»   »  தெறி, விக்ரம் வேதா,பாகுபலி 2- டிவி சேனல்களில் தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்

தெறி, விக்ரம் வேதா,பாகுபலி 2- டிவி சேனல்களில் தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சன்டிவியில் தெறி, தேவி, ஜீ தமிழில் விக்ரம் வேதா, விஜய் டிவியில் மாநகரம் உள்ளிட்ட பல புத்தம் புதிய திரைப்படங்கள் தீபாவளி பண்டிகைக்காக சேட்டிலைட் சேனல்களில் ஒளிபரப்பாகின்றன.

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு, பலகாரத்துடன் டிவி சேனல்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் பார்ப்பதும் இன்றைய ஷெட்யூல் ஆகிவிட்டது.

தீபாவளி திருநாளில் பெரிய திரையில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக, திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

மாதவன் - விஜய் சேதுபதி

மாதவன் - விஜய் சேதுபதி

ஜீ தமிழ் டிவியில் திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம் புதிய திரைப்படம் விக்ரம் வேதா ஒளிபரப்பாக உள்ளது. மாதவன், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் துப்பாக்கி சத்தத்திற்கு குறைவிருக்காது.

மாநகரம்,பாகுபலி 2

மாநகரம்,பாகுபலி 2

விஜய் டிவியில் புத்தம் புதிய திரைப்படம் மாநகரம் ஒளிபரப்பாக உள்ளது. பிரபாஸ், அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடித்த திரைப்படம் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது. இது கடந்த 8ஆம் தேதி ஒளிபரப்பானது. ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் தீபாவளி நாளில் ஒளிபரப்பாக உள்ளது.

தெறி, தேவி

தெறி, தேவி

இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக விஜய், சமந்தா நடித்த தெறி திரைப்படம் சன்டிவியில் தீபாவளி நாளில் மாலையில் ஒளிபரப்பாக உள்ளது. காலை 11 மணிக்கு பிரபுதேவா, தமன்னா நடித்த திகில் திரைப்படம் தேவி ஒளிபரப்பாக உள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

கலைஞர் டிவியில் கார்த்தி நடித்த பையா திரைப்படமும், சிவகார்த்திக்கேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படமும் தீபாவளி திருநாளில் ஒளிபரப்பாக உள்ளது.

புதுயுகத்தில் சிறப்பு நட்சத்திர ஜன்னல்

புதுயுகத்தில் சிறப்பு நட்சத்திர ஜன்னல்

நடிகை சங்கீதாவுடன் நிக்கி கல்ராணி தனது திரையுலக அனுபவங்கள், காதலைப்பற்றி அவர் கூறும் சுவாரசிய தகவல் மற்றும் அவரின் சமூக அக்கறையைப்பற்றி சுவையாகவும் சுவாரசியமாகவும் பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நட்சத்திர ஜன்னல் நிகழ்ச்சி உங்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் தீபாவளியன்று காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சிறப்புப் பட்டிமன்றம்

சிறப்புப் பட்டிமன்றம்

நடிகர் ரமேஷ் கண்ணா தலைமையில் எந்த வாழ்க்கை சுகமானது... தனக்காக வாழ்வதா? சமுதாயத்திற்காக வாழ்வதா? என்ற தலைப்பில் உங்கள் அபிமானப் பேச்சாளர்கள் பங்குபெறும் கலகலப்பான தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம் காலை 11.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஜெயா, ராஜ்

ஜெயா, ராஜ்

ஜெயாடிவி, ராஜ்டிவி, பாலிமர் டிவி கேடிவி என பல சேனல்களிலும் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. பண்டிகையை புத்தம் புதிய திரைப்படக்கள், சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடுங்கள் மக்களே!

English summary
Vijay starring Theri is telecasting on sun tv for diwali 2017. Vikram Vedha hit movies for telecast on Zee Tamil TV blockbuster for Diwali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X