»   »  அரவிந்த்சாமி கேள்விக்கு சுட்டியாய் பதில் சொன்ன பேபி நைனிகா

அரவிந்த்சாமி கேள்விக்கு சுட்டியாய் பதில் சொன்ன பேபி நைனிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யுடன் தெறி படத்தில் நடித்ததன் மூலம் ஒரே நாள் பிரபலமானவர் நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா. சுட்டிதனமான இவருடைய நடிப்பை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. இதனால் அடுத்தடுத்த கால்ஷீட் வேணும் என்று நடிகை மீனாவிடம் பலரும் கேட்க... அதற்கு மறுக்கும் மீனா, அவ படிக்கணும் என்று கூறி வருகிறாராம்.

விஜய் டிவியில் அரவிந்த்சாமி நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் அம்மா உடன் பங்கேற்று சுட்டித்தனமாக பதில் சொல்லி அசத்தியுள்ளாராம்.

சூர்யா சீசன் 1

சூர்யா சீசன் 1

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி ஷோ ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி'. இதன் முதல் சீசனை நடிகர் சூர்யா தொகுத்து வழங்கியிருந்தார்.

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ்

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டு அதை பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் மூன்று ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு தற்போது இதன் மூன்றாவது சீசனை அரவிந்த்சாமி தொகுத்து வழங்கி வருகிறார்.

அர்விந்த்சாமி

அர்விந்த்சாமி

அரவிந்த்சாமியின் நிகழ்ச்சியில் அவ்வப்போது சில பிரபலங்கள் கலந்துகொண்டு விளையாடுவார்கள். அந்தவரிசையில் தற்போது தெறி புகழ் நைனிகா தனது அம்மா மீனாவுடன் இதில் பங்கேற்றுள்ளார்.

மீனா உடன் நைனிகா

அம்மா மீனாவைப் போல துறுதுறு பார்வை, குறும்புத்தனமான பேச்சு என அசத்தும் நைனிகா, அர்விந்த்சாமியின் கேள்விகளுக்கு சுட்டித்தனமாக பதில் சொல்லி அசத்தினாராம் இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

English summary
Meena's daughter Theri Baby Nainika plays game in Neengalum Vellalam oru kodi with Aravindswamy on Vijay TV.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil