»   »  நியூஸ் 7 டிவியில் சுற்றலாம் சுவைக்கலாம்...

நியூஸ் 7 டிவியில் சுற்றலாம் சுவைக்கலாம்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

உணவு சமைப்பது எப்படி ஒரு கலையோ அதுபோல உணவை சுவைப்பதும் ஒரு கலைதான். சுவையான உணவுகளை தேடித் தேடி உண்பவர்கள் இன்றைக்கு இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்காகவே தொலைக்காட்சிகளில் சமையல் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது.

சமையல் தொடர்பான நிகழ்ச்சி என்றாலே இல்லத்தரசிகளிடையே தனி வரவேற்புதான். அதுவும் ருசி ருசியாய் சமைக்கும் இடத்திற்கே சென்று அந்த உணவின் வரலாறு பற்றியும் கதை கதையாக சொன்னால் கேட்கவா வேண்டும் பார்த்தலே நா ஊறும். அந்த ஊர் பக்கம் போனால் உணவை நினைவு வைத்து சுவைக்கத் தோன்றும்

நியூஸ் 7தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிறு தோறும் பிற்பகல் 12.30 மணி முதல் 1.00 மணி வரை ஒளிபரப்பாகும் சுவையான நிகழ்ச்சி "சுற்றலாம் சுவைக்கலாம்" நிகழ்ச்சியும் இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சிதான்.

மதுரையின் உணவு

மதுரையின் உணவு

மதுரையை சுற்றுவது ஒரு சுவையான அனுபவம். எந்த ஊரைச் சுற்றுவதுமே,சுவையான அனுபவமாக அமைய வேண்டுமென்றால் அந்த ஊரின் உணவை சுவைத்துப் பார்க்க வேண்டும்.

வெள்ளை ஆப்பம்

வெள்ளை ஆப்பம்

தூங்கா நகரமான மதுரையைத் தூங்காமல் சுற்றி வந்திருக்கிறார்கள் சுற்றலாம், சுவைக்கலாம் நிகழ்ச்சிக்காக. பல வருடங்களாக பாரம்பரியம் மாறாமல் வெள்ளை ஆப்பம் மற்றும் கார சட்னியை வழங்கிவரும் மதுரை கோபு ஐயங்கார் ஹோட்டல் பற்றி சொல்லியிருக்கிறார்கள்.

காபியின் சுவை

காபியின் சுவை

விசாலம் காபி கடைக்குப் போய், அக்கு வேறு,ஆணி வேராக ,அவருடைய கடை காப்பி மட்டும் தனித்த ருசியுடன் திகழும் ரகசியத்தை விவரித்திருக்கிறார்கள்.

நாட்டுக்கோழி குழம்பு

நாட்டுக்கோழி குழம்பு

கோழியை துரத்திப்பிடித்து சுவையான குழம்பாகவும்,வறுவலாகவும் மாற்றி கண்ணுக்கு சுவையாகவும் பதிவு செய்து இருக்கிறார் இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் கார்த்திக் கேசவ்.

அடுத்து எந்த ஊர்

அடுத்து எந்த ஊர்

மூன்று வாரங்கள் மதுரை நிகழ்ச்சிக்குப் பிறகு, அடுத்தடுத்து எந்தெந்த ஊர்களுக்கு போவது என்பது பற்றி தீவிரமாக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். நிகழ்ச்சியை ரசிச்சுபாருங்க, மதுரை போகும்போது ருசிச்சு பாருங்க என்று சொல்கிறார்.

ஞாயிறு மதியம் பாருங்க

ஞாயிறு மதியம் பாருங்க

வாரந்தோறும் ஞாயிறு ஞாயிறு தோறும் பிற்பகல் 12.30 மணி முதல் 1.00 மணி வரை நியூஸ் 7தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .இதன் மறு ஒளிப்பரப்பு அன்றே ஞாயிறு இரவு 10.30 மணி முதல் 11.00 மணிவரை காணலாம்.

English summary
A new Cookery program Sutralaam Suvaikkalam on News 7 TV every Sunday at 12.30 PM re telecast at 10.30 PM.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil