Just In
- 10 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 10 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 12 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 13 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- Automobiles
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- News
அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. அரசு மற்றும் அரசியல் குறித்து ஒன்றைரை மணி நேரம் பேச்சு..!
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Vanakkam thamizha: அதானே பார்த்தேன்.. இன்னும் கின்னஸ் மேட்டரைக் காணாமேன்னு!
சென்னை: சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் கல்யாண வீடு சீரியலின் இயக்குனர் திருமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். மூணு மாசம் காணாமல் போயிருந்த கோபி, போன வாரம் கடைசியில் திரும்பி வந்துட்டார். ராஜா,செல்வத்திடம் இருந்து சூரியா மற்ற எல்லாரையும் காப்பாற்றி ஒரு வழியா கயவர்களுக்கு தண்டனையும் கொடுத்தாயிற்று.
இப்போது கல்யாண வீடு இன்று முதல் சவீதாவின் கல்யாண களையால் மகிழ்ச்சியில் திளைக்கும் என்று நம்பலாம் என்கிற சந்தோஷத்தில் மக்கள் இருக்கும்போது, கோபியை குடும்பத்தினரும் மற்றவர்களும் விசாரிக்க வேண்டிய நிலையில் அவர் இருக்கார்.
காணாமல் போயிருந்த கோபி திரும்பி வந்தபோது தனியாக வரவில்லையே. முக்காடு போட்டு நீண்ட தலை முடிப் பின்னலுடன் ஒரு பெண்ணையும் அழைத்து வந்திருக்காரே அது யாராக இருக்கும்?

பழக்கம் எனக்கு இருந்ததில்லை
கதை என்று பார்த்தால் நான் எந்த புத்தகத்தில் படித்து என்னை பாதித்த கதா பாத்திரங்களை நான் என் சீரியலுக்கு கதா பாத்திரங்களாக பயன்படுத்திக் கொண்டது இல்லை. காரணம் எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் அவ்வளவாக இருந்ததில்லை. ஆனால், நிறையை புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று பாஸ்கர் சக்தி சார் போன்றவர்கள் எனக்கு அறிவுறுத்தி, புத்தகமும் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.

எனது சீரியலின் கதாபாத்திரங்கள்
உண்மையில் மெட்டி ஒலி சீரியல் ஆரம்பிச்சு கல்யாண வீடு சீரியல் வரை உள்ள ஒவ்வொரு கதா பாத்திரமும் நான் நேரில் பார்த்து, உள்வாங்கிய கதா பாத்திரங்கள்தான். எனக்கு எப்போதுமே எங்கு போனாலும் அங்கு இருக்கும் மக்களை அப்சர்வேஷன் செய்வது அதிகம். சில சமயம் அவர்கள் பேசிகொள்பவதிலும் இருந்து கூட எனக்கு கதாபாத்திரங்கள் கிடைக்கும். கதாபாத்திரங்கள் கிடைக்க மலைப் பிரதேச மக்களை எல்லாம் சந்தித்து இருக்கிறேன். சிலசமயம் அவர்களுடன் நேரம் தெரியாமல் உரையாடியும் இருக்கிறேன்.

எம் மகனில் அப்பா
மெட்டி ஒலியில் மாணிக்கம் ஒரு அப்பாவாக ஆகும்போது, அந்த குடும்பம் எப்படி இருக்குமோ, எப்போதும் எரிந்து விழுந்து பேசும் அப்பாவிடம் அந்த குடும்பம் என்ன பாடு படும் என்று யோசிச்சதனின் விளைவுதான் எம் மகன் படம்.. அப்போ பொம்பளைப் பிள்ளைகளை சுத்தமாகப் பிடிக்காத ஆண்களும் இருந்தார்கள், ரொம்ப சிக்கனம் பார்க்கும் சரோவின் தங்கச்சி புருஷனுக்கு ரெட்டை பெண் குழந்தைகள் பிறந்தது எல்லாமே நான் சந்தித்த கதா பாத்திரங்கள்தான்.

நாதஸ்வரம் சீரியல்
இதுவரைக்கும் நான் செய்தவைகளில் மறக்க முடியாதது நாதஸ்வரம் சீரியலில் கின்னஸ் ரெக்கார்டு செய்ததுதான்.எனக்கு சன் டிவி அத்தனை உதவிகளையும் செய்தாலும் ,யாராவது ஒருத்தர் சொதப்பினால் மொத்தமும் கெட்டுவிடும். எனக்குத்தான் கெட்ட பேர் வரும்னு ஒவ்வொருத்தரும் பார்த்து பார்த்து வேலைகளை செய்தார்கள். முடிச்ச உடனே மவுலி சார் கண்ணீரோடு கட்டி புடிச்சுக்கிட்டார்.பூ விலங்கு மோகன் சார், மலர் எல்லாரும் ரொம்ப எமோஷனல்.

ரெண்டாம் பாகம் நாதஸ்வரம்
ரெண்டாம் பாகம் எடுக்கணும்னு ஆசைப்பட்டா நாதஸ்வரம் சீரியல் ரெண்டாம் பாகம் எடுப்பேன். காரணம் பார்த்தால மெட்டி ஒலியில் நடித்தவர்கள் இப்போ மாறிப்போயிட்டாங்க. நாதஸ்வரம் சீரியலில் நடித்தவர்கள் அப்படியே இருப்பதால், அதை இன்னும் இழுக்கும் அளவுக்கு கதை நிறைய இருக்கிறது.
கல்யாண வீடு கதை பெரிசுங்க.எனக்கு கல்யாணம் நடக்கவே காலங்களாகும்.

எனது கல்யாணம் பிறகுதான்
அதுவும் என் கல்யாணம் நடந்த பிறகுதான் கதை இன்னும் சூடு பிடித்து அதிகமாக நீளும். என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த புராஜக்ட் நிறைய எஃபெகட் போட்டு கதையை ரெடி பண்ணி இருக்கேன்.இதை மிக சக்ஸஸா முடிச்சுட்டு,என் மனைவிக்காக ஒரு படம் பண்ணுவேன்.அதில் இதுவரை நான் நடிக்கும் எண்ணமில்லை, இனி எப்படியோ என்கிறார்.
கல்யாண வீடு சீரியலில் அடுத்த மாசம் ஒரு கின்னஸ் ரெக்கார்டு பண்ணலாம்னு தயார் செய்துகிட்டு இருக்கோம். ஆனால், இது நாதஸ்வரம் மாதிரி இல்லாமல் வேறு மாதிரியான கின்னஸ் ரெக்கார்டு என்று சொல்கிறார் திருமுருகன். கின்னஸ் சாதனையைச் செய்வது திருமுருகன் சீரியல்களுடன் ஒட்டிப் பிறந்தது என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை.