பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகும் ஹீரோ பாரதி... புதிய பாரதியாக வர போறது யார் தெரியுமா?

சென்னை : விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ஹீரோ கேரக்டரான பாரதி ரோலில் நடிக்கும் அருண் பிரசாத் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

Recommended Video

Bharathi Kannamma சீரியலில் இருந்து விலகும் Arun, இனி பாரதியாக வரபோறது யார் தெரியுமா?

விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. பிரைம் டைமான இரவு 9 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பயங்கர விறுவிறுப்பாக, பல ட்விஸ்ட்களுடன் கதை சென்று கொண்டிருக்கிறது. மலையாளத்தில் ஒளிபரப்பான கருத்தமுத்து சீரியலின் ரீமேக்காக இருந்தாலும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு வரவேற்பு அதிகம்.

பாரதி கண்ணம்மா சீரியல்

பாரதி கண்ணம்மா சீரியல்

டாக்டரான பாரதியின் காதல் மனைவி கண்ணம்மா. பாரதியை ஒரு தலையாக காதலித்து, அதனால் பல சதி வேலைகள் செய்து பாரதியையும் கண்ணம்மாவையும் பிரிக்கிறார் டாக்டர் வெண்பா. 8 வருடங்களாக பிரிந்திருக்கும் பாரதி - கண்ணம்மாவை ஒன்று சேர்க்க அவரது குடும்பத்தினர்கள் எடுக்கும் முயற்சி தோல்வி அடைய, தற்போது அவர்களின் இரட்டை குழந்தைகள் அந்த முயற்சியில் இறங்கி உள்ளனர். இதற்கிடையில் ஜெயிலுக்கு போவதில் இருந்து தப்பிக்க தனது அம்மா சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார் வெண்பா.

அடுத்தடுத்து விலகும் பிரபலங்கள்

அடுத்தடுத்து விலகும் பிரபலங்கள்

இப்படி, அடுத்து என்ன நடக்கும் என்ற சஸ்பென்சோடு கதை நகர்கிறது. இந்த சீரியலுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருந்தாலும், இந்த சீரியலில் முக்கிய கேரக்டர்களில் நடித்த நடிகர் - நடிகைகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வருவது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. இந்த சீரியலில் அகில் கேரக்டரில் நடித்த அகிலன், அஞ்சலி கேரக்டரில் நடித்த கண்மணி மனோகரன், டைட்டில் ரோலான கண்ணம்மா ரோலில் நடித்த ரோஷினி ஹரிபிரியன் என அடுத்தடுத்து பலரும் மாற்றப்பட்டனர்.

என்னது பாரதியும் விலகுகிறாரா

என்னது பாரதியும் விலகுகிறாரா

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக இந்த சீரியலில் லீட் ரோலாக பாரதி ரோலில் நடிக்கும் அருண் பிரசாத்தும் இந்த சீரியலில் இருந்து விலக போகிறாராம். ஏற்கனவே கண்ணம்மா ரோலில் நடித்த ரோஷினிக்கு பதிலாக விதுஷா நடிப்பதையே ரசிகர்களால் ஏற்க முடியாமல் பலர் இந்த சீரியல் பார்ப்பதையே நிறுத்தி விட்டார்கள். இந்நிலையில் பாரதியையும் மாற்ற போகிறார்களாம்.

புதிய பாரதி இவர் தானா

புதிய பாரதி இவர் தானா

விரைவில் அருண் பிரசாத்திற்கு பதிலாக புதிய பாரதி என்ட்ரி கொடுக்க போகிறாராம். இனி பாரதி ரோலில் அருண் பிரசாத்திற்கு பதிலாக பிரபல சீரியல் நடிகரும் நடிகர் விஜய்யின் நண்பருமான சஞ்சீவ் நடிக்க போகிறாராம். இவர் சமீபத்தில் நடந்த பிக்பாஸ் சீசன் 5 ல் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்பப்பட்டார். ஆரம்பத்தில் சன் டிவியில் திருமதி செல்வம், கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான சஞ்சீவ், தற்போது பாரதி கண்ணம்மா சீரியலிலும் என்ட்ரி கொடுக்க போகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X