»   »  கோபக்கார பிரகாஷ்... ரொமான்ஸ் கௌதம்... அப்பாவி வெற்றி... 2015 டாப் ஹீரோஸ்

கோபக்கார பிரகாஷ்... ரொமான்ஸ் கௌதம்... அப்பாவி வெற்றி... 2015 டாப் ஹீரோஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா எப்படி ஹீரோக்களின் ஆதிக்கம் நிறைந்த ஒரு துறையோ அதேபோல சீரியல் என்பது ஹீரோயின்களின் ஆதிக்கம் நிறைந்த இடம். எப்பவுவே ஹீரோயின்களை பற்றி மட்டுமே எழுதுவீர்களா? எங்களைப் பற்றியும் எழுதுங்களே என்று ஏங்கிப்போயிருக்கும் இளம் தலைமுறை நடிகர்களையும் மக்களிடம் அறிமுகப்படுத்துகிறோம்.

ஒவ்வொரு எபிசோடிலும் சில நிமிடங்கள் மட்டுமே வந்து போனாலும் மனதில் நிற்கும் இளைய நடிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். தெய்வமகள் பிரகாஷ் இதில் டாப் லிஸ்டில் இருக்கிறார். சீரியலின் பலமே பிரகாஷ்தான். ஹீரோயின்கள் ஆதிக்கம் செலுத்தும் சின்னத்திரையில், ஹீரோ ஆதிக்கம் இருக்கிறது என்றால் அது தெய்வமகள்தான்.

வாணி ராணியில் கவுதம், லட்சுமி வந்தாச்சு வெற்றி, தாமரை துவரகேஷ், பிரியசகி கார்த்திக், பாசமலர் பூவரசு என சீரியல்களில் ஹீரோக்களின் நடிப்பும் இல்லத்தரசிகளை கவரத்தான் செய்கிறது. அதுவும் கேளடி கண்மணியின் ஹீரோ யுகியின் நடிப்பும், வம்சம் பொன்னுரங்கத்தின் வெகுளித்தனமான பேச்சுக்கும் ரசிகைகளை இருக்கிறார்களாம்

தெய்வமகள் பிரகாஷ்

தெய்வமகள் பிரகாஷ்

அண்ணியாரை எதிர்த்து பிரகாஷ் செய்யும் அட்ராசிட்டி... அண்ணியாரின் வில்லத்தனங்களை கார்னர் செய்து ஜெயிக்கும் போதும் சரி... மனைவி சத்யாவிடம் கோபத்தோடு பேசுவதாகட்டும், அசத்தல் பிரகாஷ் என்கின்றனர் சீரியல் ரசிகைகள்.

பிரியசகி கார்த்திக்

பிரியசகி கார்த்திக்

பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம், அலட்டல் இல்லாத நடிப்பு என இவர்கிட்ட என்னமோ இருக்குப்பா என்கின்றனர் தாமரை, பிரியசகி சீரியல் பார்ப்பவர்கள்.

வாணி ராணி கௌதம்

வாணி ராணி கௌதம்

கோபக்கார இளைஞன், கொஞ்சும் போது ரொமான்ஸ் கண்ணன் என வாணி ராணியின் இளமை பட்டாளம்தான் கௌதம்தானாம். அதுவும் கௌதம் அடிவாங்கினால் தாங்கமுடியாது என்கின்றனர் அவரது ரசிகைகள்.

லட்சுமி வந்தாச்சு – வெற்றி வேல்

லட்சுமி வந்தாச்சு – வெற்றி வேல்

சந்திரலேகாவில் சப்.இன்ஸ்பெக்டர், லட்சுமி வந்தாச்சு சீரியலில் அமைதியான வெற்றிவேல் என இருமுகம் காட்டும் வெற்றிவேலுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர்.

வம்சம் – பொன்னுரங்கம்

வம்சம் – பொன்னுரங்கம்

மதுரை தமிழில் பேசி கலெக்டர் அர்ச்சனாவின் கணவராய் நடிக்கும் பொன்னுரங்கம் எல்லோருக்கு பிடித்தமான ஹீரோ. வில்லன்களுக்கு பிடிக்காதவர் இந்த பொன்னுரங்கம்.

அன்னக்கொடியும் 5 பெண்களும் - சித்தார்த்

அன்னக்கொடியும் 5 பெண்களும் - சித்தார்த்

அழகான பையான இருக்காம்பா என்று இளம் பெண்களை பேசவைத்துள்ளார் சித்தார். ரொம்ப ஸ்மார்ட்டான நடிப்புதான். ஆனால் பெண்கள் பட்டாளத்திற்கு முன்னால் வாய்ப்பு கொஞ்சம் கம்மிதான்.

அபூர்வ ராகங்கள் - மகாதேவ்

அபூர்வ ராகங்கள் - மகாதேவ்

சன் டிவியின் அபூர்வ ராகங்கள் சீரியலின் அழகான கதாநாயகன் மகாதேவ். பவித்ராவிற்கு ஏற்ற பாந்தமான ஹீரோ என்கின்றனர் சீரியலை தொடர்ந்து பார்ப்பவர்கள்.

ஆண்டாள் அழகர் - அழகர்

ஆண்டாள் அழகர் - அழகர்

கிராமத்து இளைஞனாய் அறிமுகமாகி, இப்போது வக்கீலாய் வளர்ந்துள்ள அழகர் நடிப்பு கிராமத்து பெண்களுக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.

பாசமலர் - பூவரசு

பாசமலர் - பூவரசு

பாசமான அண்ணனாய் பாசமலரில் நடிக்கும் பூவரசு, ஆண்டாள்அழகரில் கிராமத்து கதாபாத்திரத்தில் சக்தியாய், நடித்து கிராமங்கள் மட்டுமல்ல நகரங்களில் உள்ள இல்லத்தரசிகளின் உள்ளங்களிலும் இடம் பிடித்திருக்கிறாராம்.

பிரியமானவள் - நடராஜ்

பிரியமானவள் - நடராஜ்

அம்மாவிற்குப் பிடித்தமான பிள்ளை, அடாவடி அவந்திகாவின் அப்பாவி கணவன் என்று வளையவரும் நடராஜ் பிடித்தமான சீரியல் நாயகனாம்.

English summary
Here is the list of the best serial Heros of 2015.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil