twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Tamil selvi serial:சொன்னபடி தமிழ்ச்செல்வி கோல்ட் மெடல் வாங்கிட்டாளே!

    |

    சென்னை: சன் டிவியின் தமிச்செல்வி சீரியலில் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு படிக்கப்போன தமிழ்ச்செல்வி, சொன்னபடி கோல்ட் மெடல் வாங்கிவிடுகிறாள்.

    தன்னுடன் படித்த மாணவி இலக்கியா என்னென்ன தில்லு முல்லுகள் செய்தாலும்,,அனைத்திலும் ஜெயித்து இப்போது கல்லூரிக்கு பெருமை சேர்க்கும்படி கோல்ட் மெடல் வாங்கிட்டா.

    இலக்கியா ரொம்ப கோவத்தில் இருக்க, அவளுக்கு புத்திமதி சொல்லிவிட்டு, கிராமத்துக்கு கிளம்பறா தமிழ்ச்செல்வி. வீட்டில் எல்லாரும் தமிழ்ச்செல்வி கோல்ட் மெடல் வாங்கி வருவதை பார்க்க ஆவலோடு காத்து இருக்கிறார்கள்.

    தமிழ்ச்செல்விக்கு பிரச்சனை

    தமிழ்ச்செல்விக்கு பிரச்சனை

    தமிழ்ச்செல்விக்கு ஊரில்தான் கொம்பன் பிரச்சனை என்று, படிக்க வந்தால் கிராமத்தில் இருந்து வந்த பொண்ணுன்னு கல்லூரியில் புரஃபசர் முதற் கொண்டு தமிழ்ச் செல்வியை செமினார் கிளாஸ் அட்டென்ட் பண்ணக்கூடாது என்று கண்டமேனிக்குத் திட்டறாங்க. இப்போது நிறைய கிராமங்களில் இருந்து பெண் பிள்ளைகள் நகரத்துக்கு படிக்கப் போகும் நிலையில், கல்லூரியில் இந்த மாதிரி காட்சிகள் வைப்பதைத் தவிர்த்தால் கிராமத்து பிள்ளைகள் கல்லூரிக்கு படிக்க வரும்போது தைரியத்துடன் வருவார்கள்.

    இலக்கியா பிரச்சனை

    இலக்கியா பிரச்சனை

    கூடவே ஒன்றாக அறையில் தங்கி இருக்கும் இன்னொரு மாணவியான இலக்கியா, தமிழ்ச் செல்வியை மிஞ்சி தான் கோல்ட் மெடல் வாங்கிடணும்னு பல வேலைகளை தமிழ்ச்செல்விக்கு எதிராகப் பார்க்கிறாள். பாலில் தூக்க மாத்திரை கலப்பது, பேதி மாத்திரை கலப்பது என்று. இப்படியும் படிக்கும் பெண் பிள்ளைகள் இருப்பார்களா என்று எண்ண தோன்றினாலும், இதை பெரிது படுத்தி காட்டும் போது, இதுவும்கூட நாம் கல்லூரி ஹாஸ்டலில் மட்டுமல்ல, வேலைக்காக ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பெண்களுக்கும் பயத்தை உண்டாக்கிவிடக் கூடாது .

    தமிழ்ச்செல்வி செமினாரில்

    தமிழ்ச்செல்வி செமினாரில்

    தமிழ்ச் செல்வியை செமினாருக்கு வரக் கூடாது என்று சொல்ல எந்த புரஃபசருக்கும் உரிமை இல்லை. இதை எப்படி இவர் சொல்லலாம். இப்படியும் சில கல்லூரிகளில் நடக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதாகத்தான் இந்த காட்சி இருக்கிறது என்றாலும், கல்வியில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று எல்லாரும் குரல் கொடுக்கும்போது,இது மாதிரி சீரியல்கள் எடுப்பவர்களுக்கு என்று இதில் ஒரு அக்கறை வேண்டாமா?

    வருடங்களுக்கு முன்

    வருடங்களுக்கு முன்

    ஒரு பத்து இருபது வருடங்களுக்கு முன்னால் சென்னையில் கூட ,மிக தைரியமாக பேருந்தில், அலுவலகத்தில், வேலை தேடிப்போகும் இடங்களில் தமிழில பேசிவிட முடியாது.அதாவது வாயைத் திறந்தாலே ஆங்கிலத்தில் பேசி ,கிராமத்திலிருந்து வந்திருப்பவர்களை பயமுறுத்தி விடுவார்கள். காரணம், அப்போது ஆங்கிலத்தில் பேசுவது மட்டுமே ஸ்டைலிஷ் என்கிற முட்டாள்தனமான எண்ணமும் இருந்தது.இப்போது வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் எல்லாம் தமிழ் பேச ஆசைப்பட்டு கற்றுக்கொள்ளும் போது, பட்டினத்துக்கு படிக்க வரும் மாணவர்கள் ஆங்கிலம் தெரியவியல்லையே என்று தாழ்வு மனப்பான்மை கொள்ளக் கூடாது.

    English summary
    hamilchelvi, who was studying from village to city in Sun TV's Tamilcheli serial, bought the gold medal.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X