»   »  மெகா சீரியலை தயாரிக்கும் சுந்தர் சி

மெகா சீரியலை தயாரிக்கும் சுந்தர் சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என வெள்ளித்திரையில் பன்முக திறமை கொண்ட சுந்தர் சி, தற்போது தொலைக்காட்சி தொடர் ஒன்றை தயாரிக்கிறார்.

இயக்குனர் சுந்தர் சி அரண்மனை 2 படத்தை தொடர்ந்து சங்கமித்ரா என்ற படத்தினை இயக்கி உள்ளார். பல கோடி பட்ஜெட்டில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் சுந்தர் சி-க்கு கனவு படமாம். அதனால் இந்த படத்தின் ப்ரீ ப்ரொடெக்ஷன் வேலையில் பிஸியாக உள்ளார். இந்த படத்தினை முடிக்க எப்படியும் இரண்டு வருடங்கள் ஆகுமாம்.

Sundar C to produce TV serial

இப்படம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படமாகும். மேலும் இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

இரு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் மகேஷ் பாபு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில், சூர்யாவை முதலில் படக்குழு அணுகியது. சூர்யா மறுத்துவிட்டதால், இப்பொழுது ஜெயம் ரவியை படக்குழு அணுக திட்டமிட்டுள்ளது.

படத்தின் அனைத்து முன் வேலைகளும் நடக்கும் இதே வேளையில், சுந்தர் சி நான்கு மொழிகளில் உருவாகவிருக்கும் ஒரு தொலைக்காட்சி தொடரை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். ராஜ் கபூர் மற்றும் செல்வா ஆகியோர் இணைந்து இயக்கும் இது ஹாரர் மற்றும் த்ரில்லர் தொடராகும். இந்த ஹாரர் தொடரை யு கே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

English summary
The Famous Actor, Director and producer Sundar C is going to produce a TV serial in four languages.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil