சபாஷ்! சரியான சங்கமம்.. சூப்பர் சிங்கர் சீசன் 11 & குக் வித் கோமாளி மெகா சங்கமம்!
சென்னை: தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மக்களின் மனம் கவர்ந்த சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் இணையும் மெகா சங்கமம் ஒன்று நடைபெற உள்ளது. தொலைக்காட்சியில் இது போன்றதொரு நிகழ்வு முதன்முறையாக அரங்கேறுகிறது.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி, பத்தாண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதேபோல், சமையல் போட்டியுடன் நகைச்சுவையையும் சேர்த்து வழங்கிய குக் வித் கோமாளி, ஆறாவது சீசனையும் கடந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

"சூப்பர் சிங்கர் சீசன் 11 & குக் வித் கோமாளி மெகா சங்கமம்" என்ற இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி, இந்த வார இறுதியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த இரண்டு பிரபல நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்களும் இதில் ஒன்றாகக் கலந்துகொள்கின்றனர்.
சூப்பர் சிங்கர் நட்சத்திரப் பாடகர்களும், குக் வித் கோமாளி நகைச்சுவைக் கலைஞர்களும் இணைந்துள்ள புரமோ வீடியோக்கள், தற்போது இணையத்தில் வைரலாகி, பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

குக் வித் கோமாளி சமையல் செய்யும் உணவுகளை பாடல்கள் மூலம் சூப்பர் சிங்கர் போட்டியாளர்கள் கண்டறியும் டாஸ்க்குகளும், சூப்பர் சிங்கர் போட்டியாளர்களின் கலாட்டாக்களும் புரமோவில் இடம்பெற்றுள்ளன. சூப்பர் சிங்கர் நடுவரான இயக்குநர் மிஷ்கினின் பிறந்தநாளை அனைவரும் சேர்ந்து கொண்டாடி அவரை நெகிழ வைக்கும் காட்சிகளும் வெளியாகி, நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் விஜய் தொலைக்காட்சி, இந்த சங்கம நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை வெகுவாக மகிழ்வித்துள்ளது. இனிமையான இசையும், நகைச்சுவையும் ஒன்றிணையும் இந்த சங்கமத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

"சூப்பர் சிங்கர் சீசன் 11 & குக் வித் கோமாளி மெகா சங்கமம்" நிகழ்ச்சி, வரும் செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், மாலை 6:30 மணிக்கு விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும்.


Click it and Unblock the Notifications











