»   »  இம்புட்டூண்டு ரத்தம்தானா பாஸ்??... அம்சம்டா... இது வம்சம்டா!

இம்புட்டூண்டு ரத்தம்தானா பாஸ்??... அம்சம்டா... இது வம்சம்டா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வரவர சினிமா மற்றும் சீரியல்களில் லாஜிக்கை சல்லடை வைத்துத் தான் தேடிப் பார்க்க வேண்டி இருக்கிறது. அந்தளவிற்கு பார்ப்பவர்களை முட்டாளாக்கும் வகையில் காட்சிகள் அமைகின்றன.

அந்தவகையில் வம்சம் சீரியல் பார்த்தால் நிச்சயம் வயிறு குலுங்க சிரிக்கலாம். அந்தளவிற்கு லாஜிக்கே இல்லாமல் காட்சிகள் அணிவகுத்து நமக்கு கிச்சுகிச்சு மூட்டும்.

கடந்தவாரம் கூட விறுவிறுப்பான காட்சி ஒன்றில், பரபரப்பிற்கு பதிலாக பார்க்க பார்க்க சிரிப்பு தான் வந்தது.

போதும் கலெக்டர் மேடம்...

போதும் கலெக்டர் மேடம்...

டாக்டர் மதனுக்கும் அவரது மாமா மகளுக்கும் திருமணம். திருமணத்தை தடுத்து நிறுத்தி பூமிகாவின் வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் அர்ச்சனா. இன்னும் எத்தனை தடவை தான் மதன் கல்யாணத்தை நிறுத்துவீங்க மேடம்.

கடமை...

கடமை...

இது ஒருபுறம் இருக்க மற்றொரு டாக்டரான குணால் என்பவரால் பலாத்காரம் செய்யப்பட்ட அருக்காணியின் வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டிய கடமை பொன்னுரங்கத்திற்கு.

சொதப்பல் காட்சிகள்...

சொதப்பல் காட்சிகள்...

உண்மையிலேயே விறுவிறுப்புகளுக்கு பஞ்சமில்லாத கதைக்களம் தான். ஆனால், காட்சிகளை அமைப்பதில் தான் சொதப்பி விடுகின்றனர் படக்குழுவினர்.

கத்திக் குத்து...

கத்திக் குத்து...

அருக்காணியுடன் காரில் வரும் பொன்னுரங்கத்தை வழியில் மறித்து குணாலின் அடியாட்கள் சண்டை போடுகின்றனர். அப்போது அருக்காணிக்கு பதிலாக தவறுதலாக பொன்னுரங்கத்தைக் குத்தி விடுகிறார் குணால்.

என்ன பாஸ் இது...

என்ன பாஸ் இது...

அயய்யோ எனப் பதறி நிமிர்ந்தால், பொன்னுரங்கத்தின் வயிற்றில் இருந்து ரோஸ் கலரில் ரத்தம் வெளியேறி நம்மை இன்னும் பீதியில் அலறச் செய்கிறது.

இம்புட்டூண்டு ரத்தம்தானா பாஸ்!

இம்புட்டூண்டு ரத்தம்தானா பாஸ்!

அதோடு ஏதோ ஏப்ரல் 1ம் தேதி சிறு பிள்ளைகள் கொட்டிய விளையாடிய மை போல், கறை நல்லது தான் என சிறிதளவு மட்டுமே அந்தக் கறை உள்ளது. ஏன் பாஸ் பொன்னுரங்கம் வயித்துல அவ்ளோ தான் ரத்தமா எனக் கேட்காமல் இருக்க முடியவில்லை.

முடியலை...

முடியலை...

குறும்படங்களில் கூட சிவப்புச் சாயத்தைப் பாக்கெட்டில் அடைத்து, கத்தியால் குத்தியதும் ரத்தம் பீறிட்டது போல் பெர்பெக்டாக காட்சி அமைக்கிறார்கள்.

மொக்கையா இருக்கேபா!

மொக்கையா இருக்கேபா!

ஆனால், இந்தியா தாண்டி சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் பார்க்கப்படும் ஒரு சீரியலில், அதுவும் 8.30 மணி ஸ்லாட்டில் ஒளிபரப்பாகும் சீரியலில் இப்படி ஒரு மொக்கையை சகிக்க முடியவில்லை.

பறக்கும் ‘பாய்’...

பறக்கும் ‘பாய்’...

சரி அதையாவது பொறுத்துக் கொள்ளலாம் என்றால், கணவரைத் தேடி முத்து என்ற தம்பியை அனுப்புகிறார் அர்ச்சனா. அவரும் ஏதோ சொல்லி வைத்தார் போல, பொன்னுரங்கம் விழுந்து கிடக்கும் பகுதிக்கு அடுத்த நொடியே வந்து நிற்கிறார். பறக்கும் பாய் எதுவும் வைத்திருப்பாரோ?

மாமா.. மாமா...

மாமா.. மாமா...

அதுவும் இங்க தான தொலைச்சேன் எனத் தேடுவது போல், மாமா, மாமா என்று வேறு தெருவில் நின்று கூவுகிறார். சில நிமிடங்களிலேயே அதுவும் நடந்தே வந்து விடும் தூரத்தில் தான் அந்த மண்டபம் இருக்கிறதா? அப்படியானால் தத்தி தத்தியாவது பொன்னுரங்கம் அங்கு போய் விடலாமே.

எங்க போனீங்க மக்களே...

எங்க போனீங்க மக்களே...

பெரிய சண்டை நடக்கிறது, ஒரு பெண்ணை கொலை செய்ய முயற்சி, கடைசியில் ஒருவருக்கு கத்திக் குத்துனு இவ்ளோ களேபரம் நடந்த பிறகும், அப்பகுதியில் ஒரு ஈ காக்கா கூட எட்டிப் பார்க்கவில்லை. வெள்ளம் காரணமாக எல்லாரும் வீட்டைக் காலி பண்ணி வேற ஏரியாவுக்கு போயிருப்பாய்ங்களோ!!!!

கேட் வாக்...!

கேட் வாக்...!

பொன்னுரங்கத்தைத் தேடி வரும் முத்துவும் கூட அந்த ரோஸ் கலர் ரத்தம் சிந்தியிருக்கிறதா என்பதைக் கூட பார்க்கவில்லை. பூனை நடை போட்டு, பேஷன் ஷோ போல நடந்து விட்டு சென்று விடுகிறார்.

தாராளமா சிரிக்கலாம்...

தாராளமா சிரிக்கலாம்...

ஆனால், இத்தனைக் கொடுமைகளையும் சகித்துக் கொண்டு இந்த சீரியலைப் பார்ப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. மற்ற சீரியல்களில் நிஜமாகவே சீரியஸ் காட்சிகள் ஒளிபரப்பாக, வம்சம் போங்க சார் சீரியஸா காமெடி பண்ணிட்டு' என ஜாலியாக பார்த்து சிரிக்க முடிகிறது.

English summary
The shots and scenes of Vamsam tamil serial, telecasting in Sun TV is really funny now. Even the serials team turns comedy because of poor performance.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil