சன் டிவி.,யின் டாப் 3 சீரியல்கள் இது தான்...என்ன ரேட்டிங் தெரியுமா?

சென்னை : தமிழ் டிவி சேனல்களில், நியூஸ் சேனல்கள் தவிர மற்ற அனைத்திலும் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பட்டு வருகின்றன. இதில் முதலிடத்தை பிடிப்பது யார் என்ற போட்டி அனைத்து சேனல்களிலும் நடக்கிறது.

ஆரம்பத்தில் விஜய் டிவி தான் டிவி சீரியல்களின் ரேட்டிங்கை வெளியிட்டு, எந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம் என்பதை சொல்லி பரபரப்பை கிளப்பியது. இதைத் தொடர்ந்து தற்போது மற்ற சேனல்களும் சீரியல்களின் ரேட்டிங்கை வெளியிட துவங்கி விட்டன.

சன் டிவி சீரியல் ரேட்டிங்

சன் டிவி சீரியல் ரேட்டிங்

ப்ரைம் டைமில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் எந்த சீரியல் அதிக ரேட்டிங்கை பெற்று முதலிடத்தில் உள்ளது என்ற விபரத்தை விஜய் டிவி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது சன் டிவி.,யில் பிரைம் டைம் சீரியல்களின் ரேட்டிங் மற்றும் அதில் டாப் 3 இடங்களை பிடித்துள்ள சீரியல்களின் விபரத்தையும் வெளியிட்டுள்ளது.

முதலிடத்தில் இதற்கு தான்

முதலிடத்தில் இதற்கு தான்

சமீபத்திய தகவலின் படி, கிராம மற்றும் நகர் புறங்களில் அதிக பட்சமாக 10.17 டிவி ரேட்டிங்கை பெற்று வானத்தை போல சீரியல் முதலிடத்தில் உள்ளது. அண்ணன்- தங்கை பாசத்தை மிக அழகாக சொல்லும் கதை வானத்தை போல சீரியல். காதலா - அண்ணன் மீதான பாசமா என்ற போராட்டத்தையும், அதில் எது ஜெயிக்கிறது என்பதையும், குடும்ப உறவுகளையும் சொல்லி உள்ள கதை.

த்ரில்லிங்கான கல்யாணம்

த்ரில்லிங்கான கல்யாணம்

வானத்தை போல சீரியலில் தற்போது துளசியின் கல்யாண வைபவம் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு நிகழ்ச்சியாக துளசியின் கல்யாண வைரபவம் இரண்டு மணிநேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது. மிக த்ரில்லிங், சஸ்பென்ஸ் நிறைந்ததாக இந்த கல்யாண வைபவம் நடைபெறுவதால், தற்போதும் தினமும் ஒரு மணி நேரம் இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

கிராமத்து பெண்ணின் கதை

கிராமத்து பெண்ணின் கதை

இதைத் தொடர்ந்து 9.96 டிவி ரேட்டிங்குடன் சுந்தரி சீரியல் இரண்டாம் இடத்தில் உள்ளது. கிராமத்து சூழலில் வளர்ந்த பெண், மாடர்னாக சிட்டியில் வளர்ந்தவரை திருமணம் செய்து கொள்கிறாள். பெற்றோரின் கட்டாயத்தால் சுந்தரியை திருமணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளை, தன் விருப்பப்படி தான் காதலித்த பணக்கார பெண்ணையும் திருமணம் செய்து கொள்கிறான். முக்கோண காதலான இந்த சீரியல் அதிக ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக உள்ளது.

மூன்றாவது இடத்தில் ரோஜா

மூன்றாவது இடத்தில் ரோஜா

இவற்றைத் தொடர்ந்து 9.95 டிவி ரேட்டிங்குடன் ரோஜா சீரியல் மூன்றாவது இடத்தில் உள்ளது. வழக்கறிஞரான அர்ஜுன், ரோஜாவை திருமணம் செய்து கொள்கிறான். அவர்கள் இருவரிடையேயான காதல், ரோஜா யார் என்பதை அனைவருக்கும் உணர்த்த நடக்கும் போராட்டம், இதற்கிடையில் வில்லிகளின் ஆள்மாறாட்டம், சதி வேலைகள் என பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X