Achuma is back... ஆப்ரேஷனுக்கு பின் கேமரா முன் அர்ச்சனா… ரசிகர்கள் ஹாப்பி !

சென்னை : படபடப்பான பேச்சு... கலகலப்பான சிரிப்பு... என ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் விஜே அர்ச்சனா. நீண்டநாட்களாக தொகுப்பாளினியாக இருந்த இவருக்கு சின்னத்திரையில் ஏகப்பட்ட ஃபேன்ஸ்.

திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட அர்ச்சனாவுக்கு மூளையில் சிறிய ஆப்ரேஷன் செய்யப்பட்டது. தற்போது உடல்நிலை தேறியுள்ளார்.

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு முதல் முறையாக இவர் கேமரா முன்னாடி வந்ததும், பழைய நிலையில் இவரை பார்த்த அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை குவிக்கிறார்கள்.

சன்டிவியில்

சன்டிவியில்

சன் டிவி-யில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் அர்ச்சனா. அதன் பிறகு, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு கவனம் பெற்றார்.

அர்ச்சனா வீல்சேரில்

அர்ச்சனா வீல்சேரில்

அர்ச்சனாவுக்கு சமீபத்தில் மூளையில் CSF லீக் எனப்படும் பிரச்சனை ஏற்பட்டு மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். உடல் நலம் தேறிவந்த அர்ச்சனா கடந்த மாதம் மகள் சாரா மற்றும் அவரது சகோதரி அனிதா ஆகியோரும் நேரலையில் பேசினார்.

16 தையல்கள்

16 தையல்கள்

அப்போது தனக்கு எந்த மாதிரி அறுவை சிகிச்சை நடந்தது என்பது குறித்து கூறினார். எனது வலது தொடையில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளது என்றும், தொடையில் உள்ள தசையை வெட்டி சிஎஸ்எஃப் கசிவை சரி செய்ய மூக்கு பகுதியில் ஒட்டி உள்ளார்கள் என்றும் கூறியிருந்தார். உடல் நிலை தற்போது தெறிவருவதாக கூறியிருந்தார்.

மீண்டும் படப்பிடிப்பில்

மீண்டும் படப்பிடிப்பில்

இந்நிலையில், அர்ச்சனா படபிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தனது யூடியூப் சேனலில் தெரிவித்து இருந்தார். அதன்படி விஜய் டிவியில் நம்ம வீட்டு கல்யாணம் என்ற நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதில் சினேகன் மற்றும் கனிகாவின் திருமண வரவேற்பு ஸ்பெஷல் நிகழ்ச்சியாக படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் ஆபரேஷனுக்கு பின்னர் முதன்முதலாக அர்ச்சனா பங்கேற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு பூரண குணமடைந்து அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அர்ச்சனாவின் நலம் விரும்பிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X