»   »  2012 டிவி ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்களின் ரசனையும்…

2012 டிவி ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்களின் ரசனையும்…

By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil

தொலைக்காட்சிகள் என்றாலே சீரியல்கள்தான் என்றிருந்த நிலையை மாற்றி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்களை கவரமுடியும் என்று நிரூபித்த நிகழ்ச்சிகள் இருக்கின்றன.

இந்த ரியாலிட்டி ஷோக்களில் நடனம்,பாட்டு போன்றவை ரியலாக இருந்தாலும் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க சில செல்லச் சண்டைகள், சில டிராமாக்கள் என இடம் பிடித்தன.

கடந்த சில ஆண்டுகளாகவே ரியாலிட்டிஷோக்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தாலும் இந்த ஆண்டு புதிதாக பல ரியாலிட்டி ஷோக்கள் தொடங்கப்பட்டுள்ளன. சில நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தன. விஜய் டிவியில்தான் அதிகம் ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகின்றன. இதற்கு கிடைத்த வரவேற்பினை பார்த்து சன் டிவியிலும் புதிதாக சில ரியாலிட்டி ஷோக்கள் தொடங்கப்பட்டன. 2012ம் ஆண்டு தொலைக்காட்சிகளில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்திய, ரசிகர்களைக் கவர்ந்த ரியாலிட்டி ஷோக்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

சத்யமேவஜெயதே

சத்யமேவஜெயதே

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் தொகுத்து வழங்கிய சூப்பர் ஹிட் நிகழ்ச்சி ‘சத்யமேவ ஜெயதே' ஸ்டார் ப்ளஸ், டிடி ஆகிய டிவிக்களில் இந்தியில் ஒளிபரப்பானாலும் விஜய் டிவியில் தமிழாக்கம் செய்து ஒளிபரப்பப் பட்டது. இந்த நிகழ்ச்சி உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு துறையிலும் நடைபெறும் ஊழலை வெளிச்சம் போட்டு காட்டியது. பெண் சிசுக்கொலை, கருக்கொலை, கவுரவக்கொலைகளை வெளிப்படுத்தியதனால் இந்த ஆண்டில் நாடு முழுவதும் பரபரப்பை பற்ற வைத்த ரியாலிட்டி ஷோ இது. அதுக்குள்ள முடிச்சிட்டாங்களே என்று ரசிகர்களை பேச வைத்த நிகழ்ச்சி இது. விரைவில் சீசன் 2 தொடங்கும் என்று கூறி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நடிகர் அமீர்கான்.

கிச்சன் சூப்பர் ஸ்டார்

கிச்சன் சூப்பர் ஸ்டார்

சின்னத்திரை கலைஞர்களை பாடவைத்தாகிவிட்டது. நடனமாடவைத்தாகி விட்டது அடுத்து அவர்கள் என்ன செய்தால் ரசிக்க வைக்கலாம் என்று யோசித்த விஜய் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கடைசியில் அவர்களை சமைக்க வைத்துவிட்டார்கள். பலவித கட்டப்போட்டிகளைக் கடந்து கடைசியில் வெல்பவர்களுக்கு கிச்சன் சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்குகின்றனர்.

இந்த சமையல் நிகழ்ச்சிக்கு சஞ்சீவ் கபூர், செஃப் தாமோதர் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று சிறந்த சமையல் வல்லுநர்களை தேர்ந்தெடுக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை நடிகர் சுரேஷ் தொகுத்து வழங்குகிறார். இறுதிச்சுற்றில் வெற்றி பெற்று கிச்சன் சூப்பர் ஸ்டார் பட்டத்தை வெல்லப்போகும் பிரபலத்திற்கு 10 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும்.

சன் சூப்பர் குடும்பம்

சன் சூப்பர் குடும்பம்

சின்னத்திரை கலைஞர்களுக்கு சீரியலில் அழுதுவிட்டு போகமட்டுமே தெரியும் என்று ரசிகர்கள் நினைத்துவிடக்கூடாது. அவர்களுக்கு பாடத்தெரியும், நன்றாக நடனமாடுவார்கள், மிமிக்ரி செய்வார்கள், கமெடி செய்வார்கள் என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி சன் சூப்பர் குடும்பம். 2012ம் ஆண்டில்தான் தொடங்கப்பட்டது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் டிவி சீரியல்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் சீரியலின் பெயரை குடும்பமாக கொண்டு அதே பெயருடன் களம் இறங்கும் சுவாரஸ்யமான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் மீனா, சுகன்யா, இசை அமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.

பிரபலங்கள் சமைக்கும் ‘ஸ்டார் கிச்சன்’

பிரபலங்கள் சமைக்கும் ‘ஸ்டார் கிச்சன்’

ஜெயா டிவியில் இந்த ஆண்டில் புதிதாக தொடங்கிய ரியாலிட்டி ஷோ `ஸ்டார் கிச்சன்' . இந்நிகழ்ச்சியில், வெள்ளித்திரை, சின்னத்திரைக் கலைஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சமையல் செய்கின்றனர். சமையல் டிப்ஸ் கூறுகின்றனர். இந்த நிகழ்ச்சியை சின்னத்திரை தம்பதியர் லதா ராவ், ராஜ்குமார் தொகுத்து வழங்குகின்றனர்.

சூப்பர் சிங்கர் டி 20

சூப்பர் சிங்கர் டி 20

சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர் சீனியரில் சிறப்பாக பாடிய பாடகர்களைக் கொண்டு புதியதாக சூப்பர் சிங்கர் டி 20 என்ற இசை நிகழ்ச்சியை இந்த ஆண்டு விஜய் டிவியில் தொடங்கியுள்ளனர். 6 அணியினர் 42 பாடகர்கள் என களை கட்டியுள்ளது சூப்பர் சிங்கர் டி 20. வெள்ளை, பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு மஞ்சள் என ஆறு அணியாக பிரிக்கப்பட்டு சூப்பர் சிங்கரில் பங்கேற்ற பாடகர்கள் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். இசைபோட்டி நிகழ்ச்சியில் இது சற்றே மாறுபட்டுள்ளது. ,

சொல்வதெல்லாம் உண்மை

சொல்வதெல்லாம் உண்மை

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சி ‘சொல்வதெல்லாம் உண்மை.' நிகழ்ச்சியில் பங்கேற்ற காதல் ஜோடியை தாக்கியது. தொலைக்காட்சி பணியாளர்களை தாக்கியது என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போனது இந்த நிகழ்ச்சி. செய்திவாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி தொகுத்து வழங்கினார். அவரது கட்டைப்பஞ்சாயத்து நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அப்புறம் ஏனோ அவர் திடீரென்று விலகிவிட இப்போது திரைப்பட நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கடந்த நவம்பரில் இருந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

சின்னத்திரையில் நடிகர் சூர்யா முதன்முறையாக நிகழ்ச்சித்தொகுப்பாளராக களம் இறங்கிய நிகழ்ச்சி ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி'. ஆரம்பத்தில் என்னவோ சுவாரஸ்யமாகச் சென்றாலும் படிப்படியாக வரவேற்பு குறைந்துவிட்டது என்னவோ உண்மைதான். அதனால்தான் ஆரம்பித்த சூட்டோடு விரைவில் முடித்துவிட்டார். இப்போது சீசன் 2 தொடங்குவதற்காக போட்டி அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர் விஜய் டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்

ரோஜாவின் லக்கா கிக்கா

ரோஜாவின் லக்கா கிக்கா

நடிகை ரோஜா தொகுப்பாளராக களம் இறங்கிய நிகழ்ச்சி லக்கா கிக்கா. ஜீ தமிழ் சேனலில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. சரியான கேள்விகளுக்கு பதில் சொன்னால் அதன் அடிப்படையில் பரிசாகப் பணம் கிடைக்கும். சின்னத்திரை கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்கின்றனர். நடிகை ரோஜாவின் உடை அலங்காரம், அவருடைய பேச்சு ரசிகர்களை கவர்ந்துள்ளது. நிகழ்ச்சித் தொடங்கும் போது போடுகிறாரே ஒரு ஆட்டம் அதற்காகவே இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறார்களாம்.

சன் எக்ஸ்பிரஸ்

சன் எக்ஸ்பிரஸ்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சன் எக்ஸ்பிரஸ் 2012ம் ஆண்டில்தான் புதிதாக தொடங்கப்பட்டது. ஊர் ஊராக சென்று நேயர்களை நேரடியாக சந்தித்து அவர்கள் விரும்பும் பொருளை கொடுப்பது இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் தீபக் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை சொன்னால் போதும் அவர்களுக்கான பொருள் பரிசாக கிடைத்துவிடும். இது ரசிகர்களின் ரசனைக்குரிய நிகழ்ச்சியாகி வருகிறது.

ரசிகர்களுக்கான ஷோ ஆயிரத்தில் ஒருவன்

ரசிகர்களுக்கான ஷோ ஆயிரத்தில் ஒருவன்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘ஆயிரத்தில் ஒருவன்' நிகழ்ச்சி பிற தொலைக்காட்சி கேம்ஷோக்களை விட சற்றே வித்தியாசமானது என்ற கருத்து ரசிகர்களிடையே உள்ளது. இதனை திரைப்பட நடிகை அபர்ணா இயக்கி வருகிறார். முதலில் நடிகர் சுப்பு பஞ்சு இதனை தொகுத்து வழங்கினார். இப்போது இரண்டாவது சீசனை நடிகை மந்த்ரா தொகுத்து வழங்குகிறார்.

‘கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி’

‘கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி’

மக்களை கோடீஸ்வரர்களாக மாற்றவேண்டும் என்ற ஆர்வத்தில் சன் டிவியில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி இது. இதனை நடிகர் ரிஷி சுவாரஸ்யமாகத்தான் தொகுத்து வழங்கினார். ஆனால் ஆரம்பித்த சில மாதங்களிலேயே டிஆர்பி ரேட்டிங் குறைந்து போனதால் கடையை சீக்கிரமே மூடிவிட்டார்கள். 2012ம் ஆண்டில் முடிவுக்கு வந்த நிகழ்ச்சி இது.

மானாடமயிலாட சீசன் 8

மானாடமயிலாட சீசன் 8

கலைஞர் டிவியில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்றும் நடன நிகழ்ச்சி இது. 2012ம் ஆண்டு 8 வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த சீசனில் நடிகர் பிரசாந்த் நடுவராக இடம்பெற்றுள்ளார். அவர்களுடன் வழக்கம் போல டான்ஸ் மாஸ்டர் கலா, குஷ்பு ஆகியோர் நடுவர்களாக இருந்து கலைஞர்களின் நடனத்திற்கு மதிப்பெண் போடுகின்றனர். இந்த சீசனில் சின்னத்திரை கலைஞர்களுடன் தொலைக்காட்சி நேயர்களும் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர் என்பது சிறப்பம்சம்.

லிட்டில் மாஸ்டர்ஸ் சீசன் 4

லிட்டில் மாஸ்டர்ஸ் சீசன் 4

ஜெயா டிவியில் இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘லிட்டில் மாஸ்டர்ஸ் சீசன் 4 , இந்த ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழகத்தின் மூன்று முக்கிய நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘டாப் 20 குட்டி நடனப் புயல்கள்" அவர்களின் நடன ஆசிரியருடன், நடன பள்ளி நண்பர்களுடன் பங்கேற்று நடனமாடுகின்றனர். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களான நடிகர்கள் பிரிதிவ்ராஜ், ராகவ் இவர்களோடு பிரபல நடன இயக்குனர் ரகுராம் மற்றும் திரைப்பட நடிகை மும்தாஜ் நடுவர்களாக இணைந்துள்ளனர்.

குட்டிச் சுட்டீஸ்

குட்டிச் சுட்டீஸ்

சிறுவர்களுக்கான ரியாலிட்டி ஷோ பல இருந்தாலும் சன் டிவியில் 2012ம் ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட ‘குட்டிச் சுட்டீஸ்' அவர்களை அதிகம் இம்சிக்காத நிகழ்ச்சி. இதனை இமான் அண்ணாச்சி தொகுத்து வழங்குகிறார். மழலைகளின் பேச்சும், குறும்புகளும் ரசிக்கத்தூண்டினாலும் குழந்தைகளிடம் அண்ணாச்சி கேட்கும் கேள்விகளும், அதற்கு குழந்தைகள் சொல்லும் பதிலும் சற்றே அதிகப்பிரசங்கித்தனமாக உள்ளது என்ற விமர்ச்சனம் எழுந்தது.

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா

நடன ரசிகர்களைக் கவர்ந்த ரியாலிட்டி ஷோ ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?'. விஜய் டிவியில் ஓர் ஆண்டுக்கும் மேலாக நடைபெற்ற நடன நிகழ்ச்சி கடந்த நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றவருக்கு தன்கையால் 40 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசளித்து பட்டம் வழங்கினார் நடனப்புயல் பிரபுதேவா.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Reality shows is one such segment of television which gave name and fame not only to celebrities but also to the ordinary people. Here are some best reality shows of India

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more