சின்னத்திரையின் லேட்டஸ்ட் காதல் ஜோடி இவங்க தான்...வெட்கத்துடன் திருமணத்தை அறிவித்த கண்மணி
சென்னை : சின்னத்திரை லேட்டஸ்ட் காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் நடிகர் நவீன்குமார் மற்றும் செய்திவாசிப்பாளர் கண்மணி சேகர் தான். இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்துள்ளனர்.
கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் இதயத்தை திருடாதே சீரியல் மூலம் பிரபலமானவர் நவீன்குமார். இவரும் டிவி செய்திவாசிப்பாளர் கண்மணி சேகரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக சோஷியல் மீடியாக்களில் சமீபத்தில் வதந்தி பரவியது. இது பற்றி சோஷியல் மீடியாவில் பதிலளித்த நவீன், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என பிக்பாஸ் ஸ்டைலில் பதில் அளித்திருந்தார்.

கிசுகிசுக்கப்பட்ட ரீல் ஜோடி
இதனால் இவர்களின் திருமணம் பற்றிய தகவல் தான் காட்டுத் தீ போல் சோஷியல் மீடியாக்களில் பரவிவந்தது. அதே சமயம் இதயத்தை திருடாதே சீரியலில் நவீனுடன் இணைந்து நடித்த ஹீமா பிந்துவிற்கும் நவீனுக்கும் காதல் இருப்பதாக தான் பல நாட்களாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் இனி நிஜத்திலும் ஜோடி சேர போவதாக தகவல்கள் வெளியாகின.

நவீனின் ஒப்பன் டாக்
இந்த வதந்திகளை மறுத்ததுடன், இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நவீன். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பதிலளித்த நவீன், பெரும்பாலும் என்னை சந்திக்கும் ரசிகர்கள் என்னிடம் கேட்கும் ஒரே கேள்வி, நீங்கள் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்று தான். ஆரம்பத்தில் இது சீரியலுக்கான ப்ரோமோவாக கூட இருக்கட்டும் என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டேன்.

விரைவில் சந்தோஷமான செய்தி
ஆனால் ஒரு கட்டத்தில் அது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்க துவங்கியது. வதந்திகளையும், கிசுகிசுக்களையும் நான் சாதாரணமாக எடுத்துக் கொள்வேன். ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் அப்படி எடுத்துக் கொள்வார்கள் என சொல்ல முடியாது. ஒவ்வொரு முறையும் நான் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எனது பெற்றோர் எனக்கு பெண் பார்த்து வருகிறார்கள். விரைவில் ரசிகர்களுக்கு சந்தோஷமான விஷயம் சொல்கிறேன் என்றார்.

திருமணத்தை அறிவித்த ஜோடி
இந்நிலையில் நவீன் மற்றும் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர் ஆகிய இருவரும் தாங்கள் திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்துள்ளனர். கண்மணி, சன் டிவியில் செய்திவாசிப்பாளராக உள்ளார். இவர்கள் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். ஜுன் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. தங்களுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கண்மணி வெட்கத்துடன் மீடியாக்களிடம் சொன்னது செம வைரலாகி வருகிறது. இவர்களுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications