»   »  திருமணமான ஓராண்டுக்குள் நடிகை 'மைனா' நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை

திருமணமான ஓராண்டுக்குள் நடிகை 'மைனா' நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சரவணன் மீனாட்சி டிவி தொடர் புகழ் நந்தினியின் கணவர் கார்த்திக் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சரவணன் மீனாட்சி டிவி தொடரில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆனவர் நந்தினி. மைனா மறக்க முடியாத மைனாவாக நடிப்பில் அசத்தியவர்.

டிவி தொடர் தவிர்த்து டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார்.

திருமணம்

திருமணம்

நந்தினிக்கும் அவரது சென்னையில் ஜிம் வைத்துள்ள ஜிம் மாஸ்டர் கார்த்திக்கிற்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி மதுரையில் திருமணம் நடைபெற்றது.

தற்கொலை

தற்கொலை

கார்த்திக், நந்தினி சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தனர். திருமணமாகி ஒரு ஆண்டு கூட நிறைவடையாத நிலையில் கார்த்திக் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகராறு

தகராறு

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறால் மனம் உடைந்து கார்த்திக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

போலீஸ்

போலீஸ்

போலீஸார் கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
Gym master Karthik, husband of TV serial actress Nandini has commited suicide by consuming poison.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil