Don't Miss!
- News
சென்னையில் பிப்ரவரி 1,2 தேதிகளில் ஜி20 கல்விப் பணிக் குழுவின் முதலாவது கூட்டம்
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
கோர்ட் சீன் மூலம் என்ட்ரி கொடுக்கும் புதிய கண்ணம்மா....பாரதி கண்ணம்மாவில் இன்று முதல்
சென்னை : விஜய் டிவி.,யில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. சீரியல்களின் டிஆர்பி.,யில் அதிக ரேட்டிங் பல மாதங்களாக பெற்று வரும் சீரியல் இது தான். 2019 ம் ஆண்டு முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
அப்படியே
எங்க
மனசுல
உள்ளதை
சொல்லிட்டீங்க
அக்கா...
பிக்பாஸ்
தாமரையை
கொண்டாடும்
நெட்டிசன்ஸ்!
இந்த சீரியலில் லீட் ரோலான கண்ணம்மா கேரக்டரில் ரோஷினி ஹரிபிரியன் நடித்து வந்தார். இவரின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. பலரின் ஃபேவரைட் கேரக்டராக கண்ணம்மா இருந்து வருகிறார். இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி விலகுவதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு பதில் கண்ணம்மா கேரக்டரில் நடிக்க வினுஷா தேர்வு செய்யப்பட்டார்.

ப்ரோமோக்களில் ரோஷினி
இருந்தாலும் பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட்கள் மற்றும் ப்ரோமோக்கள் ரோஷினியை வைத்தே ஒளிபரப்பப்பட்டு வந்தன. இதனால் ரோஷினி, பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகவில்லை. அவரே தொடர்ந்து கண்ணம்மா கேரக்டரில் நடிக்க போகிறாரா என கேள்வி எழுந்தது. அதோடு புதிய கண்ணம்மா என்ட்ரி எப்போது எனவும் பலர் கேட்டு வந்தனர்.

ரோஷினிக்கு ஃபேர்வெல் பார்ட்டி
இந்நிலையில் ரோஷினி ஹரிபிரியனுக்கு பாரதி கண்ணம்மா செட்டில் சமீபத்தில் ஃபேர்வெல் பார்ட்டி நடத்தப்பட்டது. இதில் கேக் வெட்டிய ரோஷினி, செட்டில் இருந்த அனைவருக்கும் கேக் ஊட்டி விட்டு, அன்புடன், உணர்ச்சிபூர்வமாக விடைபெற்று சென்றார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி செம வைரலானது. சினிமாவில் பெரிய அளவில் வர ரோஷினிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

புதிய கண்ணம்மாவின் என்ட்ரி
இதற்கிடையில் புதிய கண்ணம்மாவான வினுஷாவை வைத்து மொத்த கதையையும் மீண்டும் எடுத்துள்ளனர். இந்த காட்சிகள் அடங்கிய ப்ரோமோ வெளியிடப்பட்டு வந்தது. இந்நிலையில் பாரதி கண்ணம்மாவில் புதிய கண்ணம்மா இன்று முதல் என்ட்ரி கொடுக்க போகிறாராம். இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோவில் வினுஷாவே இடம்பெற்றுள்ளார்.

டீல் பேசும் செளந்தர்யா
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது, பாரதி, கண்ணம்மாவிற்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஆனால் டைவர்ஸ் தர முடியாது என கண்ணம்மா உறுதியாக இருக்கிறார். மற்றொரு புறம், இந்த டைவர்ஸ் விவகாரத்தில் கண்ணம்மாவிற்கு உதவ கூடாது என செளந்தர்யாவிடம் சொல்கிறார் பாரதி. கண்ணம்மாவிற்கு தான் உதவி செய்யாமல் இருக்க வேண்டுமானால், நீயும் வெண்பாவை ஜாமினில் எடுக்கவோ அவளின் கேசை எடுத்து நடத்தவோ கூடாது. அவளுக்கு உதவி செய்யாமல் இருக்க வேண்டும் என பாரதியிடம் டீல் பேசுகிறார் செளந்தர்யா.

கோர்ட் சீனில் என்ட்ரி
இந்த நிலையில் பாரதி - கண்ணம்மாவின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக அனைவரும் காத்திருக்க, கோர்ட் அறைக்குள் மாஸாக என்ட்ரி கொடுக்கிறார் புதிய கண்ணம்மா. இனி கண்ணம்மாவாக இவர் என்ற கார்டுடன் இவர் அறிமுகம் செய்யப்படுகிறார். இந்த என்ட்ரியையும், புதிய கண்ணம்மாவையும் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.