ஹீரோயின் ஆக விரும்பும் டிவி நடிகை ஆனந்தி
சினிமாவில் நடித்து பிரபலமானவர்கள் ஒரு கட்டத்திற்குப் பின்னர் சின்னத்திரையை தேர்ந்தெடுப்பார்கள். அதேசமயம் சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக அறிமுகம் ஆனவர்களின் கனவு சினிமாவாகத்தான் இருக்கும்.
சின்னத்திரையில் சீரியல், ரியாலிட்டி நடனஷோ, ஆங்கர் என பன்முகத்திறமை காட்டி வரும் ஆனந்தி தற்போது சினிமாவில் ஹீரோயினாக டூயட் பாடி வருகிறார். ஜோடி நிகழ்ச்சியில் நாகேந்திர பிரசாத்துடன் பிரச்சினை அதனால் விலகல், சீரியலுக்கு பிரேக் என்றெல்லாம் பரபரப்பாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஆனந்தியே இதைப்பற்றி பிரபல வார இதழ் ஒன்றில் பேசியுள்ளார் படியுங்களேன்.

கோயம்புத்தூர் பொண்ணு
அம்மா, அப்பா, தம்பி எல்லோரும் கோவையில் இருக்கின்றனர். அம்மா டான்ஸ் டீச்சர் என்பதால் எனக்கும் இயற்கையாகவே நடனம் வருகிறது. இப்போது எம்.எஸ்.சி இன்பர்மேசன் டெக்னாலஜி படித்துக் கொண்டே சூட்டிங் போய் வருகிறேன்.

மானாட மயிலாட
கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனம் ஆடியிருக்கிறேன். விஜய் டிவியில் ஜோடி ரியாலிட்டி ஷோவில் நாகேந்திர பிரசாத்துடன் நடனம் ஆடியிருக்கிறேன்.

காதல் எல்லாம் இல்லை
நாகேந்திரபிரசாத்துடன் நடனம் ஆடும் போது பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதனால் எலிமினேட் ஆனதாகவும் கூறப்படுகிறது. இதனால் மிகவும் சிரமப்பட்டதாக கூறும் ஆனந்தி எங்களுக்கு இடையே காதல் என்றெல்லாம் கூறப்படுவது சுத்தப் பொய் என்கிறார்.

சீரியலுக்கு பிரேக்
கனாக்காணும் காலங்கள், கார்த்திகைப் பெண்கள் என இரண்டு சீரியலோடு தற்போது பிரேக் சொல்லிவிட்டார் ஆனந்தி, காரணம் இப்போது சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்திருப்பதுதானாம்.

பிளாக் பாண்டியுடன்
பிரபல காமெடி நடிகர் பிளாக் பாண்டியுடன் கனாக்காணும் காலங்கள் சீரியலில் நடித்த ஆனந்தி தற்போது மறுபக்கம் படத்தில் அதே பிளாக் பாண்டியுடன் நடித்து வருகிறார்.

டான்ஸ் தமிழா டான்ஸ்
ஜீ தமிழ் சேனலில் சிம்ரனின் டான்ஸ் தமிழா டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார் ஆனந்தி. நடன நிகழ்ச்சியில் ஆடிய அனுபவம்தான் இந்த வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது என்கிறார்.


Click it and Unblock the Notifications











