»   »  சினிமா பாடகரை சூப்பர் சிங்கராக தேர்வு செய்த விஜய் டிவி... 'இது மோசடி இல்லையா?'

சினிமா பாடகரை சூப்பர் சிங்கராக தேர்வு செய்த விஜய் டிவி... 'இது மோசடி இல்லையா?'

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் ஒரு பிரமாண்டமான குரல் தேடல் என்ற பெயரில் நடைபெற்று வரும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் போட்டியில், ஏற்கெனவே சில படங்களில் பின்னணி பாடிய ஒருவருக்கு முதல் பரிசு அளித்துள்ளது பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கடந்த 18ஆம் தேதி விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்-5 நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே நடந்தது.

இதில் பரீதா, ராஜகணபதி, சியாத், ஆனந்த் அரவிந்தாக்ஷன், லட்சுமி ஆகிய ஐந்து பேர் போட்டியிட்டார்கள்.

Super Singer 5: Vijay TV cheats viewers?

இவர்களில் பரீதா, ராஜகணபதி ஆகிய இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆனந்த் அரவிந்தாக்ஷன், சியாத், லட்சுமி ஆகிய மூவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

இந்தப் போட்டியில் பலரது எதிர்ப்பார்ப்புகளையும் தாண்டி கேரளாவின் அரவிந்தாக்ஷன் முதலிடத்தை வென்றார். இவருக்குத்தான் ரூ 75 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாகக் கிடைத்தது.

இப்போது இந்த ஆனந்த் அரவிந்தாக்ஷன் யார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன. இவர் ஒரு பின்னணிப் பாடகர். அவர் ஆரோகணம், நீர்ப்பறவை, 10 எண்றதுக்குள்ள, பாண்டிய நாடு, மதயானைக் கூட்டம், இவன் வேற மாதிரி உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் பாடியிருக்கிறார்.

புதிய குரல்களை அறிமுகப்படுத்தவே இந்தப் போட்டி என்று சொல்லிக் கொண்டு, ஏற்கெனவே அறிமுகமாகி பல படங்களில் பின்னணியும் பாடிய அரவிந்தாக்ஷனை விஜய் டிவி தேர்வு செய்திருப்பது மோசடிதானே? - என்று பலரும் இணையவெளியில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

English summary
Is Vijay TV cheating the viewers by selecting an already established singer Arvinthakshan as top singer in Super Singer -5.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil