்காக ஜோதிகாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். அதை தடுக்க கலெக்டர் அர்ச்சனா தலைமையில் மதனும், ராதாவும் தனிப்படை அமைத்து மாறு வேடத்தில் வந்துள்ளனர்.

குடுமி வச்சா தெரியாதா?

குடுமி வச்சா தெரியாதா?

மதன் தனது தலையில் விக் வைத்துக்கொண்டு ஐயர் வேஷத்தில் கல்யாண மண்டபத்திற்கு வரவே, முகம் முழுக்க கறுப்பு பெயிண்ட் அடித்துக்கொண்டு, தலையில் ஸ்பிரிங் வைத்து பின்னிக்கொண்டு ராதா மாறு வேடத்தில் வந்திருக்கிறார். ஆனால் நந்தகுமாரைத் தவிர சீரியல் பார்க்கும் அனைவருக்கும் இவர்களை அடையாளம் தெரிகிறது.

நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்

நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்

ராதாவையும், மதனையும் நந்தகுமார் ஆள் வைத்து அடித்து தூக்கிப் போடும் வீடியோ காட்சியை காட்டி சுதர்சன் மிரட்டவே அவரது தலையில் அடித்து படுக்கவைக்கிறான் நந்த குமார். சில மணிநேரங்களில் கண் விழிக்கும் சுதர்சனத்திற்கு நடந்தது எல்லாம் மறந்து போச்சாம்.

கலெக்டர் வேலை என்னப்பா?

கலெக்டர் வேலை என்னப்பா?

மாவட்ட கலெக்டராக நடிக்கும் அர்ச்சனாவிற்கு குடும்ப பிரச்சினையை தீர்ப்பது தவிர வேறு எந்த பிரச்சினையும் இல்லை போல. இதில் பொன்னுரங்கம் வேறு அசிஸ்டெண்ட் கமிஷனராகிவிட்டார்.

ஜோதிகா கல்யாணம்

ஜோதிகா கல்யாணம்

கடந்த 10 நாட்களுக்கும் மேலாகவே சீரியலில் ஜோதிகா கல்யாணம்தான் ஒளிபரப்பாகி வருகிறது. யாருக்காவது கல்யாணம் நடக்கிறது இல்லை என்றால் குழந்தை பிறக்கப் போகிறது. சக்தி, அர்ச்சனா, பூமிகா, ரோஜா கல்யாணங்கள் முடிந்து இப்போது ஜோதிகா கல்யாணத்தில் வந்து நிற்கிறது.

மிரட்டும் அர்ச்சனா

மிரட்டும் அர்ச்சனா

எத்தனையோ பேரை அடித்து மண்டபத்தில் படுக்க வைத்து விட்டு தாலிகட்ட தயாராகிறான் நந்தகுமார். உனக்கு உதவிய எல்லோரையும் பிடித்து ஜெயிலில் போட்டுவிட்டேன் என்று நந்தகுமாரிடம் கலெக்டர் அர்ச்சனா சொல்ல பயப்படுவது போல நடிக்கிறான். அர்ச்சனாவையும் அடித்து படுக்கவைத்து விடுவானோ?

8.30 மணிக்கு வேறு கதியில்லை

8.30 மணிக்கு வேறு கதியில்லை

சன்டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் தெய்வமகள், பிரியமானவள் சீரியல்கள்தான் நம்பர் 1,நம்பர் 2 இடத்தில் இருந்து வந்தது. இப்போது வம்சம் தொடர் டிஆர்பியில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. பிற சேனல்களில் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்க்காமல் எல்லோரும் வம்சம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்றே தெரிகிறது.

வாணி ராணி அவுட்

வாணி ராணி அவுட்

சன் டிவியின் டாப் 5 டிஆர்பியில் இருந்து வாணி ராணி அவுட் ஆகிவிட்டது. காரணம் அந்த நேரத்தில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு சீரியலை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதுதானாம்.

நாகினி நம்பர் 5

நாகினி நம்பர் 5

டாப் 5ல் தெய்வமகள் 2வது இடத்திலும் பிரியமானவள் சீரியல்3 வது இடத்திலும் உள்ளது. குலதெய்வம் சீரியல் 4வது இடத்தையும், நாகினி சீரியல் 5வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்கே செல்லும் இந்த பாதை

எங்கே செல்லும் இந்த பாதை

ஒரே ஒரு கல்யாணத்தை வச்சு இன்னும் எத்தனை நாட்களுக்கு ஓட்டுவார்களோ? ஜோதிகா கல்யாணத்தால் உயிர்பலி ஏற்படும் என்று சாமியார் சொன்னதை நினைத்து கலக்கத்தில் இருக்கிறாள் பூமிகா. ராதாவை நந்தகுமார் திருமணம் செய்து கொள்வானா? என்ற பல கேள்விகளுக்கு இனிவரும் எபிசோடுகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்கின்றனர் சீரியல் குழுவினர்.

English summary
Ramyakrishnan's Vamsam Serial Top 5 number 1 in Sun TV TRP.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil