பிக்பாஸ் போட்டியாளர் பட்டியலில் இணைந்த மற்றொரு குக் வித் கோமாளி பிரபலம்

சென்னை : எப்போது துவங்குவார்கள் என டிவி ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தான். ஏற்கனவே நான்கு சீசன்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், பிக்பாஸ் தமிழ் ஐந்தாவது சீசன் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

கொரோனா காரணமாக கடந்த சீசனை போலவே இந்த சீசனும் தாமதமாகவே துவங்கப்பட உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி பல மாதங்களாக சோஷியல் மீடியாக்களில் பரவி வரும் தகவலால் நிகழ்ச்சி எப்போது துவங்கும், யாரொல்லாம் இந்த சீசனில் பங்கேற்க போகிறார்கள் என்ற ஆர்வம் தாறுமாறாக அதிகரித்துள்ளது.

புதிய லோகோ

புதிய லோகோ

ஐந்தாவது சீசனிற்காக புதிதாக பிக்பாஸ் வீடு தயாராகி வருகிறது. இந்த சீசனில் புதிய விதிமுறைகள் கடைபிடிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதை குறிக்கும் வகையில் புதிய லோகோ ஒன்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கமல் தோன்றும் வித்தியாசமான ப்ரோமோக்களும் வெளியிடப்பட்டன.

எப்போது துவங்குது

எப்போது துவங்குது

பிக்பாஸ் சீசன் 4 அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட்டது. ஆனால் ஐந்தாவது சீசன் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தான் துவங்கப்பட உள்ளதாம். போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் முழு வடிவம் பெற்ற பிறகு பிக்பாஸ் தமிழ் சீசன் 5 துவங்கும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அசத்தல் ப்ரோமோ ஒன்று தயாராகி வருகிறதாம்.

இவரும் பங்கேற்கிறாரா

இவரும் பங்கேற்கிறாரா

முதல் கன்ஃபார்ம் போட்டியாளராக நடிகை ஷகீலாவின் வளர்ப்பு மகளும், திருநங்கையுமான மிலா தேர்வாகி இருப்பதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து ரம்யா கிருஷ்ணனன், சுனிதா கோகாய் உள்ளிட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். மேலும் லேட்டஸ்ட் தகவலாக குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனி, பிக்பாஸ் சீசன் 5 இறுதி போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இவர் சென்னை 28 படத்தில் நடித்த நடிகை விஜயலட்சுமியின் சகோதரியும், பிரபல டைரக்டர் அகத்தியனின் மகளும் ஆவார். இவரது கணவர் திருவும் ஒரு டைரக்டர் தான்.

சோஷியல் மீடியாவில் பிரபலம்

சோஷியல் மீடியாவில் பிரபலம்

விஜயலட்சுமியும் பிக்பாஸ் சீசன் இரண்டில் போட்டியாளராக கலந்து கொண்டார். தற்போது ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் கனி மற்றும் விஜயலட்சுமி வெளியிடும் ஃபோட்டோக்கள், வீடியோக்கள் மிகவும் பிரபலம். கனி, சொந்தமாக சமையல் பற்றிய யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

திட்டவட்டமாக மறுத்த கனி

திட்டவட்டமாக மறுத்த கனி

ஆரம்பத்திலேயே கனி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியானது. இது பற்றி கனியிடம் கேட்ட போது அதை திட்டவட்டமாக மறுத்த கனி, அது பற்றி யாரும் தன்னிடம் பேசவில்லை எனவும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் கூறி இருந்தார். இது தொடர்பாக ட்விட்டரில் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார்.

30 பேரிடம் பேச்சுவார்த்தை

30 பேரிடம் பேச்சுவார்த்தை

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்பதற்காக இறுதி போட்டியாளர் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 30 பேரிடம் விஜய் டிவி சார்பில் பேசப்பட்டு வருகிறதாம். கிட்டதட்ட இறுதி வேட்பாளர் பட்டியல் தயாராகி விட்டதாகவும், விரைவில் அவர்களை தனிமைப்படுத்தும் நடைமுறையும் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X