twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வயது குறைப்பு பாலியல் வன் கொடுமைக்கு தீர்வா?: தந்தி டிவியில் காரசார விவாதம்

    By Mayura Akilan
    |

    Thanthi TV
    மனமொத்த பாலியல் உறவு 18ல் இருந்து 16 ஆக குறைப்பு... இது பற்றிதான் இன்றைக்கு ஊடகங்களிலும், பொது இடங்களிலும் விவாதப் பொருளாக இருக்கிறது.

    மனம் ஒத்துப்போய் உறவு வைத்துக்கொள்வதற்கான வயதை குறைப்பது எந்த அளவிற்கு சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது யாருக்கும் தெரியாது.

    திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது ஆணுக்கு 21 என்றும், பெண்ணுக்கு 18 என்றும் உள்ளது. அதே சமயம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தில் 16 வயதில் இருந்து 18 ஆக கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    இதனையடுத்து பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    பாலியல வன்கொடுமைகளுக்கு தண்டனைகளைக் கடுமையாக்கும் அதேவேளையில், இந்த மசோதாவில் உள்ள ஒரு முக்கிய அம்சம் நாடு தழுவிய அளவில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பி இருக்கிறது.

    ஆண் - பெண் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் நடைபெறும் பாலியல் உறவுக்கான வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆக குறைக்கும் அம்சம்தான் அது. இந்த அம்சம் மூலம், பொய்யான பாலியல் பலாத்காரப் புகார்களை தடுக்க முடியும் என்பதே வாதமாக முன்வைக்கப்பட்டது. வயதை காரணமாக்கி தண்டனையில் இருந்து தப்புவதை தடுக்க இந்த மசோதா வகை செய்யும் என்றும் கூறப்பட்டது.ஆனால், இந்த அம்சத்தால் ஏற்படும் பின்விளைவுகள் பெரும் ஆபத்துக்கு உரியது என்று சமூக ஆர்வலர்கள் பலரும் எச்சரிக்கின்றனர்.

    மசோதாவில் கற்பழிப்பு என்ற வார்த்தையை நீக்கவேண்டும். பாலியல் பலாத்காரம் என்ற வார்த்தையை பயன்படுத்தவேண்டும் என்று கூறப்படுகிறது.

    மனமொத்து உறவு கொள்ளும் வயதை குறைப்பது எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தும். இது மட்டுமே குற்றங்களை தடுக்க தீர்வாகுமா? என்று கூறப்பட்டது. இந்த வயது குறைப்பு அம்சம் பற்றி தந்தி டிவியின் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.

    இதில் கள்இயக்ககத் தலைவரும், சமூக ஆர்வலருமான நல்லச்சாமி, பெண்ணியவாதி ராதிகா கணேஷ், உளவியல் நிபுணர் அபிலாஷா ஆகியோர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் பேசிய நல்லச்சாமி, 16 வயது என்பது உறவு கொள்வதற்கு சரியான வயதுதான் என்றார். இப்போது நம் நாட்டில் பாலியல் வன் கொடுமைக்கு எதிரான சட்டங்கள் கடுமையாகத்தான் இருக்கின்றன. ஆனால் அதை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

    இப்போது மக்களை அமைதிப்படுத்த இந்த வயது குறைப்பு சேர்க்கப்படுகிறது. ஆனால் காம உணர்வு என்பது அனைவருக்கும் பொதுவானது. அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது.

    பாலியல் கல்வியை நாம் புகுத்த வேண்டும். அப்பொழுதுதான் இதை கட்டுப்படுத்த முடியும் என்றார் பெண்ணியவாதி ராதிகா கணேஷ். உளவியல் நிபுணர் அபிலாஷா

    பருவம் வந்த பின்னர் 16 சரியான வயது என்று கூறிய அவர் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் இது நடைமுறையில் வந்து விட்டது. இன்றைக்கு பள்ளி பருவத்திலேயே அறியாமல், யாருக்கும் தெரியாமல் உறவு கொள்வது அதிகரித்து வருகிறது என்றும் கூறினார்.

    இதற்கு மறுப்பு தெரிவித்த உளவியல் நிபுணர் அபிலாஷா, கள்ளத்தனமாக நடைபெறுவது அப்புறம் வெளிப்படையாக மாறிவிடும் இது அவர்களை ஊக்குவிக்கும் என்றார்.

    அதுவரை 16 வயதுக்கு ஆதரவாக பேசிய நல்லச்சாமி,குடும்ப உறவுகள் சிதைந்து விடும், கலாச்சாரம் சிதைந்து விடும். மீண்டும் நாம் கற்காலத்திற்கு போய்விடுவோம்.

    16 மட்டுமல்ல 13 வயதுடையவர்களுக்கும் கூட தேவை ஏற்படுகிறது. 15 வயது குழந்தைகள் கூட குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

    இது மாதிரி செய்வது தவறு குற்றம் என்ற பயம் குழந்தைகளிடையே இருக்கிறது. இந்த வயது குறைப்பின் மூலம் குழந்தைகள் பயமற்று போய்விடுவார்கள் என்றார் அபிலாஷா

    இதனால் பெற்றோர்களுக்கு பிரச்சினை. தவறானவர்களிடம் இருந்து பெண் குழந்தைகள் காப்பாற்ற முடியாது என்றும் அவர் கூறினார். குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள். இந்த வயது மாற்றம் சீரழிவுக்கு வழி வகுக்கும் என்றார் உளவியல் நிபுணர் அபிலாஷா.

    இதைக் கேட்ட நல்லச்சாமி, 16 வயது என்பது குழந்தை யல்ல. தேவை ஏற்பட்டால் இளம் வயதில் திருமணம் செய்வது அவசியம். காமம் என்பது மிகப்பெரிய போதை. இதை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.

    இந்த விவாதத்தைக் கேட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறிவிட்டு முடித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒன்றை கவனிக்கவேண்டும். சிறப்பு அழைப்பாளர்கள் பேசுவதை முழுவதுமாக முடிக்க விடமாட்டேன் என்கிறார். அவர்கள் கருத்து சொல்லி முடிக்கும் முன்பாகவே வேறு கேள்விக்கு தாவி தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறார். வரும் நிகழ்ச்சிகளில் இதை தவிர்ப்பது நல்லது.

    English summary
    Discuss about Consensual Sex Age Lowered From 18 to 16 in India on Thanthi TV Aayutha Eluthu Program.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X