»   »  தர லோக்கலாக இறங்கி அடிக்கும் பிக் பாஸ்: காரணம் தெரிய வேண்டுமா?

தர லோக்கலாக இறங்கி அடிக்கும் பிக் பாஸ்: காரணம் தெரிய வேண்டுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஆர்பிக்காக பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் கெட்டவர்கள் போன்றே காட்டி வருகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சண்டை போடுவது, யாரையாவது அழ வைப்பது, புறம் பேசுவது என்று நெகட்டிவான விஷயங்களை மட்டுமே செய்கிறார்கள்.

அவர்களை சொல்லி குற்றம் இல்லை. சொல்லிக் கொடுத்தபடி செய்கிறார்கள்.

பரணி

பரணி

அவர் பாட்டுக்கு இருந்த பரணி அனைவரும் டார்கெட் செய்த ஜூலிக்கு ஆதரவு கொடுத்தார். திருப்பி அடிக்குமாறு ஐடியா கொடுத்தார். உடனே அவரை பொம்பள பொறுக்கி ரேஞ்சுக்கு பேசி வெளியே அனுப்பிவிட்டனர்.

ஆரவ்

ஆரவ்

பிக் பாஸ் நிகழ்ச்சியை பல இளம்பெண்கள் பார்க்க காரணம் ஆரவ். இளம் பெண்களின் மனம் கவர்ந்துவிட்டார் ஆரவ். அவரை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொருத்தருடனும் கோர்த்துவிட்டு பிளே பாய் போன்று காட்டுகிறார்கள்.

குண்டு ஆர்த்தி

குண்டு ஆர்த்தி

குண்டு ஆர்த்தி என்றாலே அவர் நடித்த காமெடி காட்சிகள் நினைவுக்கு வந்த காலம் மலையேறிவிட்டது. பிக் பாஸ் வீட்டில் ஒரு ரவுடி போன்று நடந்து கொள்கிறார் ஆர்த்தி. அவரை நெட்டிசன்கள் திட்டித் தீர்க்கிறார்கள்.

சினேகன்

சினேகன்

பாடல் ஆசிரியர் சினேகனை புறம் பேசும் பொல்லாதவராக்கிவிட்டார் பிக் பாஸ். ஜூலி போலியாக நடிக்கிறார், ஓவியா திமிர் பிடித்தவர் என்று காட்டுகிறார்கள்.

டிஆர்பி

டிஆர்பி

டிஆர்பி படுத்தும் பாட்டால் பிக் பாஸ் பல தில்லாலங்கடி வேலை பார்க்கிறார். பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களின் நெகட்டிவ் பக்கத்தை மட்டுமே காட்டுகிறார்கள்.

English summary
Big Boss is concentrating on negativity to boost the TRP of the reality show. Netizens are trolling Big Boss programme regularly.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil