»   »  நீங்க ஆச்சி ரசிகரா?... அப்போ இந்த வாரம் நீங்க லேட்டாத் தான் தூங்கணும்!

நீங்க ஆச்சி ரசிகரா?... அப்போ இந்த வாரம் நீங்க லேட்டாத் தான் தூங்கணும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த நடிகை மனோரமாவின் மிகச்சிறந்த படங்கள் இந்த வாரம் சன் டிவியில் இரவுக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன.

சுமார் 1500 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸில் இடம் பிடித்தவர் மனோரமா. அனைவராலும் ஆச்சி என அழைக்கப்பட்ட மனோரமா, நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார்.

This week Aachi Manorama films in SunTV

தனக்கு வழங்கப்பட்ட எந்தவொரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடிக்கும் மனோரமாவை, ‘பெண் சிவாஜி' என்றே புகழ்கிறார்கள். அவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது மறக்க முடியாது.

இந்நிலையில், மனோரமா நடித்த திரைப்படங்களை இந்த வாரம் இரவுக்காட்சியில் ஒளிபரப்புகிறது சன் டிவி.

இன்று இரவு நான் பெற்ற மகனே படம். மாமியாருக்கும், மருமகளுக்கும் நடக்கும் பாசப்போராட்டம் தான் கதை. இப்படத்தில் மகனுக்காக உருகும் பாசமிகு தாயாக நடித்திருப்பார் மனோரமா .

நாளை மேமாதம். இப்படத்தில் சென்னைவாசியாக வித்தியாசமான கேரக்டரில் நடித்ததோடு, மெட்ராஸை சுத்திப் பார்க்கப் போறேன் பாடலையும் பாடியுள்ளார் மனோரமா.

வரும் புதன் கிழமை சவால், வியாழக்கிழமை அன்பே அன்பே, வெள்ளிக்கிழமை ஹானஸ்ட்ராஜ் என இந்த வாரம் முழுவதும் மனோரமாவின் படங்களைக் கண்டு ரசிக்கலாம்.

மனோரமாவின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றான சின்னக்கவுண்டர் இந்த பட்டியலில் மிஸ் ஆகிறதே என கவலைப்பட வேண்டாம். இன்று மதியம் சன் டிவியில் அந்தப் படம் தான். பார்க்காட்டி உடனே ஓடுங்க!

English summary
Sun TV is telecasting Aachi Manorama's films this week to commemorate her death.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil