»   »  சீரியலில் நடிக்கும்போதே காதல்... - திருமணத்தில் இணையும் அடுத்த ஜோடி!

சீரியலில் நடிக்கும்போதே காதல்... - திருமணத்தில் இணையும் அடுத்த ஜோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'பிரியமானவள்' என்ற சீரியல் ரசிகர்கள், வீட்டிலிருக்கும் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. நட்ராஜ் - அவந்திகா ஜோடியின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது.

இவர்களின் உண்மையான பெயர் விஜய் - சிவரஞ்சனி. கணவன்-மனைவி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர்களுக்கு உண்மையிலேயே காதல் ஏற்பட்டுவிட்டது.

This serial pair is ready to get marrried

ஒருவர் மீது ஒருவர் நல்ல புரிதலுடன் காதல் கொண்டுள்ளனர். முதலில் சிவரஞ்சனியே தனது காதலை விஜய்யிடம் தெரிவித்திருக்கிறார். விஜய்யும் அதை ஏற்றுக்கொண்டார்.

இருவர் வீட்டிலும் சம்மதம் சொல்ல, விரைவில் திருமணத்தையும் நிச்சயித்திருக்கின்றனர். இவர்களது திருமணம் அக்டோபர் 30-ம் தேதியன்று சென்னையில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

This serial pair is ready to get marrried

இதற்கு முன்பே, 'சரவணன் மீனாட்சி' சீரியலில் காதல் கணவன் மனைவியாக நடித்த செந்தில் - ஶ்ரீஜா உள்பட இப்படி சில சீரியல் ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vijay - Sivaranjani are playing lead roles in 'Priyamanaval' serial. Those who act in the role of husband and wife have truly fallen in love.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil