»   »  இன்று இரவு பிக் பாஸ் வீட்டிற்கு யார் வருகிறார்கள் தெரியுமா? #BiggBossTamil

இன்று இரவு பிக் பாஸ் வீட்டிற்கு யார் வருகிறார்கள் தெரியுமா? #BiggBossTamil

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு ப்ரோ கபடி லீக் போட்டிகளில் கலந்து கொள்ளும் தமிழ் தலைவாஸ் அணி இன்று வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் உலக நாயகன் கமல் ஹாஸன். இந்நிலையில் அவர் கபடி போட்டி தொடரின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த கபடி அறிவிப்புக்கு கடுந்தமிழில் ட்வீட்டி தமிழகத்தையே தூங்கவிடாமல் செய்தார் கமல்.

கபடி

கபடி

கமல் கபடி பற்றி தூய தமிழில் ட்விட்ட ஆளாளுக்கு அவர் அரசியலுக்கு வரப் போகிறார் என்று தவறாக நினைத்துக் கொண்டனர். நாளை ஆங்கில பத்திரிகைகளில் வரும் சேதி என்று இரவில் ட்வீட்டி பலரின் தூக்கத்தை கெடுத்தார் கமல்.

புஸ்

புஸ்

மறுநாள் காலை ஆங்கில பத்திரிகைகளில் பார்த்தால் கமல் கபடி போட்டித் தொடரின் தூதுவராக நியமிக்கப்பட்ட செய்தி தான் வந்தது. இதை பார்த்த மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

தமிழ் தலைவாஸ்

கபடி லீக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள தமிழ் தலைவாஸ் அணி பிக் பாஸ் வீட்டிற்கு இன்று வருகிறது. இதை பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதுக்கு தானா?

இதுக்கு தானா?

கமல் ஹாஸனிடம் ஒரு விஷயத்தை சொல்லி விளம்பரம் செய்யச் சொன்னால் அருமையாக செய்துவிடுவார் என்பது தற்போது அனைவருக்கும் புரிந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamil Thalaivas Kabaddi team is visiting Big Boss house today. Kamal Haasan who is the brand ambassador of this league is the host of Big Boss.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil