TTF வாசனுக்கு மாமன் மகளுடன் கல்யாணம்.. TTF-இன் காதலி ஜோயா இல்லையா? அவங்க காதல் கதை எல்லாம் பொய்யா கோபால்!
சென்னை: சர்ச்சை மன்னனும் யூடியூபருமான டிடிஎஃப் வாசன் திருமணம் குறித்த தகவல்கள் தான் இணையத்தில் பரபரப்பான பேசு பொருளாக மாறியுள்ளது. அவர் தனது திருமணத்திற்கு முன்னதாக தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக வீடியோ எல்லாம் வெளியிட்டிருந்தார். தற்போது அவரும் அவரது காதலியும் மாமன் மகளும் மாலையும் கழுத்துமாக இருக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இணையவாசிகள் பலரும், அப்படி என்றால் ஜோயா உங்கள் காதலி இல்லையா என்று கேட்டு வருகிறார்கள்.
சின்னத்திரை பிரபலமான ஜோயா விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கிக் கொண்டு இருந்தவர். அவர் தற்போது சமையல் எக்ஸ்பிரஸ் என்ற நிகழ்ச்சியில் பல ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இப்படி இருக்கையில், இவரும் டிடிஎஃப் வாசனும் தான் காதலிக்கிறார்கள் என்று எல்லாம் தகவல்கள் முன்னர் வெளியானது. அதே நேரத்தில் டிடிஎஃப் வாசனுக்கு ஸ்பெஷலாக பிறந்தநாள் எல்லாம் கொண்டாடினார் ஜோயா.

ஜோயாவுடன் நெருக்கம்: கேரளாவைச் சேர்ந்தவரான இவர் சினிமாவிலும் நடிக்க முயற்சித்து வருகிறார். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸில் ஜோயா போட்டியாளராக களமிறங்க உள்ளார் என்று எல்லாம் பேச்சுக்கள் வந்தது. இப்படி இருக்கையில் இவரும் டிடிஎஃப் வாசனும் காதலிக்கிறார்கள் என்றும் கிசுகிசுக்கள் பரவியது. இதற்கு இருவர் தரப்பில் இருந்தும் மறுப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால் பலரும் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டார்கள். அவ்வப்போது இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எல்லாம் வெளியானது. இருவரும் இணைந்து இருக்கும் புகைப் படங்களைப் பார்க்கும்போது பலரும் அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்றுதான் நினைத்துக் கொண்டார்கள்.
திருமண வீடியோ: ஆனால் டிடிஎஃப் வாசன் தான் தனது மாமன் மகளை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று தெரிவிக்கும் போது, அவரது மாமன் மகளும் தானும் 5 ஆண்டுகள் காதலித்ததாக தெரிவித்தார். தற்போது அவர் மாலையும் கழுத்துமாகவும் உள்ள வீடியோ வெளியாகியுள்ளது. தனது காதல் மனைவியின் முகத்தை அவர் இன்னும் வெளியிடவில்லை. இவர்தான் தனது காதல் மனைவி என தனது ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லை. இப்படி இருக்கும்போது, பலரது கேள்வியும் ஜோயா குறித்துதான் உள்ளது.

பொய்யா கோபால்: மேலும் பலர் ஜோயாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிடிஎஃப் வாசனுக்கு அவர் ஏதாவது பதிவிட்டுள்ளாரா என்றும் தேடி வருகிறார்கள். ஜோயாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்படியான எந்த போஸ்டும் இல்லை. மேலும், மாமன் மகளை 5 ஆண்டுகள் காதலித்து வந்தார் என்றால், ஜோயாவுடன் அவர் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களுக்கு என்ன அர்த்தம் என்றும் கேட்டு வருகிறார்கள். அப்படினா நீங்களும் ஜோயாவும் காதலித்தது பொய்யா கோபால் என கேட்டு வருகிறர்கள்.


Click it and Unblock the Notifications











