»   »  டிவி சீரியல்களில் அசால்டாக அரங்கேறும் கொலைகள்...

டிவி சீரியல்களில் அசால்டாக அரங்கேறும் கொலைகள்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சீரியல்களில் இன்றைக்கு கொலைகள் அதிகரித்து வருகின்றன. கள்ளக்காதல் கதைகள், அடுத்தவன் கணவனை அபகரிப்பது. மனைவியின் தங்கையை மணக்க நினைப்பது என கதைகள் சீரியல்களாக எடுக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது துப்பாக்கி கலாச்சாரம், கொலை செய்ய திட்டமிடுவது, சொத்துக்காக கொலை செய்வது அதிகரித்து வருகிறது.

சன்டிவியில் மட்டுமல்லாது, விஜய் டிவி, ஜீ தமிழ் டிவி ஆகிய சீரியல்களிலும் கொலைகள் அதிகரித்து வருகின்றன. சொந்த மருமகனை கொலை செய்வது, தம்பியின் மனைவிக்கு அவப்பெயர் உண்டாக்குவதற்கு திட்டம் தீட்டுவது போன்ற சீன்கள் அதிகம் வைக்கப்படுகின்றன.

பெண்கள் கொலை செய்யப்படுவதற்கு சினிமாதான் காரணம் என்று பரவலாக பேசப்படுகிறது. ஆனால் இன்றைக்கு சீரியல்களில் வைக்கப்படும் சீன்கள் பிஞ்சு மனங்களிலும் நஞ்சை கலக்கிறது.

கார் பிரேக்கை பிடுங்கு

கார் பிரேக்கை பிடுங்கு

தெய்வமகள் சீரியலில் கார் பிரேக்கை கழற்றி கொலை செய்ய திட்டம் போட்டு கொடுக்கிறாள் வில்லி காயத்ரி. ஆனால் அந்த திட்டம் தெரியாமல் காரை எடுத்து போய் விபத்தில் சிக்குகிறாள் சுஜாதா. நம்பியை வைத்து பல திட்டங்களை போடுகிறாள் காயத்ரி.

சுட்டுக்கொல்லு

சுட்டுக்கொல்லு

சன் டிவியின் நாதஸ்வரம் சீரியலில் காதல் திருமணம் செய்து கொண்ட காரணத்திற்காக கீர்த்தியை சுட்டுக்கொல்கின்றனர். இதற்காக திட்டம் போடுவது பகிரங்கமாகவே காட்டப்படுகிறது. இதேபோல ஆள் கடத்தல், கொலைகளும் அரங்கேறி வருகின்றன.

அர்ச்சனாவை சுட்டுட்டாங்க

அர்ச்சனாவை சுட்டுட்டாங்க

சன் டிவியில் ரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியலில் பூமிகாவை கொல்வதற்கு பல திட்டம் போடுவான் மதன். இப்போதோ கலெக்டர் அர்ச்சானை சுட்டுவிட்டார்கள். இப்போ அர்ச்சனாவிற்கு என்னவானதோ?

வாணிக்கு ஆபத்து

வாணிக்கு ஆபத்து

இதேபோல சன் டிவியில் ராதிகாவின் வாணி ராணி சீரியலில் வாணியை கொல்ல பலமுறை திட்டமிடுகிறான். ஆபத்தான வைரஸை தேன்மொழி உடம்பில் புகுத்தி ஓட விட்டிருக்கின்றனர்.

லட்சுமி வந்தாச்சு

லட்சுமி வந்தாச்சு

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு சீரியலில் தம்பியின் சொத்துக்கு ஆசைப்பட்டு தம்பி மனைவியை வீட்டை விட்டு துரத்திய வில்லி தற்போது தனது திட்டத்திற்கு உடந்தையாக இருந்தவனை பணம் கேட்டு மிரட்டுவதால் காரில் அடித்து கொலை செய்கிறாள்.

வேட்டையனை வெட்டிட்டாங்கப்பா

வேட்டையனை வெட்டிட்டாங்கப்பா

விஜய் டிவியில் ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் ஓடிக்கொண்டிருக்கும் சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனை வெட்டுகிறது கூலிப்படை. உயிருக்கு போராடும் வேட்டையனின் உயிருக்கு ஆபத்து, மூளைச்சாவு என்றெல்லாம் அச்சுறுத்துகிறார் டாக்டர். எப்படியோ மீண்டு மறுபடியும் வேட்டையனின் ரொமான்ஸ் ஆரம்பித்து விட்டது.

English summary
Television serials murder plans telecast in Settilites Channels.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil