இன்னைக்கு வெயிட்டான சம்பவம் இருக்கு… ப்ரோமோவை பார்த்து மிரளும் ரசிகர்கள் !

சென்னை : ஜீ தமிழின் சர்வைவர் இன்றைய ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு மிக கடினமான டாஸ்க் வழங்கப்பட்டு உள்ளது.

சர்வைவர் ரியாலிட்டி ஷோ ஆடியன்ஸ் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் போட்டி, வாக்குவாதம், பொறாமை என நிகழ்ச்சி தற்போது சூடு பிடித்திருக்கிறது.

நேற்று ஒளிபரப்பான எபிசோடில் இந்துஜா எலிமினேட் செய்யப்பட்டார்.

தரமான ப்ரோமோ

தரமான ப்ரோமோ

சர்வைவர் நிகழ்ச்சியில் இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது. சிறந்த வீரருக்கான போட்டி நடைபெறுகிறது. இதில் ஐஸ்வர்யா, நந்தா, உமாபதி ராமையா, லக்கி நாராயணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதில் போட்டியாளர்கள் தங்களது தோளில் அதிகமான எடையை சுமக்க வேண்டும் அதிகமான எடையை சுமந்து நீண்ட நேரம் இருக்கும் போட்டியாளரே சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுவர். முதலில் 7.5 கிலோவும் பின்பு அதிகமான எடையை அவர்களின் தோளில் ஏற்றிக்கொண்டே வருகின்றனர். ப்ரோமோவின் இறுதியில் அர்ஜுன் அலறி அடித்தபடி ஓடுகிறார். இதை பார்த்த ரசிகர்கள் அப்போ இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கு என்று இன்றைய நிகழ்ச்சிக்காக காத்து இருக்கின்றனர்.

வெளியேறிய இந்துஜா

வெளியேறிய இந்துஜா

முன்னதாக நேற்று ஒளிபரப்பான எபிசோடில் மூன்றாம் உலக சேலன்ஜில் தோற்று சர்வைவர் போட்டியிலிருந்து இந்துஜா வெளியேற்றப்பட்டார். நேற்றைய ஷோவில் இது ஹைலைட்டாக இருந்தது. பார்வதியின் அனத்தல் என்டர்டெய்ன்மென்ட்டை எங்கே இழந்து விடுவோமோ என்று பயந்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக மீண்டும் மூன்றாம் உலகத்துக்கு ஷிஃப்ட் ஆனார் பார்வதி.

என்னால நடிக்க முடியல

என்னால நடிக்க முடியல

முன்னதாக பார்வதியை தனியான விசாரணைக்கு அழைத்த அர்ஜுனிடம் ஒவ்வொருத்தரும் நடிக்கிறாங்க. கிங்மேக்கர் நந்தா சொல்றதைத்தான் எல்லோரும் கேட்குறாங்க. என்னால அங்க நடிக்க முடியலை. நான் ஒரிஜினலா இருக்கிறேன் என்று அப்படி இப்படினு பேசி அர்ஜுனுக்கே தலை சுற்றலை ஏற்படுத்தும் விதமாக பார்வதி பேசினார்.

மீண்டும் ஒரு சான்ஸ்

மீண்டும் ஒரு சான்ஸ்

சர்வைவர் கேமில், ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு உத்தி வெச்சிருப்பாங்க. நீங்க ஏன் அதையெல்லாம் பர்சனலா எடுத்துக்கணும் என்றார். மேலும், இந்த விளையாட்டை தொடர உங்களுக்கு இன்னொரு சான்ஸ் கொடுத்தா போவீங்களா? என்று கேட்டவுடன் ஓ மை காட்... ஓ மை காட் என்று மீண்டும் மூன்றாம் உலகத்திற்கு நேற்றைய எபிசோடு இவ்வாறாக முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X