»   »  மச்சினரை குளோஸ் பண்ணு... மருமகளை துரத்து.... 2014ல் உச்சம் தொட்ட டிவி வில்லிகள்!

மச்சினரை குளோஸ் பண்ணு... மருமகளை துரத்து.... 2014ல் உச்சம் தொட்ட டிவி வில்லிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தொலைக்காட்சி சீரியல்களில் ஹீரோயின்களை விட வில்லிகளுக்கே இங்கே ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். இந்திரசேனாவாகட்டும், மாயாவாகட்டும், ஏன் குடும்ப குத்து விளக்காக இருந்து கும்மாங்குத்து போடும் காயத்திரி ஆகட்டும் அப்படி ஒரு கிரேஸ் வில்லிகள் மீது.

என்னதான் இல்லத்தரசிகள் தங்களை திட்டி தீர்த்தாலும் நாங்கள் போகும் இடங்களில் தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது என்கின்றனர் இந்த வில்லிகள்.

கடந்த ஆண்டை விட 2014ஆம் ஆண்டில் சீரியல் வில்லிகளின் வில்லத்தனம் அதீதமானது. மச்சினரை குளோஸ் பண்ண திட்டமிடும் அண்ணி, மருமகளை வீட்டை விட்டு துரத்த விஷம் குடித்துவிட்டு பழிபோடும் மாமியார் என நடக்காத விசயங்கள் கூட சீரியல் மூலம் வீட்டிற்குள் வந்து போனது.

நான் திருந்திட்டேன் என்று கூறிக்கொண்டே செய்யும் இவர்கள் வில்லத்தனத்தால் ஒரிஜினல் சொந்தங்கள், உறவுமுறைகள் மீதான நம்பிக்கை கூட கேள்விக்குறியாகி வருகிறது.

வீணா நாயர்

வீணா நாயர்

மலையாள சீரியலில் நடித்து வந்த வீணா நாயர் மாயாவாக தென்றல் சீரியலில் நடித்து செய்த வில்லத்தனம் அலாதியானது. யார் இந்த வில்லி கேட்கவைத்தவர் இந்த வீணா நாயர்.

காயத்ரி

காயத்ரி

இவரும் சீரியலுக்கு புதுவரவுதான் ஆனால் வந்த வேகத்தில் சிறந்த வில்லி பட்டத்தையும் தட்டிச் சென்றுவிட்டார். கூட்டுக்குடும்பத்தில் இருந்துகொண்டே கோடிக்கணக்கான சொத்துக்களை அபகரிக்க இவர் வைக்கும் குண்டுகள் அப்பப்பா...

ராணி

ராணி

வள்ளியில் இந்திரசேனாவாகவும், முந்தானை முடிச்சு தொடரில் பிரேமாவாகவும் வரும் ராணியும் இந்த ஆண்டிற்கான சிறந்த வில்லி பட்டம் வென்றவர்தான். அந்த அசால்ட் நடிப்புக்காகவே இவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்களாம்.

காவ்யா பாரதி

காவ்யா பாரதி

தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய், சன், என பிரபல சேனல்களில் வில்லியாகவும், அன்பான அத்தையாகவும் நடிக்கும் காவ்யா பாரதி செல்லம்மா மூலம் அறியப்பட்டவர். அந்த ஸ்டைல் உடைகளுக்காகவே பிரபல வில்லியானார்.

புவனேஸ்வரி

புவனேஸ்வரி

சவுபர்ணிகா மூலம் சீரியல் உலகில் நுழைந்து... சினிமாவில் கவர்ச்சி நாயகியாக மாறிய புவனேஸ்வரி கொஞ்சகாலம் சினிமா,சீரியலை விட்டு ஒதுங்கியிருந்தார். அரசியலில் இருந்த புவனேஸ்வரி மீண்டும் சந்திரலேகா தொடர் மூலம் வில்லத்தனம் செய்ய வந்துள்ளார்.

சாந்தி வில்லியம்ஸ்

சாந்தி வில்லியம்ஸ்

மெட்டி ஒலி மாமியார் என்றால் இன்றைக்கும் அடையாளம் தெரியும். அந்த அளவிற்கு மருமகளை கொடுமைப்படுத்திய மாமியார் இவர்தான். இப்போது வாணி ராணியில் அக்கா தங்கை குடும்பத்தை கெடுப்பது எப்படி என்று இவர் போடும் ப்ளான் ஒவ்வொன்றும் ஸ்ஸ்ஸ் அப்பா...

சூசன்

சூசன்

அழகான நாயகியாக வந்து போன சூசன் ஆபிஸ் சீசன் 1ல் சீரியஸ் வில்லியாக மாறினார். அதனாலேயே அவருக்கு ரசிகர்கள் வட்டம் கூடியது. வில்லத்தனத்தை தொடர்வாரா? நல்லப்பெண்ணாக நடிப்பாரா பார்க்கலாம்.

ஸ்ரீவித்யா

ஸ்ரீவித்யா

ஹீரோயினாக நடித்த ஸ்ரீவித்யா தென்றலில் வில்லியாக நடித்து அசத்தினார் அநியாயமாக செத்துப்போன ஸ்ரீவித்யா, தற்போது பொன்னூஞ்சல் தொடரில் மீண்டும் வில்லத்தனம் செய்து வருகிறார். 2015லாவது திருந்துவாரா பார்க்கலாம்.

English summary
A great villain makes for great story lines. They are integral in making television shows suspenseful and complicated.
Please Wait while comments are loading...