»   »  சன் டிவி நாகினிக்கு சரியான போட்டி விஜய் டிவியின் மாய மோகினி

சன் டிவி நாகினிக்கு சரியான போட்டி விஜய் டிவியின் மாய மோகினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இது பாம்பு, பேய் சீசன் காலம் என்பதை டிவி சீரியல்களும் விடாமல் பிடித்துக்கொண்டுள்ளன. எந்த சேனலைப் போட்டாலும் பாம்பு, பேய் என சீரியல்கள் வரத்தொடங்கிவிட்டது.

ஜீதமிழ் தொலைக்காட்சியில் நாகராணி என்ற இந்தி சீரியலை டப் செய்ய அதே கதையம்சம் உள்ள நாகினி என்ற சீரியலை சன்டிவி ஒளிபரப்ப தொடங்கியது. மாலை நேரத்தில் கேளடி கண்மணி என்ற தொடரில் பாம்பை கொண்டு வந்த சன் டிவி, மதிய நேரத்தில் சந்திரலேகாவில் புதிதாக ஆவியை புகுத்தியுள்ளனர்.

பேய், பாம்புகளுக்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்த்த விஜய் டிவியும் தன் பங்குக்கு தற்போது மாய மோகினி என்ற டப்பிங் சீரியலை ஒளிபரப்ப உள்ளனர். விஜய் டிவிக்கு டப்பிங் சீரியல் புதிதில்லை. அமானுஷ்ய தொடர்களும் புதிதில்லை. இந்த பேய் கவர்ச்சியாய், கொஞ்சம் கலவரம் ஏற்படுத்தச் செய்கிறது. ஹீரோயினைச் சுற்றிவரும் மோகினிப் பேய் பண்ணும் சேட்டைகளை காட்டும் டிரெய்லரே அச்சத்தை அதிகரிக்கத்தான் செய்கிறது.

சன் டிவியில் ஏற்கனவே 'நாகினி' சீரியலில் ஷிவன்யா ரசிகர் மன்றம் ஆரம்பித்த பல இளசுகளைக் கவர, விஜய் டிவி களமிறக்கும் புத்தம்புது சீரியல் ஆயுதம்தான் 'மாய மோகினி' சீரியல். "டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பி எங்கள் வேலை வாய்ப்பை பறிக்காதீர்கள்" என்று ஒரு புறம் சின்னத்திரை நட்சத்திரங்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இன்னொரு புறம் முன்னணி சேனல்கள் போட்டிபோட்டுக் கொண்டு இந்தி சீரியல்களை இறக்குமதி செய்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.

மாயமோகினி யார்

இரண்டு பெண்கள் முக்கிய கதாபாத்திரம். ஒருவனை தீவிரமாக காதலிக்கும் பெண் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். ஆனால் அவளின் ஆன்மா அந்த இளைஞனையே சுற்றிச் சுற்றி வருகிறது. அந்த இளைஞனுக்கு திருமணமாகிறது. மனைவியின் ஆன்மா மூலம் அந்த இளைஞனோடு வாழ துடிக்கிற பெண்ணின் கதை.

விநாயகர் சதுர்த்திக்கு மாயமோகினி

மாயமோகினி வருகிற 5ந் தேதி விநாயகர் சதுர்த்தி முதல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ப்ரைம் டைமான இரவு 7 மணிக்கு ஒளிப்பாகிறது. இந்த மாயமோகினி அந்த நாகினியை வெல்வாளா என்பது ஒரு சில வாரங்களில் தெரிந்துவிடும்.

சமூக வலைத்தள சண்டை

சமூக வலைத்தள சண்டை

சன் டிவிக்கும், விஜய் டிவிக்கும் நாகினி பாம்பையும், மோகினிப் பேயையும் ஆளுக்கொன்றாக தத்துக் கொடுத்துவிட்டது அந்த இந்திச் சேனல்.

சமூக வலைத்தளங்களில் தாறுமாறாக நாகினிக்கும் மாயமோகினிக்கும் ஆதரவாக இப்போதே சண்டை போட ஆரம்பித்து விட்டனர்.

பேய் பெண்கள்

பேய் பெண்கள்

பேய் புகப் போகும் பெண்ணாக நடித்திருக்கும் இந்தி சீரியல் கதாநாயகி மோனா சிங். பேய் இப்போதைக்கு மகேக் சஹால்...அப்புறமா சரா கான்.

ஹீரோயின் கணவராக வரும் ஹீரோவின் பெயர் விவேக் தாஹியா. இந்தி ‘கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் ஹீரோயின் 'திவ்யங்கா' பெண்ணைக் கல்யாணம் கட்டிக் கொண்ட காதல் கணவர்.

கதை என்ன?

கதை என்ன?

இந்தியிலேயே இதன் கதைக்கருவாக சொல்லப்படுவது ‘சத்தியவான் - சாவித்ரி' ஹிஸ்டாரிக்கல் ஸ்டோரி தான். அதன் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு, களத்தை முழுவதுமாக மாற்றித்தான் சீரியல் எடுத்திருக்கிறார்களாம். பேய் சீரியலில் கதையா முக்கியம் பேசமா சீரியலை பார்த்து ரசிங்க மக்களே என்கிறது விஜய் டிவி.

English summary
The new women centric Vijay TV horror Serial in Tamil is about the Dark Forces or called as Pilli Soonyam kind of terrific horror serial. The black arts are spine thrilling and screenplay looks very good. It airs from Monday to Saturday by 7pm. This new Tamil serial is a new genre in the recent times of horror films that are trending.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil