»   »  பாம்பை மேலே போட்டு… எலியை கடிக்க விட்டு… நடுங்க வைத்த 2014 டிவி ரியாலிட்டி ஷோக்கள்!

பாம்பை மேலே போட்டு… எலியை கடிக்க விட்டு… நடுங்க வைத்த 2014 டிவி ரியாலிட்டி ஷோக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அழுது வடியும் டிவி சீரியல்களைப் பார்த்து போரடித்துப்போன ரசிகர்களுக்கு ஆறுதல் தரக்கூடிய வகையில் ஒளிபரப்பானவைதான் டிவி ரியாலிட்டி ஷோக்கள்.

அந்த ரியாலிட்டி ஷோக்களில் சில நடுங்க வைத்தன. சில ரியாலிட்டி ஷோக்கள் கிளர்ச்சியூட்டின. சில ரியாலிட்டி ஷோக்கள் ரசிக்க வைத்தன. உடம்பை இளைக்க வைக்கும் ரியாலிட்டி ஷோக்கள் கூட ஒளிபரப்பானது.

டி.ஆர்.பிக்காக எப்படி எல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறாங்கப்பா என்று ரசிகர்கள் நினைக்கும் வகையில் ஏதாவது புதிது புதிதாக ரியாலிட்டி ஷோக்கள் 2014ஆம் ஆண்டு ஒளிபரப்பானது.

தில் தில் தில்

தில் தில் தில்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான தில் தில் தில் டப்பிங் ரியாலிட்டி ஷோதான். அக்சய் குமார் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி நேரடி தமிழ் ரியாலிட்டி ஷோ இல்லை என்றாலும் அழகான பெண்கள்மீது பாம்பு, பல்லி, தேள், அனைத்தையும் போட்டு அவர்களை அச்சுறுத்துவதோடு பார்ப்பவர்களையும் அச்சுறுத்த வைக்கிறது. சீசன் 1 முடிந்து சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. ஞாயிறு மதிய நேரத்தில் ரிலாக்ஸ் ஆகலாம் என்று ரியாலிட்டி ஷோ பார்த்தால் டென்சனை கூடுதலாக்குகிறது இந்த தில் தில் தில்.

டான்ஸ் தமிழா டான்ஸ் - லிட்டில் மாஸ்டர்ஸ்

டான்ஸ் தமிழா டான்ஸ் - லிட்டில் மாஸ்டர்ஸ்

சுட்டிக்குழந்தைகள் வீட்டில் கையை காலை ஆட்டி குதித்தாலே பெரியவர்களுக்கு உற்சாகம் பொங்கும். அவர்கள் நடனப் போட்டி நிகழ்ச்சியில் பங்குபெற்றால் கேட்கவா வேண்டும். ஜீ டிவியில் சிம்ரன் தயாரித்து வழங்கும் டான்ஸ் தமிழா டான்ஸ் லிட்டில் மாஸ்டர் நிகழ்ச்சி இந்த ஆண்டின் சிறந்த குழந்தைகள் நடன நிகழ்ச்சியாக அமைந்தது.

ஒல்லி பெல்லி

ஒல்லி பெல்லி

குண்டு உடம்பை ஒல்லியாக்குவது எப்படி என்று எத்தனையோ டிப்ஸ் கொடுக்கின்றனர் சேனல்களில் ஆனால் அதை ரியாலிட்டி ஷோவாக நடத்தி அசத்தியது விஜய் டிவி. இதை பார்த்து எத்தனை பேர் கையை காலை உடைத்துக்கொண்டார்களோ தெரியாது.

சத்ய மேவ ஜெயதே சீசன் 3

சத்ய மேவ ஜெயதே சீசன் 3

அமீர்கான் நடத்தும் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் 3வது சீசன் 2014ல் ஒளிபரப்பானது. முதல் சீசனில் இருந்த விறுவிறுப்பும், அதற்கு ஊடகங்கள் அளித்த வரவேற்பும் சீசன் 3யில் இல்லை என்றே கூறலாம். இந்த சீசனில் தீபிகா படுகோனே, பரினிதி சோப்ரா போன்ற பிரபல பாலிவுட் திரை நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.

சூப்பர் சிங்கர்ஸ்

சூப்பர் சிங்கர்ஸ்

பாத்ரூம் பாடகர்களையும் மேடையேற்றி அவர்களுக்குள் இருந்த திறமையை வெளிக்கொணரும் இசை நிகழ்ச்சிகள் தமிழகத்தின் அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பாகிறது. சன் டிவியில் சன் சிங்கராகவும், ஜெயா டிவியில் ஜெயா சூப்பர் சிங்கராகவும், விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆகவும் ஒளிபரப்பாகிறது. இதில் சன்டிவியில் ஸ்வேதா ஸ்ரீ, விஜய் டிவியின் ஸ்பூர்த்தி ஆகியோர் பாடும் பாடல்கள் யுடுயூப்பில் லட்சக்கணக்கான ரசிகர்களால் ரசிக்கப்பட்டுள்ளது.

லக்கா கிக்கா சீசன் 2

லக்கா கிக்கா சீசன் 2

நடிகையாக இருந்து டிவி தொகுப்பாளினியாக மாறிய ரோஜா 225 எபிசோடுகள் லக்கா கிக்கா நடத்தினார். கொஞ்சம் பிரேக் விட்ட அவர் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று ஆந்திரா அரசியலில் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஜீ தமிழ் டிவியில் தற்போது லக்கா கிக்கா சீசன் 2 நிகழ்ச்சியை புதுப்பொலிவுடன் நடத்தி வருகிறார். தெலுங்கு கலந்த அவரது தமிழையும் ரசிகர்கள் ரசிக்கத்தான் செய்கின்றனர்.

பேக் டூ ஸ்கூல்

பேக் டூ ஸ்கூல்

பிரபலங்களை குழந்தைகளாக மாற்றி பள்ளி பருவத்திற்கு அழைத்துச்செல்லும் நிகழ்ச்சி இது. பள்ளி குழந்தைகளுடன் பிரபலங்களும் விளையாடுவதுதான் பேக் டூ ஸ்கூல் நிகழ்ச்சியின் சிறப்பம்சம். ஞாயிறு இரவுகளில் பேசி பேசியே மல்லுக்கட்டும் நீயா நானா கோபிநாத், மதிய நேரத்தில் குழந்தைகளை வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். குழந்தைகள் நிகழ்ச்சி அனைத்து ரசிகர்களை கவரத்தானே செய்யும்.

மானாட மயிலாட சீசன் 9

மானாட மயிலாட சீசன் 9

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் மானாட மயிலாட இந்த ஆண்டு 9வது சீசன் ஒளிபரப்பானது. கலா மாஸ்டருடன், பிருந்தா, நமீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். மச்சான் உங்க கெமிஸ்ட்ரி சூப்பர் என்று கூறி மார்க் போடும் நமீதாவை பார்க்கவே ரசிகர்கள் இருக்கின்றனர். இதோ பத்தாவது சீசனையும் தொடங்கிவிட்டார் கலா.

நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்

நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்

இது ரியாலிட்டி ஷோ என்பதை விட கொஞ்சம் கொடுமையான கேம்ஷோ என்றே கூறலாம். மாடு பொம்மை மீது ஏற்றிவிட்டு, சுற்றும் சக்கரத்தில் கட்டி விட்டு, கயிறு கட்டி தொங்கவிட்டு பங்கேற்பாளர்களை கொடுமைபடுத்துவார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சியிலே இது கொஞ்சம் கொடுமையானதுதான்.

ஸ்பிலிட்ஸ் வில்லா சீசன் 7

ஸ்பிலிட்ஸ் வில்லா சீசன் 7

எம்.டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான ஸ்பிலிட்ஸ் வில்லா இந்த ஆண்டு 7 வது சீசன் ஒளிபரப்பானது. கவர்ச்சிப் புயல் சன்னிலியோன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதால் இளசுகளிடம் கூடுதல் வரவேற்பினை பெற்றது என்றே கூறலாம்.

ஜோடி நம்பர் 1 விஜய் டிவி

ஜோடி நம்பர் 1 விஜய் டிவி

விஜய்டிவியின் நடன ரியாலிட்டி ஷோ ஜோடி நம்பர் 1 இப்போது 8வது சீசனை எட்டியுள்ளது. சங்கீதாவும், ரம்பாவும் நடுவர்களாக அமர்ந்திருக்க களைகட்டுகிறது நடன நிகழ்ச்சி. ஆரம்பமே அமர்களமா இருக்கே என்பது போல முதல் சில வாரங்களிலேயே சண்டை போட்டு கோபித்துக் கொண்டு போகும் டிராமாவை ஆரம்பித்து விட்டனர். அப்புறம் எப்படி டி.ஆர்.பியை ஏற்றுவதாம்.

நம்ம ஊரு ருசி புதுயுகம்

நம்ம ஊரு ருசி புதுயுகம்

ஒவ்வொரு ஊரைச் சேர்ந்த உணவின் ருசியையும், மறைந்து வரும் பாரம்பரிய உணவுகளையும், நம் இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள புதுயுகம் நடத்திய வித்தியாசமான முயற்சிதான் "நம்ம ஊரு நம்ம ருசி - சமையல் சக்கரவர்த்தி" நிகழ்ச்சி.

தமிழகத்தில் 8 ஊர்களில் போட்டி நடத்தி 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதிப்போட்டியில் "சமையல் சக்கரவர்த்தியாக" ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தொலைக்காட்சி வாசகர்களே பங்கு பெற்ற ரியாலிட்டி ஷோ என்பதால் இல்லத்தரசிகளின் வரவேற்பையும் பெற்றது.

கிச்சன் சூப்பர் ஸ்டார் சீசன் 3

கிச்சன் சூப்பர் ஸ்டார் சீசன் 3

சமையல் நிகழ்ச்சியை ரியாலிட்டி ஷோ போல நடத்த முடியும் என்பதற்கு உதாரணம்தான் கிச்சன் கில்லாடிகள். இப்போது சீசன் 3 ஒளிபரப்பாகிறது. சின்னத்திரை பிரபலங்கள் சமைப்பதை பார்ப்பதே ரசிகர்களுக்கு சந்தோசம்தான்.

இந்த சீசனில் கிச்சன் சூப்பர் ஸ்டார் பட்டத்தைப் பெறுவதில் பிருந்தா தாஸ், ப்ரியங்கா தேஸ் பாண்டே, நந்தினி மற்றும் சிங்கப்பூர் தீபன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. மிகப் பெரிய அளவில் ஆடம்பரமாக நடக்கும் இச்சமையல் ரியலிட்டி ஷோ சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

English summary
Reality shows are those shows which are based on the real occurrences with no scripted story. Indian Audience is fond of TV soaps but when it comes to reality shows, the enthusiasm for the show increases.
Please Wait while comments are loading...