»   »  கிளிசரின் போடாமல் அழுதேன்… மனம் திறந்த "தென்றல்" ஸ்ருதி…!

கிளிசரின் போடாமல் அழுதேன்… மனம் திறந்த "தென்றல்" ஸ்ருதி…!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் அழுது அழுது நடித்து இல்லத்தரசிகளை பிழிய பிழிய கண்ணீர் விட வைத்த ஸ்ருதிதான் இன்றைய சூரியவணக்கம் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர். தென்றலில் துளசியாகவும், அபூர்வ ராகங்களில் பவித்ராவாகவும் நடித்து வரும் ஸ்ருதி, ஜீ தமிழ் டிவியில் அன்னக்கொடியும் 5 பெண்களும் தொடரில் போல்டான வக்கீலாக நடிக்கிறார். விஜய் டிவியில் ஆபிஸ் தொடரில் ராஜீயாகவும் நடித்து அசத்தினார்.

இன்றைய சிறப்பு விருந்தினர் பக்கத்தில் ஸ்ருதி பகிர்ந்து கொண்டது என்னவோ தென்றல் தொடரில் துளசியாகவும், அபூர்வ ராகங்களில் பவித்ராவாகவும் நடித்தது பற்றி மட்டும்தான். தன்னுடைய கண்ணீர் கதையை ரசிகர்களிடம் சிரிக்க சிரிக்க பகிர்ந்து கொண்டார்.

சீரியல் ஹீரோயின்கள்

சீரியல் ஹீரோயின்கள்

சினிமா நட்சத்திரங்கள், அறிவியல் அறிஞர்கள், டாக்டர்கள் என்று சிறப்பு விருந்தினர்களை அழைக்கும் சன்டிவி இப்போது என்னவோ சீரியல் நடிகைகளின் அனுபவங்களை பேட்டி கண்டு ஒளிபரப்புகிறது. இன்றைய சிறப்பு விருந்தினர் தென்றல் துளசி.

கண்ணீர் விட்டேன்

கண்ணீர் விட்டேன்

சீரியலில் நடிக்க நான் மேக் அப் பெட்டியை எடுத்துப் போனதை விட கிளிசரின் பாட்டில்தான் எடுத்துப்போவேன். நாளாக நாளாக இயல்பாகவே கண்ணீர் வர ஆரம்பித்து விட்டது.

உண்மையான பாசம்

உண்மையான பாசம்

பொது இடங்களில் என்னைக் காண்பவர்கள் எனக்கு நிஜமாகவே வாழ்க்கையில் பிரச்சினை இருக்கிறது என்று நினைத்து என்னை அவர்கள் வீட்டுக்கு வரச்சொல்லி அழைப்பார்கள்.

பாட்டி மீது பாசம்

பாட்டி மீது பாசம்

தென்றல் தொடரில் பாட்டியாக நடித்த என்.என்.லட்சுமி நிஜமாகவே என்மீது பாசத்தை கொட்டி நடிப்பார். பாதியிலேயே அவர் இறந்து போனது மனதை பாதித்தது என்றார் துளசி.

போல்டான பொண்ணு

போல்டான பொண்ணு

தென்றல் துளசிதான் அழுகாச்சி பெண்... இப்போது அபூர்வ ராகங்கள் பவித்ரா போல்டான பெண் என்றும் கூறினார் துளசி. இன்னும் போக போகத்தான் அழுகிறேனா, பிறரை அழவைக்கிறேனா என்பது தெரியும் என்றார் துளசி.

சிரிக்க சிரிக்க பேசுதுப்பா

சிரிக்க சிரிக்க பேசுதுப்பா

பத்தாண்டுகள் கழித்து... அண்ணி, அம்மா கதாபாத்திரத்திலும் நடிக்க நான் ரெடி என்று கூறியுள்ளார் துளசி. சினிமா வாய்ப்புகள் கிடைத்தாலும் சீரியலில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என்றும் கூறினார் ஸ்ருதி. தனது பேட்டி முழுக்க சிரிக்க சிரிக்க பேசினார் ஸ்ருதி. அந்தப்பெண்ணை ஏம்மா அழவைக்கிறீங்க என்று கேட்கின்றனர் ரசிகர்கள்.

English summary
Thendral Thulasi fame Shruthi has said she got tears naturally when she acted in Thendral serial in Sun TV.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil