»   »  சன்டிவியில் பானுப்பிரியா நடிக்கும் யமுனா... புது சீரியல்

சன்டிவியில் பானுப்பிரியா நடிக்கும் யமுனா... புது சீரியல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான டிவி சீரியல்கள் எல்லாம் ஒவ்வொன்றாக முடிந்து வருகின்றன. பொம்மலாட்டம், பொன்னூஞ்சல் போன்ற பல சீரியல்கள் முடிந்து விட்டன. இப்போது சன்டிவியில் யமுனா என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

நீண்ட காலத்திற்குப் பிறகு சன்டிவி சீரியலில் நடிக்கிறார் பானுப்பிரியா. அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் சுரேஷ். இவர்கள் இருவருமே எண்பதுகளில் சினிமாவில் நாயகி, நாயகனாக கலக்கியவர்கள்.

இப்போது சுரேஷ் பானுப்பிரியா இருவரும் சன்டிவியில் ரசிகர்களை கண்ணீர் விட யமுனா சீரியல் மூலம் களமிறங்கியுள்ளனர்

கண்ணழகி பானுப்பிரியா

கண்ணழகி பானுப்பிரியா

ஆந்திராவின் ராஜமுந்திரியில் பிறந்த பானுப்பிரியா எண்பதுகளில் மெல்லப் பேசுங்கள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

விளம்பரங்கள் டிவி சீரியல்கள்

விளம்பரங்கள் டிவி சீரியல்கள்

சினிமாவில் பிரபலமாக காரணம் இவரது நடிப்பும் நடனமும்தான். கண்களால் பேசிய பானுப்பிரியாவிற்கு ஐ டெக்ஸ் விளம்பர வாய்ப்பு வந்தது. சின்னத்திரையில் தூர்தர்சனில் விஸ்வாமித்ரா சீரியலில் நடித்தார். தொடர்ந்து பெண், சக்தி, வாழ்க்கை, பொறந்த வீடா புகுந்த வீடா, விஜய் டிவியில் ஆஹா என பல சீரியல்களில் நடித்துள்ளார்.

அமெரிக்க மாப்பிள்ளை

அமெரிக்க மாப்பிள்ளை

அமெரிக்காவைச் சேர்ந்த ஆதர்ஷ் கவுசல் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் பானுப்பிரியா. சென்னை திரும்பிய பானுப்பிரியா மீண்டும் பல சீரியல்களிலும், சினிமாவிலும் அம்மா, அண்ணி கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

மீண்டும் சன் டிவியில் பானுப்பிரியா

மீண்டும் சன் டிவியில் பானுப்பிரியா

ஐம்பது வயதாகும் பானுப்பிரியா, மீண்டும் சன் டிவியில் யமுனா சீரியல் மூலம் ரசிகர்களை சந்திக்க வருகிறார். இவருக்கு ஜோடி சுரேஷ். விஜய் டிவியில் சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று ருசி பார்த்து மதிப்பெண் போட்டு வந்தார் சுரேஷ். மொட்டையடித்து வில்லனாக தோன்றிய சுரேஷ் இப்போது சீரியலில் ஹீரோவாக நடிக்கிறார்.

அழுகாச்சி சீரியலா?

அழுகாச்சி சீரியலா?

சீரியல் என்றாலே அழுகை என்று ஆகிவிட்டது. கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சினைகள், கண்ணீர், சோகம் என்றுதான் முன்னோட்டம் வருகிறது. யமுனா அனைவரையும் கவர்வாளா? பானுப்பிரியாவின் கண்ணீர் இல்லத்தரசிகளை கவருமா பார்க்கலாம்.

English summary
SunTV will telecast new serial Yamuna. Eighties hero and heroine Suresh and Bhanupriya are playing lead role in the serial bane Yamuna.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil