twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காசி பற்றி தெரிஞ்சுக்கணுமா? வேந்தர் டிவியில் மூன்றாவது கண் பாருங்க

    By Mayura Akilan
    |

    காசி என்றாலே நம் நினைவுக்கு வருவது கங்கை. காசியும் காசி விஸ்வநாதரும் அனைவரின் நினைவிலும் வந்து செல்லும். பிணம் திண்ணும் அகோரிகள், கஞ்சா புகைக்கும் சாமியார்கள், எரியூட்டப்படும் சடலங்கள் என காசிக்கு மற்றொரு முகமும் உண்டு. இவை மட்டுமல்ல காசி. காசியின் உண்மையான முகத்தை தேடி பயணம் செய்துள்ளது வேந்தர் டிவியின் மூன்றாவது குழு. தி ரியல் காசியில் இதனை தெரிந்து கொள்ளலாம்.

    மே 18 முதல், நமது வேந்தர் டிவியின் மூன்றாவது கண் நிகழ்ச்சியில், வாராவாரம் திங்கள் தோறும், இரவு 9.30 மணிக்கு, மூன்றாவது கண் நிகழ்ச்சியில் ‘தி ரியல் காசி' ஒளிபரப்பாகவிருக்கிறது.

    ஆன்மீக பூமி காசி

    ஆன்மீக பூமி காசி

    இந்தியாவோட ஆன்மீக பூமியா விளங்குற காசியை பற்றி இது வரைக்கும் ஊடகங்கள் பல்வேறுவிதமா சித்தரிச்சிருக்காங்க. சலசலத்து ஓடும் புனித நதியான கங்கை காசியின் முக்கிய அம்சம்.

    காசி விஸ்வநாதர்

    காசி விஸ்வநாதர்

    ஆன்மீகத்துல இருக்கிற ஒருத்தருக்கு, காசினு சொன்னதும் காசி விஷ்வநாதர், அன்னபூரணி, காசி விசாலாட்சி, கால பைரவர் இது தான் முதல்ல நினைவுக்கு வரும்.

    அகோரிகள்

    அகோரிகள்

    காசினு சொன்னாலே பிணங்களை தின்னும் அகோரிகளும், கஞ்சா புகைக்கும் சாமியார்களும் நினைவில் வந்து செல்வது வழக்கம்.

    எரியும் சடலங்கள்

    எரியும் சடலங்கள்

    24 மணி நேரமும் எரியவிடப்படுகிற பிணங்களும் இது மட்டும் தான் சதாரண மனிதர்களோட நினைவுக்கு வரும். சமூக வலைதளங்களிலும், இணையத்திலும் இப்படி பட்ட ஏராளமான வீடியோக்களையும், புகைப்படங்களை பார்க்கமுடியும்.

    உண்மையான முகம்

    உண்மையான முகம்

    இது மட்டுமே உண்மையான காசி இல்லை. வெறும் ஆன்மீக பூமி என்று மட்டும் கூறி காசியோட எல்லையை சுருக்கி விட முடியாது. பல ஆயிரம் வருடமாக காசி ஆயிரக்கணக்கான மகான்களையும், ஞானிகளை தன்னை நோக்கி இழுத்திருக்கிறது காசி. இதற்கு பின்னால் மிக பெரிய விஷயங்கள் மறைந்திருக்கிறது.

    மூன்றாவது கண் குழு

    மூன்றாவது கண் குழு

    யாருக்கும் தெரியாத காசியோட உண்மையான முகத்தை வெளியே கொண்டுவருவதற்காக மூன்றாவது கண் குழு காசிக்கு சென்று இதுவரைக்கும் யாருமே கேள்விப்படாத பல புது விஷயங்களைத் தேடி தேடி கண்டுபித்துள்ளதாம்.

    காசியில் உள்ளது என்ன?

    காசியில் உள்ளது என்ன?

    ஜலசமாதி, கங்கையின் நதிமூலம், உண்மையான அகோரிகள் , காசியின் சக்தியோட்டமான ஜீவசமாதிகள். காசிக்கும் கால பைரவருக்குமான தொடர்பு. சாரநாத் தூணில் மறைந்துள்ள ரகசியங்கள், வயதானவர்கள் இறப்பதற்காகவே கட்டி வைக்கபட்டிருக்கும் விடுதிகள் என காசியில் இருப்பது ஏராளம்.

    அதிசயங்களும் அமானுஷ்யங்களும்

    அதிசயங்களும் அமானுஷ்யங்களும்

    மரணத்துக்கும் காசிக்குமான தொடர்பு, சாமியார்கள் கஞ்சா புகைப்பதின் பின்னணி, காசியில் மறைந்திருக்கும் ரகசிய கோயில்கள், காசியின் உண்மையான சக்தி மையம், இப்படி நிறைய அதிசயங்களும், அமானுஷ்யங்களும் காத்திருக்கிறதாம். கண்டு ஆன்மீக அனுபவத்தை உணருங்கள் என்கின்றனர் மூன்றாவது கண் குழுவினர்.

    English summary
    Moondravathu Kan is a mystery hunting show that brings out several myths about blind faith, ancient history and cultural believes this week The Real kasi program telecast.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X