»   »  ஹெலிகேம்... டிஐ... 4கே கேமரா... சினிமாவை விட பிரம்மாண்டமாக தயாராகும் நந்தினி!

ஹெலிகேம்... டிஐ... 4கே கேமரா... சினிமாவை விட பிரம்மாண்டமாக தயாராகும் நந்தினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுந்தர் சி - குஷ்பு தயாரிப்பில் பிரம்மாண்டமான சீரியலாக தயாராகிறதாம் நந்தினி. ஒரு பக்கம் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் படம் இயக்கப்போகும் சுந்தர் சி இன்னொரு பக்கம் சன் டிவிக்காக ஒரு சீரியல் தயாரிக்கிறார்.

Sundar C's first mega serial Nandhini

இந்த சீரியலில் இதுவரை இல்லாத அளவிற்கு முதன்முறையாக ரெட் எபிக் 4கே கேமரா பயன்படுத்தப் போகிறார்களாம். பெரிய படங்களுக்கு பயன்படுத்தப்படும் அதி நவீன கேமரா இது. மேலும் தமிழ் சினிமாவின் பேய் படங்களுக்காக நேர்ந்து விடப்பட்ட அரண்மனை செட் இருக்கும் ஸ்டூடியோவை இரண்டு ஆண்டுகளுக்கு வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள்.

சீரியலுக்கு ஒளிப்பதிவு சுந்தர் சி படங்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான யுகே.செந்தில் குமார். இந்த சீரியலுக்கு ஹெலிகேம் பயன்படுத்த போகிறார்களாம். பேய் கதையான இந்த சீரியலில் குஷ்பு நடிக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது!

English summary
For the first time in Tamil satellite channel history Sundar C is producing a mega serial titled as Nandhini.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil