»   »  விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் 4: வீடு வென்ற ஸ்பூர்த்தி, தங்கத்தை தானமாக கொடுத்த ஜெசிக்கா

விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் 4: வீடு வென்ற ஸ்பூர்த்தி, தங்கத்தை தானமாக கொடுத்த ஜெசிக்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு கிராம் தங்கம் பரிசாக கிடைத்தாலே அதை வீட்டுக்கு எடுத்துக்கொண் டு போய் அம்மாவிடம் கொடுக்கும் பிள்ளைகள்தான் இருக்கின்றனர். சூப்பர் சிங்கர் பாட்டுப்போட்டியில் பரிசாக கிடைத்த ஒரு கிலோ தங்கத்தை ஆதரவற்ற அனாதை குழந்தைகளுக்கு தானமாக கொடுத்துள்ளார் ஈழத்தமிழ் சிறுமியான ஜெசிக்கா.

விஜய் டி.வி, வழங்கும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்-4, பாட்டு போட்டிகள் பல கட்டங்களாக நடைபெற்றன. இப்போட்டியில் பல குழந்தைகள் கலந்து கொண்டாலும் முதல் ஆறு இடத்தை பரத், ஸ்ரீஷா, அனுஷ்யா, ஹரிப்ரியா, ஜெசிக்கா, ஸ்பூர்த்தி ஆகியோர் பிடித்தனர். அவர்களுக்கு ஒன்றரை கோடி பார்வையாளர்கள் வாக்களித்தனர்.

சூப்பர் சிங்கர் இறுதிச்சுற்று

சூப்பர் சிங்கர் இறுதிச்சுற்று

சூப்பர் சிங்கர் ஜூனியர் 4 இறுதிச்சுற்று சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள தங்கவேலு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த ஆறு பேரில் முதல் மூன்று இடங்களை ஹரிப்ரியா, ஜெசிக்கா, ஸ்பூர்த்தி ஆகியோர் பிடித்தனர்.

ரூ.5 லட்சம் பரிசு

ரூ.5 லட்சம் பரிசு

இதனால் போட்டியில் இருந்து வெளியேறிய பரத், ஸ்ரீஷா, அனுஷ்யா ஆகியோருக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

ஹரிப்பிரியாவிற்கு கார்

ஹரிப்பிரியாவிற்கு கார்

பின்னர் மூன்றாவது இடத்தை ஹரிப்ரியா பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது.

ஸ்பூர்த்திக்கு வீடு

ஸ்பூர்த்திக்கு வீடு

முதல் இடத்தை பிடித்த ஸ்பூர்த்திக்கு 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. பரிசு அறிவிக்கும் முன்னதாக பேசிய ஸ்பூர்த்தி உங்களுக்கு நன்றி, எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு, அதேசமயம் பயமாகவும் இருக்கு என்றார் அந்த சிறுமி.

ஒரு கிலோ தங்கம்

ஒரு கிலோ தங்கம்

இரண்டாவது இடத்தை கனடாவை சேர்ந்த இலங்கை தமிழரான ஜெசிக்கா பிடித்தார். அவருக்கு ஒரு கிலோ தங்கம் பரிசாக வழங்கப்பட்டது.

தானம் கொடுத்த ஜெசிக்கா

தானம் கொடுத்த ஜெசிக்கா

தங்கத்தை ஜெசிக்கா பெற்றுக் கொண்டதும் மேடையில் பேசிய அவரது பெற்றோர், பரிசு தொகை முழுவதையும் தமிழகத்திலும், இலங்கையிலும் உள்ள அனாதை குழந்தைகளுக்கு தருவதாக கூறினார்.

பிரபல பின்னணி பாடகர்கள்

பிரபல பின்னணி பாடகர்கள்

இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக பின்னணி பாடகர்கள் சங்கர் மகாதேவன், மனோ, சித்ரா, சுபா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

தனுஷ் - சிவகார்த்திக்கேயன்

தனுஷ் - சிவகார்த்திக்கேயன்

சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் கே.வி.ஆனந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.

வாழ்த்திய தனுஷ்

வாழ்த்திய தனுஷ்

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தனுஷ், போட்டியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு வாழ்த்தினார். பெற்றோர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து பரிசுகளை வழங்கினார்.


மேலும் இக்கல்லூரியின் நிறுவனரான முன்னாள் எம்.பி. தங்கபாலுவும் கலந்து கொண்டார்.

English summary
The Winner of Airtel Super Singer Junior 4 is Spoorthi. Predicting the winner is very difficult in this season as all the finalists have excellent talents in them.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil