»   »  விபச்சார வழக்கில் சிக்கிய ஸ்வேதா பாசு சின்னத்திரை வில்லியானார்!

விபச்சார வழக்கில் சிக்கிய ஸ்வேதா பாசு சின்னத்திரை வில்லியானார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவி சீரியல்களில் வில்லியாக நடிக்கப் போகிறார் நடிகை ஸ்வேதாபாசு. சினிமாவில் அவரை கைதூக்கிவிட ஆட்கள் யாரும் இல்லை என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறாராம்.

நடிகை ஸ்வேதாபாசுவை யாரும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. குழந்தை நட்சத்திரமாக நடித்த போது தேசிய விருது பெற்ற ஸ்வேதா பாசு, குமரியான பின்னர் சில படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு விபச்சார வழக்கில் கைதாகி ஊடகங்களில் பிரபலமானார்.

கைவிட்ட சினிமா

கைவிட்ட சினிமா

தெலுங்கு, இந்தி படங்களில் ஸ்வேதாபாசு, ராரா சாந்தமாமா ஆகிய தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். சினிமா உலகில் ஏனோ பிரபலமாகவில்லை ஸ்வேதா.

விபச்சார வழக்கில் கைது

விபச்சார வழக்கில் கைது

விபச்சாரம் செய்ததாக அவரை போலீஸ் கைது செய்யவே, ஊடகங்களில் பிரபலமானார். அத்தோடு அவரது சினிமா வாழ்க்கைக்காக கதவும் மூடப்பட்டது. ஸ்வேதா கைதான நேரத்தில் பலரும் அவருக்கு வாய்ப்பு தருவதாக கூறினார் ஆனால் யாரும் ஸ்வேதாவை கண்டு கொள்ளவில்லை.

சீரியல் வாய்ப்பு

சீரியல் வாய்ப்பு

சும்மா இருந்தால் வாழ்க்கையை ஓட்டவேண்டுமே... அதனால் தனக்கு வந்த டிவி சீரியல் வாய்ப்புகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளார் ஸ்வேதா.

பாலியல் தொழிலாளி வேடம்

பாலியல் தொழிலாளி வேடம்

தெலுங்கு, இந்தி சீரியல்களில் வாய்ப்பு வந்தாலும், பாலியல் தொழிலாளி வேடம் வரவே அதை மறுத்து விட்டாராம் ஸ்வேதா பாசு.

வில்லி வேடம்

வில்லி வேடம்

அதே நேரத்தில் டிவி சீரியலில் வில்லி வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஒத்துக்கொண்டு விட்டதாக சொல்கின்றனர். விரைவில் இந்தி டிவி சீரியல்களில் உருட்டி, மிரட்டி நடிக்கும் ஸ்வேதாவை பார்க்கலாம். எப்படியும் டப்பிங் செய்து தமிழில் ஒளிபரப்பத்தானே போகிறார்கள்.

டிவியில் 14 ஆண்டுகளுக்குப் பின்

டிவியில் 14 ஆண்டுகளுக்குப் பின்

இந்தி சீரியல்களில் 14 ஆண்டுகளுக்கும் முன் நடித்துள்ள ஸ்வேதா பாசு தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களில் இருந்து மீண்டு மீண்டும் டிவி சீரியல்களில் தலை காட்டப்போகிறார். இதனால் மீண்டும் மகிழ்ச்சியான மனநிலைக்கு திரும்பியுள்ளாராம்.

English summary
Swetha bashu is planning to act in some Hindi TV serials. She is returning back to Television series after 14 long years. She will be seen in a horror series titled 'Darr Sabko Lagta Hai'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil