Lollu pa programme: அட இது தெரியாம போச்சே...இயக்குநர் பாண்டியராஜன் இசை அமைப்பாளராமே!

சென்னை: சன் டிவியின் லொள்ளுப்பா நகைச்சுவை ரியாலிட்டி நிகழ்ச்சியின் சிறப்பு நடுவர்களாக நடிகை மீனா, நடிகரும் இயக்குநருமான பாண்டியராஜன் சிறப்பு நடுவர்களாக வருகிறார்கள்.

எல்லாரும் ரசித்து சிரிக்கும்படிதான் நிகழ்ச்சி இருக்கிறது. மதுரை முத்து, ஆதவன் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கத் தக்க வகையில்தான் இருக்கிறது. முகம் சுளிக்கும்படி எதுவும் நிகழ்ச்சியில் இல்லை.

நிகழ்ச்சியில் என்னதான போட்டியாளர்கள் கலந்துக்கொள்ள மேலும் மெருக்கூட்ட ஆதவனும், முத்துவும் சேர்ந்தும் காமெடி செய்கிறார்கள், நன்றாகத்தான் இருக்கிறது. திடீர்னு மதுரை முத்துவை காமெடி செய்ய சொன்னாலும், ஏதாவது ஒன்றை சொல்லி சமாளித்து சிரிக்க வைத்துடறார்.

 இசை பயின்றவர்

இசை பயின்றவர்

இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது பாண்டியராஜன் தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்வார். அல்லது நடிகை மீனா தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்வார். நேற்று ஞாயிற்று கிழமை இசை பற்றி பேச்சு வந்தது அப்போது பேசிய பாண்டியராஜன், உண்மையில் தான் சென்னைக்கு படம் இயக்கவோ, நடிக்கவோ வரவில்லை என்று அதிரடியாக சொன்னார். பிறகு எதற்கு வந்தார் என்று அவரே சொன்னார்.

 பயிற்சி கல்லூரியில்

பயிற்சி கல்லூரியில்

பாண்டியராஜன் தமிழ்நாடு அரசின் இசைப்பயிற்சி கல்லூரியில் கோல்டு மெடலிஸ்ட்டாம். ஒரு இசை அமைப்பாளராக ஆக வேண்டும் என்றுதான் இன்டஸ்ரியில் நுழைந்தாராம். ஆனால், அப்போது இசைஞானி இளையராஜா கொடிக்கட்டி பறந்த காலம். யார்தான் பாண்டியராஜனை தனது படத்துக்கு இசை அமைக்க ஒப்புக் கொள்வார்கள். அதனால், இயக்குநர் பாக்கிராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிய நேர்ந்தது. இருந்தாலும் இசை அமைக்க வேண்டும் என்கிற தாகம் உள்ளுக்குள் வளர்ந்து கொண்டே இருந்திருக்கிறது.

 ஆண் பாவம்

ஆண் பாவம்

சரியான நேரத்துக்கு காத்திருந்த பாண்டியராஜன், கன்னி ராசி படத்தின் மூலம் பெரிய இயக்குநராக ஆனார். பிறகு ஆண்பாவம் படத்தை இயக்கி, அதில் நாயகனாகவும் நடித்து முத்திரை பதித்து,பெரிய இயக்குநர், நல்ல நடிகர் என்று பெயரும் எடுத்தார். இருந்தாலும் நல்ல இசை அமைப்பாளர் என்று பெயர் எடுக்க வேண்டுமே... அந்த தாகம் வேறு தனியாமல் இருக்கிறதே...

 நெத்தியடி நேரம்

நெத்தியடி நேரம்

இந்த நேரத்தில்தான் பாண்டியராஜன் சாரின் மாமனார் இவரை வைத்து நெத்தியடி படம் எடுக்க முன் வந்துள்ளார். இதுதான் சான்ஸ்..விட்டா புடிக்க முடியாதுன்னு, நான்தான் இந்த படத்துக்கு இசை அமைப்பேன்னு சொன்னாராம். மாமனார் ஒண்ணுமே சொல்லலையாம். நெத்தியடி படத்துக்கு பாண்டியராஜன் இசை. இசைக்குன்னு ஒரு ரெஸ்பான்ஸும் வராததினால். இசைக் கருவிகளை மூட்டைக் கட்டி ஓரமா எடுத்து வச்சுட்டேன்னு சொன்னார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X